Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பி.இ.எம்.எல். பங்கு நமது இலக்கு விலையை அடையும் என்று நினைத்திருந்தோம். ஆனால், சந்தை போக்கு காரணமாக அந்தப் பங்கு நமது இலக்கு விலையை அடையவில்லை. வரும் வாரங்களில் கவனித்து லாபத்தை அறுவடை செய்யுங்கள். இதை இவ்வளவு அழுத்திச் சொல்லக் காரணம், கடந்த வாரத்தில் எஜுகாம்ப் பங்கினை நமது வாசகர் ஒருவர் புக் செய்யத் தவறி விட்டார். அதன்பிறகு அந்தப் பங்கு இறங்கி விட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரு பங்கினை வாங்குவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்தப் பங்கினை சரியான சமயத்தில் விற்பது.  கடந்த ஐந்து வருடத்தில் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் இல்லாமல், ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் சாமர்த்தியமாகச் செயல்படா விட்டால், தங்களது முதலீட்டை இழக்க வேண்டி இருக்கும்.

அப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த போர்ட்ஃபோலியோவை உருவாக்கி இருக்கிறேன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

முதலில், நமது முதலீடுகளை அனைத்து துறைகளிலும் பரவலாக்குவது. இன்ஃப்ரா, ஷிப்பிங், பெட்ரோலியம், பவர், உரம் பெயின்ட் போன்ற பல்வேறு துறைகளில் நமது முதலீட்டை பரவலாக்கி இருக்கிறோம்.

முதலீட்டை பரவலாக்கு வதைச் சரியான முறையில் முதலீடு செய்வது. அதையும் நாம் செய்து வருகிறோம். ஒரு பங்கில் பத்தாயிரம் ரூபாயை முதலீடு செய்ய முடிவெடுத்தால் கூட மொத்தமாக முதலீடு செய்யாமல் ஒரு சமயத்தில் 2,500 ரூபாயை மட்டுமே முதலீடு செய்கிறோம்.

லாபத்தை புக் செய்து பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளாவிட்டால், சந்தை இறங்கும்போது முதலீடு செய்ய பணம் இருக்காது. இதனால், சந்தையில் நடக்கும் வர்த்தகத்தை நாம் பார்த்துக்கொண்டு 'பேப்பர் பிராஃபிட்’ மட்டுமே செய்ய வேண்டி இருக்கும். மீண்டும் சொல்கிறேன், முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் லாபத்தை அறுவடை செய்வது.

இனி நம் போர்ட்ஃபோலியோவுக்கு வருவோம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த வாரம் நான் வாங்கச் சொல்லி இருந்த மூன்று பங்குகளை வாங்கி இருக்க முடியும். அதையும் சேர்க்கும்போது நமது போர்ட்ஃபோலியோவில் மொத்தம் 14 பங்குகள் இருக்கிறது. (எஜுகாம்ப் பங்கில் லாபத்தை புக் செய்துவிட்டதால் அந்தப் பங்கு நம் பட்டியலில் இல்லை.) இதில் 9 பங்குகள் நாம் வாங்கிய விலையைவிட குறைவாக இருக்கிறது. இதிலும்கூட 2 பங்குகள்  ஒரு சதவிகிதத்துக்குள் சரிந்து இருப்பதால் அதை நாம் சரிவு என்று கருதத் தேவை இல்லை.

தற்போதைய நிலையில் அதிகபட்ச லாபத்தில் ஏ.பி.ஜி. ஷிப்யார்டு (9.7%) மற்றும் பி.இ.எம்.எல். (8%) பங்குகள் இருக்கின்றன. அதிகபட்ச நஷ்டத்தில் சின்டெக்ஸ்(-14.7) மற்றும் வோல்டாஸ் (-10.46) பங்குகள் இருக்கின்றன.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் நமது போர்ட்ஃபோலியோ 740 ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது. எஜுகாம்ப் மூலம் கிடைத்த லாபத்தைச் சேர்க்கும் பட்சத்தில் 234 ரூபாய் நஷ்டம் என்ற நிலையில் இருக்கிறது.

ஏற்கெனவே 14 பங்குகள் இருப்பதால், இந்த வாரம் இரண்டு பங்குகளை மட்டும் பரிந்துரை செய்கிறேன். சரியான விலை வரும்போது அந்தப் பங்குகளை வாங்கவும். இதையும் வாங்கும்போது நமது பங்குகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துவிடும். அதிகபட்சம் 20 பங்குகள் என்பதுதான் நாம் எடுத்துக்கொண்ட அளவு. இதனால், புதிய பங்குகளை வாங்குவது பற்றி யோசிப்பதைவிட ஏற்கெனவே இருக்கும் பங்குகளை சராசரி செய்ய முடியுமா என்று வரும் வாரங்களில் பார்ப்போம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism