Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

Published:Updated:
டிரேடர்ஸ் பக்கங்கள்

கடந்த இதழில் காளையின் சீற்றம் சற்றே குறையலாம் என்றும்; ஒரு ஷார்ப்பான மைனர் கரெக்ஷன் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்; இதை நினைவில் வைத்துக்கொண்டு, லாங் போகும் டிரேடர்கள் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருந்தோம். அதன்படியே ஷார்ப் கரெக்ஷன் செவ்வாய் அன்று வந்தது. இருந்தபோதும், புதனன்று மீண்டும் ஏற எத்தனித்த நிஃப்டி, 5135 என்ற லெவலை சிறிதளவு  தாண்டி குளோஸானது. ஆனால், வால்யூம் வழக்கத்தைவிடக் குறைவாக இருந்ததால் ஏற்றத்தை தொடர முடியாமல் மீதி இரண்டு நாட்களிலும் இறங்கவே செய்தது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரும் வாரத்தில் நடைபெற உள்ள சம்பவங்களை மனதில் வைத்துப் பார்த்தால் 5040 லெவல்களில் சப்போர்ட் மற்றும் 5175 லெவல்களில் ரெசிஸ்டன்ஸ் என ஒரு சிறிய லெவல்களுக்குள் சிக்கிக் கொண்டதுபோல் டெக்னிக்கல்கள் காட்டுகிறது. 23-ம் தேதி யூரோப்பியன் கவுன்சில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்று செய்திகள் வருகிறது.  ரிசர்வ் வங்கியின் பாலிசி ரிவியூவ் (அக்டோபர் 25 - பொருளாதார திருப்பம்), அன்றே எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி (அக்டோபர்-25), தீபாவளி டிரேடிங் (அக்டோபர் 26- சென்டிமென்ட்), என சரவெடிகளைப் பற்றவைக்க தயாராகும் வாரத்தில் சந்தையில் சாஸ்திரத்திற்கென்று வெகுவாய் குறைந்த அளவில் வியாபாரம் செய்வதே நல்லது. ஒரு மோசமான சூழ்நிலையில் 4700 லெவலை கட்செய்து கீழே போனால் மீண்டும் நிஃப்டி 4300-ஐ நோக்கிய பயணத்தை தொடர ஆரம்பித்து விட்டது என்றும், 5175 லெவலை தாண்டி வால்யூமுடன் போனால் அதிகபட்சமாக 100 அல்லது 125 வரை மட்டுமே மேலே செல்ல வாய்ப்புள்ளதென்றும் சொல்லலாம். ரிஸ்க் ரிவார்டு என்று பார்த்தால் ரிஸ்க் அதிகம் இருப்பதால் அளவைக் குறைத்து வியாபாரம் செய்வது மிகமிக நல்லது.
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism