ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அந்த நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனாலும் சம்பாதிக்கும் லாபத்தினாலும் ஏற்றம் பெற்றால், அதை எந்த வகையிலும் சந்தேகிக்கத் தேவையில்லை. அதை இயற்கையான பங்கு விலை ஏற்றம் என்றே சொல்லலாம்.

ஆனால், எந்தக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லாமல் ஒரு பங்கு தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே இருந்தால்....? அதாவது, ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருக்கும் போதும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றமடைகிறது என்றால் அந்தப் பங்கு செயற்கையாக விலை ஏற்றப்படு கிறது என்றுதான் அர்த்தம்.

இப்படி செயற்கையாக விலை ஏற்றப்பட்ட பங்குகளில் முதலீடு செய்பவர்கள், ஏற்றத்தில் இருக்கும் போது வெளியே வந்துவிட்டால் தப்பிப்பார்கள். இன்னும் விலை உயரும் என்று காத்திருந்தால், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல் எப்போது வேண்டுமானாலும் செயற்கை யாக விலை உயர்த்தப்பட்ட இந்தப் பங்குகளின் விலை சடசடவென இறங்கி படுபாதாளத்துக்கு சென்றுவிட வாய்ப்புண்டு. அப்படி அகப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை, அதன்பிறகு எழுந்தி ருப்பதே இல்லை என்பதுடன் பல நிறுவனங்கள் சந்தையி லிருந்தே வெளியேறிவிடுகின்றன. அப்படிப்பட்ட சில நிறுவனங் களை உதாரணங்களாகப் பார்ப்போம். இந்த நிறுவனங்கள் உதாரணங்களே தவிர, பரிந்துரைகள் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.

வியான் இண்டஸ்ட்ரீஸ் (2,156%)

ஹிந்துஸ்தான் சேஃப்டி கிளாஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், முன்னணி இந்தி நடிகை ஒருவர் வாங்கியபின்னர் வியான் இண்டஸ்ட்ரீஸாகப் பெயர் மாற்றம் பெற்றது. தற்போது கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் பொருட்களைத் தயாரித்து வருகிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் அதன் வருவாய் ரூ. 33 லட்சம், ஈட்டிய லாபம் ரூ. 7 லட்சம்.ஆனால் கடந்த 2014 செப்டம்பரில் பட்டி யலிடப்பட்ட இந்த நிறுவனப் பங்கின் விலை 2015 அக்டோபர் வரையிலான காலத்தில் 2,156% விலை உயர்ந்தது.

செப்டம்பர் 8, 2014 அன்று ரூ.10.60-ஆக இருந்த பங்கின் விலை அக்டோபர் 29, 2015-ல் ரூ.239-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் 2015 நவம்பரில் 330 - 360 ரூபாய் வரை உயர்ந்தது. அதிலிருந்து இன்றுவரை ஏற்ற இறக்கம் இல்லாமல் அந்த நிலையிலேயே தொடர்கிறது. விலை ஏற்றப்பட்ட காலகட்டத் தில் வர்த்தகமாகிய வால்யூம் எண்ணிக்கையும் சிங்கிள் டிஜிட் அளவுக்கு குறைவாகவே இருந்துள்ளது.

குமார் வயர் குளோத் தயாரிப்பு நிறுவனம் (858%)

பார்மா, டெக்ஸ்டைல் மற்றும் பில்டர்ஸ் துறைகளுக்கு வயர்-மெஷ் தயாரிப்புகளை உருவாக்கி வரும் இந்த நிறுவனத்தின் மார்க் கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.9.69 கோடி. 2014-15-ம் நிதி ஆண்டில் இது ஈட்டிய வருமானம் ரூ.75 லட்சம். இது 2013-14-ம் நிதி ஆண்டைக் காட்டிலும் 20% குறைவு. மேலும், 2015 மார்ச் மாத காலாண்டில் ரூ.17 லட்சம் நஷ்டம் கண்டது. 2000-ல் பட்டியலிடப் பட்ட இந்த நிறுவனம் 2015 பிப்ரவரிக்கு முன்பு வரை கிட்டதட்ட வர்த்தகமே நடக்காத நிலையில் தான் இருந்தது. பிப்ரவரி 11, 2015 அன்று ரூ.1.16-ஆக இருந்த இந்த நிறுவனப் பங்கின் விலை ஜூலை 14, 2015-ல் ரூ. 11.11-ஆக உயர்ந்துள்ளது. அதன் பின்னர் 2015 அக்டோபரில் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்ந்தது. அதன் பிறகு அந்த நிலையிலேயே தொடர்கிறது.

வாரத் வென்சர்ஸ் (788%)

வாரத் வென்சர்ஸ் என்பது ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம். குடிநீர், சாஃப்ட்வேர் டெவலப் மென்ட், இண்டஸ்ட்ரியல் பப்ளிகேஷன் மற்றும் கன்சல்டன்சி போன்றவற்றில் தனது முதலீடுகளைப் போட்டு தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம் 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.87.14 கோடி வருமானம் பதிவு செய்திருந்தது. ஆனால், 2014-15 -ம் நிதி ஆண்டில் ரூ.48 லட்சம் இதன் வருமானமாகப் பதிவு செய்திருந்தது. ஆனால், 2015 ஏப்ரல் முதல் பிப்ரவரி 2016 வரையிலான காலத்தில் பங்கின் விலை 788% உயர்ந்துள்ளது. ஏப்ரல் 17, 2015-ல் ரூ.2.5-ஆக இருந்த இந்தப் பங்கின் விலை பிப்ரவரி 19,2016 அன்று ரூ.22.20-ஆக உயர்ந்தது. தற்போது மிக மந்தமாகவே வர்த்தகமாகி வருகிறது.

(செயற்கையாக விலை ஏற்றப் படும் பங்கு நிறுவனங்களை அட்டவணையில் பாருங்கள்!)

இப்படி செயற்கையாக விலையேற்றப்படும் பங்குகள் பெரும்பாலும் பிஎஸ்இ-ல் மட்டுமே பட்டியலிடப்பட்டவை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. சில நிறுவனங்களின் பங்குகள் எப்படி செயற்கையாக விலையேற்றப்படுகின்றன, அவற்றை எப்படி அடையாளம் காண்பது உள்ளிட்ட கேள்விகளை தமிழ்நாடு பங்கு முதலீட்டாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பங்குச் சந்தை நிபுணருமான ஷியாம் சேகரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“பங்குச் சந்தையில் ஏதோ ஊர்பேர் தெரியாத பங்குகளின் விலைகள் மளமளவென ஏறி, பல மடங்கு அதிகரித்து, பின்பு திடீரென ஒரு நாள் விலைச் சரிவை சந்திப்பது ஒன்றும் அபூர்வமான விஷயமல்ல. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நம் இந்திய சந்தையில் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. இது எப்படி சாத்தியம் ஆகிறது எனில், யாரும் அறியாத சிறு நிறுவனங்களில் பொது மக்கள் வசம் இருக்கும் பெருவாரியான பங்குகளை ஒரு சில முதலீட்டாளர் களும், தரகர்களும் இணைந்து வாங்கிவிடுகின்றனர். மக்கள் வசம் உள்ள பங்குகளை வாங்கிய பிறகு, விலையை ஏற்றுவது இவர்களுக்கு மிகவும் எளிதாகி விடுகிறது.

ஒரு பங்கைத் தொடர்ந்து வாங்கும் ஒருவரால், ஒரு தருணத்தில், அந்தப் பங்கில் இனி விற்க தங்களைத் தவிர யாரிடமும் பங்குகள் இல்லை என்கிற நிலை ஏற்படும். அப்படி ஏற்பட்டபின், அந்தப் பங்கின் விலையை ஏற்றி வாங்கத் தொடங்குவார்கள். இப்படி தொடர்ந்து விலை ஏற ஏற, அந்தப் பங்குகள் பலரின் கவனத்தை ஈர்க்கிறது. எல்லோரும் ஏறும் பங்கை வாங்க ஆசைப்பட, திடீரென்று ஒரு நாள் அதிகமான பங்குகளை லாவகமாக விற்றுவிடு கிறார்கள். அதோடு அந்தப் பங்கு விலை சரியத் தொடங்குகிறது.இடையில் ஓரிரு நாள் ஏறினாலும், தொடர்ந்து மீண்டும் விலை சரிந்துகொண்டே இருக்கும். சரிய சரிய இந்த விலை மாற்றங்களின் காரணம் அறியாத பிற முதலீட்டாளர்கள் அதை வாங்கிவிட்டு, விலை ஏறுமென்று காத்திருப்பார்கள். இறுதியில் நஷ்டமே மிஞ்சும்.

இதற்கு அடிப்படை காரணங் கள் இரண்டு உள்ளன. ஒன்று, முதலீட்டாளர்களின் பேராசை. இரண்டு அதை பயன்படுத்திக் கொள்ளும் சிலரின் பணபலம். இத்தகைய பங்குகளில் முதலீடுகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

ஒரு பங்கை நிச்சயம் வாங்கக் கூடாது என்று எப்படி தெரிந்து கொள்வது? எதை வாங்கக் கூடாது என்பதற்கு முதலீடு சார்ந்த ஆழமான அளவீடுகள் உள்ளன. அவற்றை எல்லோரா லும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், ஒரு எளிமை யான முறையும் இருக்கிறது. ஒரு முதலீட்டாளர், தான் செய்யும் முதலீடுகளை சென்செக்ஸ், நிஃப்டி மற்றும் பிஎஸ்இ 500 சார்ந்த பங்குகளில் மட்டுமே செய்ய வேண்டும். ஒருவேளை சில பங்குகளை இண்டெக்ஸில் இருந்து வெளியேற்றினால் அவற்றை தயவு செய்து விற்று விடுவது நல்லது. ஒரு பங்கை இண்டெக்ஸுக்குள் கொண்டு வருவதற்கும் வெளியேற்றுவதற் கும் காரணங்கள் உண்டு. அவற்றை அறிந்திருக்கவில்லை என்றாலும், அந்த நிகழ்வைச் சார்ந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது எளிது” என்றார்.

இது போன்ற செயற்கையாக விலையேற்றப்படும் பங்குகளில் இருந்து முதலீட்டாளர்கள் சிக்காமல் தங்களைக் காத்துக் கொள்வது என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம். விளக்கமாகச் சொன்னார் அவர்.

“சமீபத்திய மூன்று மாதங்களில் விலை ஏற்றமடைந்த பங்குகளை கவனியுங்கள். இந்தப் பங்குகளில் மூன்று மாதங்களுக்குமுன் முதலீடு செய்திருந்தால் இன்று 100% முதல் 300% வரை லாபம் கிடைத்திருக்கும். இவ்வளவு குறுகிய காலத்தில் ஆதாயப் பலன்கள் இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, அனுபவம் இல்லாத முதலீட்டாளர்களுக்கு உடனே நம்பிக்கை வந்துவிடுகிறது. ஒரு பங்கில் முதலீடு செய்து லாபம் பார்த்துவிட்டால், நாம் சரியான பங்கில்தான் முதலீடு (பங்குகளை தேர்ந்தெடுக்கும் உத்தியை அறிந்து கொண்டதாக நினைத்துக்கொண்டு) செய்திருக் கிறோம் என்று கருதி, மேலும் பல புதிய பங்குகளில் முதலீடு செய்யத் துவங்குவதுண்டு.

சாதாரணமாகவே, பங்கு களைத் தெரிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லையென்றாலும், ஏற்கெனவே ஆதாயத்தின் ருசியைக் கண்டுள்ளதால், தைரியமாக புதிய ரிஸ்க் எடுக்க முயல்வது பங்குச் சந்தையில் வாடிக்கையான செயலாகும். நஷ்டம் ஏற்பட்டாலும் பரவா யில்லை, ஏற்கெனவே லாபம் பார்த்திருக்கிறோமே என்கிற தைரியத்தில் ரிஸ்க் எடுக்க ஒரு சில முதலீட்டாளர்கள் களத்தில் இறங்குவார்கள். ஆனால், இது போன்ற முடிவுகள் பெரும்பாலும் பெருத்த நஷ்டத்தையே ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

முதலீட்டாளர்களில் பலருக்கு, ரூ.10-க்குக் கீழாக வர்த்தகமாகும் பங்குகளில் ஒரு வித அலாதிப் பிரியம்

இருக்கிறது. இந்தப் பங்குகளை அதிக எண்ணிக்கை யில் வாங்கி, ரூ.1 அதிகரித்தாலும் விற்று அதிக லாபம் பார்த்து விடலாம் என சந்தையில் இறங்கு பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பாக அந்த நிறுவனம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது நல்லது.

என்னென்ன காரணங்களால் பங்கு விலைகள் தடாலடியாக ஏற்றம் பெற்றுள்ளன, ஊகத்தின் அடிப்படையிலா அல்லது நிறுவனங்களின் செயல்பாடு களில் முன்னேற்றம் கண்டுள்ளதா, அப்படிப்பட்ட செயல்பாடுகள் நன்றாக இருக்குமெனில் எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்குமா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். அப்படி ஆராய்ந்து பார்த்தால், கொஞ்சம் நிறுவனத்தின் செயல்பாடுகளா லும், கொஞ்சம் சர்வதேச காரணங்களாலும், கொஞ்சம், மூலப்பொருட்களின் விலைச் சரிவினாலும் மற்றும் சில பங்குகள் அரசாங்கத்தின் துறை சார்ந்த நடவடிக்கைகளினாலும், அதிகரித்திருப்பது தெரிய வரும். இவற்றையெல்லாம்விட ஊகத்தின் அடிப்படையில்தான் மிகப் பெரிய அளவில் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. எனவே, ஒரு பங்கின் விலை தடாலடியாக உயரும்போது உஷாராக இருக்க வேண்டும்.

இது மாதிரியான பங்குகளில் முதலீடு செய்து பெரிய அளவில் ஆதாயம் கிடைத்தாலும், எந்த நேரத்தில் வாங்குகிறோம், விற்கிறோம் என்பதைப் பொருத்தே ரிட்டர்ன் இருக்கும். ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தினால் சந்தையில் திடீர் சரிவு ஏற்படுமேயாயின் மீண்டும் இதே விலையைப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. எனவே, ஒரு பங்கின் விலை எதனால் ஏற்றம் அடைகிறது என்று அவசியம் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் சிறிய மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பங்குகள்தான் இத்தகைய சூழ்நிலைகளைச் சந்தையில் உருவாக்குகின்றன. எனவே, சிறிய மூலதனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்:

1 ) பங்குச்சந்தையில் வர்த்தகமா கும் பங்குகள் A, B, S, T, XT, & Z போன்ற குறியீடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் Z வகையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள், பங்குச் சந்தை களின் நிபந்தனைகளை நிறைவேற்றாதவை ஆகும்.

T வகை பங்குகள் ‘டிரேட் டு டிரேட்’ எனப்படும். அதாவது, பங்குகளை வாங்கினால், அதே தினத்தில் விற்க முடியாது அல்லது பங்குகளை விற்றால் அதே தினத்தில் வாங்க முடியாது. அடிப்படைக் காரணங்கள் ஏதும் இல்லாமல், பங்கு விலைகளில் அதிகப்படியான ஏற்ற, இறக்கங்களை தவிர்க்கும் பொருட்டு இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிறு முதலீட்டாளர்கள் இந்த வகை பங்குகளில் முதலீடு செய்வது நிச்சயம் கூடாது.

2) முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் சந்தை வல்லுனர்கள் இத்தகைய பங்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை. சில நேரங்களில் நல்ல நிறுவனங்களையும் இந்த நிலையில் அடையாளம் காண்பது கடினம். இருந்தபோதி லும் பிற்காலத்தில் இதே நிறுவனங்கள் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகளைக் காணும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

3) நிறுவனத்தின் மொத்த பங்குகளே குறைவானது என்பதால், புழக்கத்தில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனால் வாங்குவதற்கும், விற்பதற்கும் காலதாமதமாகும். ஒருவேளை, சிறுமுதலீட்டாளர் தவறாக முதலீடு செய்ததாக உணர்வதற்குள், விலை இறங்கிவிடும். அப்போது பங்கை விற்று வெளியேறுவது மிகவும் கடினம். காரணம், விற்க நினைத்தாலும் வாங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

4) சிறு நிறுவனங்களின் கடந்த கால செயல்பாடுகளைப் பற்றி அறிவது கடினம். இதனால் வருங்காலத்திய நடவடிக்கை களை ஊகிப்பதும் அவ்வளவு எளிதல்ல. எனவே, அதன் கடந்த கால செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

5) புரமோட்டர்ஸ் என்று சொல்லக்கூடிய நிறுவனத்தை துவக்கியவர்கள் எத்தனை சதவிகிதப் பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு காலாண்டும் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகிதம் கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பதை கவனிக்க வேண்டும். கடன் எவ்வளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதிக கடன் சுமை இருந்தால், வருகிற லாபம் வட்டி செலுத்தவே செலவிடப்படும்.

6) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இத்தகைய பங்குகளில் ஆர்வம் காட்டாமல் இருக்க முக்கிய காரணம், அதிக அளவிலான பங்கு வர்த்தகம் (எண்ணிக்கை) நடைபெறாததே!

ஏன் சிறிய நிறுவனங்கள் காணாமல் போகின்றன?

1) நிறுவனத்தின் நிர்வாகத் திறமை, பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது, தொழில் சார்ந்த அனுபவம் குறைவாக இருத்தல் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படும்போது அதிலிருந்து மீண்டு எழுவது பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் கடினமாக இருக்கும்.
2) சிறிய நிறுவனங்களுக்கு கடன் சுமையை சமாளிப்பது, பணி ஆணைகள் குறைவாக இருக்கும் காலத்தைக் கடப்பது, தொழிலாளர் ஊதியப் பிரச்னைகள் மற்றும் சந்தைப் பொருட்களின் விலை அதிகரிப்பது போன்றவற்றை அணுகுவதில் சிக்கல்கள் இருக்கும்.

3) ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே கவனம் செலுத்தும் போது, ஏற்கெனவே அதே துறையில் இருக்கிற பெரிய நிறுவனங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். அதுவும் சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவும்போது சிறிய நிறுவனங்களுக்குப் போட்டியை சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

4) சர்வதேச போட்டிகளாலும் சிறிய நிறுவனங்களுக்குப் பிரச்னைதான். ஏனென்றால், பல்வேறு நாடுகளின் நாணய மதிப்புகளில் உள்ள வித்தியாசங்கள், இந்திய நாணயங்களோடு ஒப்பிடுகையில் சாதக, பாதகங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இப்படி பல பிரச்னைகளைக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதை சிறு முதலீட்டாளர்கள் கூடிய மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால், இத்தகைய நிறுவனங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதும் கடினம். பத்திரிகைகளில் இந்த நிறுவனங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வராது. எனவே, முடிந்தவரை, பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து, தங்கள் முதலீட்டை பத்திரமாக பாதுகாப்பது முதன்மையானது” என்றார் ஷியாம் சுந்தர்.

இனியாவது செயற்கையாக விலை உயர்த்தப்படும் பங்குகளைக் கண்டறிந்து, அவற்றில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பதுடன், நல்ல அடிப்படை உள்ள பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்வோம்!