நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து கடந்த மே 29 அன்று மயிலாடுதுறையில் ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் கேரளா பிராந்தியத் தலைவர் எஸ்.ஹரீஷ் பேசியபோது, “உலகின் பெரிய பணக்காரர்கள் கடினமாக உழைக்க வில்லை; ஸ்மார்ட்டாக உழைத்தார்கள். அவர்கள் பணம் பெருக அவர்கள் பணத்தையே உழைக்க வைத்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம், வாரன் பஃபெட். இவர் தன் 11-வது வயதில் முதலீடுகளைத் தொடங்கினார். இருப்பினும், தான் தாமதமாக முதலீடுகளைத் தொடங்கியதாக சில கூட்டங்களில் வருத்தப்பட்டிருக்கிறார். நாமெல்லாம் 20, 30 வயதைக் கடந்த பின்னும் முதலீடு செய்வது குறித்து கவலைப்படாமலே இருக்கிறோம். வளமான எதிர்காலம் அமைய வேண்டுமெனில், நாம் உடனடியாக முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், “மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. வங்கியில் நாம் நம்பிக்கையோடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரைதான் உத்தரவாதம் உண்டு. இந்த உண்மை தெரியாமலே நம்மில் பலரும் அந்த ரிஸ்க்கை எடுக்கிறோம்.

மியூச்சுவல் ஃபண்டில் என்ன மாதிரியான ரிஸ்க் இருக்கிறது என்பதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே சொல்லித்தான் விற்கின்றன. நாமோ அந்த ரிஸ்குகளை புரிந்துகொள்வதற்கு பதிலாக அதிலிருந்து விலகி நிற்கவே நினைக்கிறோம். இது தவறு. ரிஸ்க்கை அறிந்து, நீண்ட காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை அடையலாம்’’ என்றார்.

நிறைவாக வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் விளக்கமாக விடையளித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் இந்தக் கூட்டம் தங்களுக்கு உத்வேகம் அளித்திருப்பதாகச் சொன்ன வாசகர்கள், இதுபோன்ற கூட்டங்களை அடிக்கடி தங்கள் ஊரில் நடத்த அன்புக் கட்டளை இட்டனர்.

படங்கள்: ஜி.சதீஷ்குமார்.