மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யலாம் என வானிலை அறிக்கை செய்தியைப் படித்த ஷேர்லக் உஷாராக மழை கோட்டைக் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரை வரவேற்று, சூடான ஏலக்காய் டீ தந்தபடி பேசத் தொடங்கினோம்.

‘‘டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 52 வார உச்சத்தைத் தாண்டி இருக்கிறதே?’’ என நமது முதல் கேள்வியைக் கேட்டோம்

‘‘ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் விற்பனை மே மாதத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததே இதற்கு காரணம். மேலும், இந்தக் குழுமத்தின் இன்னொரு நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் ரூ.1,400 கோடிக்கு ஐபிஓ வர இருக்கிறது. இது போதாதா, அந்தப் பங்கின் விலை ஏற...?’’ என்று நம்மிடம் திரும்பக் கேட்டார்.

‘‘கடந்த 9 மாதத்தில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை இறக்கம் கண்டிருக்கிறதே?’’ என்றோம் கொஞ்சம் வருத்தத்துடன்.

‘‘ரீடெய்ல் செலவு குறைவு, எரிசக்தி மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வருமானம் குறைந்துள்ளதால் அவை தொழில்நுட்பத்தை மேம்படுத்த செலவிடுவது குறையும் என்பதால் இன்ஃபோசிஸ் பங்கு விலை கடந்த வியாழனன்று மட்டும் 4.27% இறக்கம் கண்டது. மேலும், நடப்புக் காலாண்டில் சம்பள உயர்வு, விசா கட்டணம் போன்றவற்றால் இந்த நிறுவனத்தின் செலவு அதிகரித்து, நிகர லாபம் குறையும் என்கிற கணிப்பாலும் பங்கின் விலை இறங்கி உள்ளது. ஜூன் காலாண்டில் இதன் லாப வரம்பு 2% குறையக்கூடும். அதே நேரத்தில், முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது’’ என்றார். இந்தப் பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டினை தொடர்ந்து கவனிப்பதே நல்லது என்றேபடுகிறது.

‘‘வங்கிகளின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டுவிட்டார் ஆர்.பி.ஐ. கவர்னர். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?’’ என்று சந்தேகத்துடன் கேட்டோம்.

‘‘கோல்டுமேன் சாக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜூலை மாதம் அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுக்கு 40% வாய்ப்பு தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில் இப்போதைக்கு அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுக்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்’’ என்று சிறு விளக்கம் தந்தார்.

‘‘வீடியோகான் நிறுவனம் கரெக்டிவ் ஆக்ஷன் பிளானில் இறங்கக் காரணம்?’’ என்று விசாரித்தோம்.

‘‘கிங்ஃபிஷர் போலவே வீடியோகானும் ஆகிவிடுமோ என்று வங்கிகள் பயப்பட ஆரம்பித்ததுதான். வங்கிகளுக்கு வீடியோகான் தரவேண்டிய கடன் தொகை ரூ.43 ஆயிரம் கோடி. சில ஆண்டுகளாகவே வீடியோகான் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, கேர் (கிரெடிட் அனாலிசிஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம்) வீடியோகானுக்கான கிரெடிட் ரேட்டிங்கைக் குறைத்துள்ளது.

2012-ல் வெளியான கிரெடிட் சூயீஷ் அறிக்கையின்படி, அதிக கடன் சுமையுள்ள டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் வீடியோகான் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், நிதி நிலைமை மோசமாக உள்ள வீடியோகான் வங்கிகளுக்கு தர வேண்டிய கடனைத் திருப்பித் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2015 மார்ச் காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.10.46 கோடியாக இருந்தது. ஆனால், 2016 மார்ச் மாத காலாண்டில் ரூ.189.59 கோடி நஷ்டமடைந்துள்ளது.

மேலும், இதன் பங்கு வர்த்தகம் கடந்த ஒரு ஆண்டாக இறக்கத்திலேயே இருக்கிறது. 52 வார அதிகபட்ச விலை ரூ.162.40; தற்போது ரூ.104 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. நிதி நிலைமை சரியாக இல்லாததால், முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்’’ என்று எச்சரித்தார் ஷேர்லக்.

‘‘என்எம்டிசியும் மாங்கனீஸ் வோர் இண்டியாவும் 20% பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளதே! ஏன் இந்த நடவடிக்கை?’’ என்று வினவினோம்.

‘‘நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், மாங்கனீஸ் வோர் இந்தியா, அவற்றின் 20-25% பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ள (buyback) முடிவு செய்துள்ளன. என்எம்டிசி பங்குகளை 94 ரூபாய்க்கும், மாங்கனிஸ் வோர் இந்தியா பங்குகளை 248 ரூபாய்க்கும் வாங்குவதாக அறிவித்துள்ளன. மத்திய அரசு இந்த நிதி ஆண்டில் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் மூலம் ரூ.56 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை எட்ட இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்’’ என்றவரிடம், “பொதுத்துறை வங்கிகள் பற்றி சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் என்ன கூறியிருக்கிறது?” என்று கேட்டோம்.

‘‘பொதுத் துறை வங்கிகள் வழங்கியிருக்கும் கடன்களின் தரம் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. இதன் காரணமாக வாராக்கடன் பிரச்னை பெரிதாகி வங்கிகளின் லாபம் குறையத் தொடங்கும் என்று மூடிஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளது. அதனால் இந்த பங்குகள் பக்கம் போகாமலிருப்பது நல்லது’’ என்றார்.

‘‘பிரபல ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் ஜார்ஜ் சோரஸ் மீண்டும் பங்கு வர்த்தகத்தில் இறங்குகிறாராமே!’’ என்றோம்.

‘‘சர்வதேச பொருளாதாரப் பிரச்னைகளால், பங்குச் சந்தைகளில் ஏற்படும் இறக்கத்தை பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கோடு அவர் இப்போது களமிறங்கி இருப்பதாக சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்’’ என்று கிளம்பத் தயாரானவரிடம், ‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?’’ என்று கேட்டோம்.

‘‘பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த மே 2016-ல் மட்டும் புதிதாக 3.76 லட்சம் ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டுக்கு மட்டும் 1.64 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை தொடங்கப்பட்ட ஃபோலியோ கணக்குகளின் எண்ணிக்கை 4.84 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதில் ஈக்விட்டி ஃபோலியோக் களின் எண்ணிக்கை 2.90 கோடி. 2016-17 -ம் நிதி ஆண்டின் முதல் இரு மாதங்களில் ரூ.6,500 கோடிக்கு மேல் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்றவர், சந்தை நிலை இல்லாமல் இருப்பதால் ஃபாலோ பண்ண வேண்டிய பங்குகளை பிறகு சொல்கிறேன் என்றபடி நடையைக் கட்டினார்.

மியூச்சுவல் ஃபண்ட்: எஸ்ஐபி-யில் புதிய இடைஞ்சல்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்தவரை, பெருநகரங்களைவிட சிறிய நகரங்களிலிருந்து ஈக்விட்டி திட்டத்தில் அண்மைக் காலத்தில் கூடுதல் முதலீடுகள் வந்திருக்கின்றன. மொத்த ஈக்விட்டி முதலீட்டில் சுமாராக 40% சிறு நகரங்களிலிருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் இப்போது சுமார் ஒரு கோடி எஸ்.ஐ.பி-கள் நடப்பில் உள்ளன. இந்த எஸ்.ஐ.பிகள் அனைத்துக்கும் இ.சி.எஸ் (ECS - Electronic Clearing Service) முறை மூலம் வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. இந்த இ.சி.எஸ் முறையில் சில அசௌகரியங்கள் இருப்பதால், நமது மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலிலும், ஒத்துழைப்பிலும் இயங்கிவரும் NPCI (National Payment Corporation of India), NACH (National Automated Clearing House) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இ.சி.எஸ் முறையில் சென்றுகொண்டிருந்த எஸ்.ஐ.பி-க்கள் அனைத்தும் இந்த புதிய என்ஏசிஹெச் முறைக்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றத்துக்கு அனைத்து வங்கிகளும் முழுவதுமாக தயாராகவில்லை என்பதினால், ஏற்கெனவே சென்றுகொண்டிருந்த எஸ்.ஐ.பி-களிலும் சரி அல்லது புதிதாக பதிவு செய்யப்படும் எஸ்.ஐ.பி-களிலும் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் சில சமயங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு பணம் வந்து சேருவதற்கு தாமதமாகிறது. இன்னும் சில முதலீட்டாளர்களுக்கு எஸ்.ஐ.பி சொல்லாமல் கொள்ளாமல் கேன்சல் ஆகிவிடுகிறது. சில முதலீட்டாளர்களுக்கு இன்னும் என்ஏசிஹெச் வந்து சேரவில்லை அல்லது அவ்வாறு ஒரு வங்கிக் கணக்கு இல்லை என பதில் வருகிறது.

இது ஒரு தற்காலிக பிரச்னைதான். விரைவாக சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டால், உங்களின் அட்வைஸரை நாடுவதே சரி என்கிறார்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள்.