பொதுவாக, ஒரு நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது, பெரிய குழுமத்தை சேர்ந்தது, பங்கின் விலை அதிகரித்து வருகிறது என்பது போன்ற காரணங்களால் அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும் முடிவை எடுப்போம். இவை தவிர கீழே காணும் 5 விஷயங்களையும் கவனிப்பது அவசியம்.

1. நிறுவனத்தின் வருமானம் /லாபம்!

நாம் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தின் காலாண்டு மற்றும் ஆண்டு வருவாய் அதிகரிக்கிறதா என்று பாருங்கள். அதோடு அந்த நிறுவனத்தின் லாபம் (குறிப்பாக, செயல்பாட்டு லாபம்) அதிகரிக்கிறதா என்பதைப் பாருங்கள்.

நிகர லாபத்தை பார்க்கும் போது, மொத்த வருவாயில் எவ்வளவு நிகர லாபமாக கிடைத்திருக்கிறது என்பதையும் பார்க்கவும். வருவாயில் குறைந்த பட்சமாக 8 - 10 சதவிகிதமாவது ஆண்டுக்கு ஆண்டு நிகர லாபம் கிடைக்கிறது என்றால் நல்ல லாபம்தான்.

8 - 10 சதவிகிதத்துக்கு மேல் ஒரே ஆண்டில் தாறுமாறாக அதிகரித்து, அடுத்த ஆண்டில் திடீரென இறங்கி இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் தன் தொழிலில் இன்னும் நிலை பெறவில்லை என்றுதான் அர்த்தம். எனவே, இது போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது “என் பங்கின் விலை பூஜ்ஜியத்தை தொட்டாலும் பரவாயில்லை” என்று தெரிந்தும் முதலீடு செய்வதற்கு சமம்.

உதாரணமாக, விவசாயத் துறை சார்ந்த பேயர் க்ராப் சயின்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் நாம் நல்ல நிறுவனம் என்று மேற்குறிப்பிட்டது போலவே இருக்கின்றது. மாறாக ரேய் அக்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் சற்று அதிக ஏற்ற இறக்கத்துடன் ஒரு சீராக இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக ரேய் அக்ரோவின் நிகர விற்பனை அதிகரித்துக் கொண்டே வந்த போதும், கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நிகர நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கிறது. பங்கின் விலையும் கடந்த மே 05, 2008ல் அதன் அதிகபட்ச உச்சமான 117 ரூபாய் வர்த்தகமாகி வந்த இந்தப் பங்கு தற்போது வெறும் 0.40 பைசாவிற்கு வர்த்தகமாகி வருகிறது.

2. கடன் நிறுவனத்தை முறிக்கும்!

ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீடுகளை பல வழிகளில் திரட்டிக் கொள்ளலாம். ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யம், புதிதாக தொழில் தொடங்க பெரிய அளவில் வங்கியிடமிருந்து கடன் வாங்கி, நிறுவனத்தை நடத்துகிறது என்றால் நாம் என்ன செய்வோம். அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்வோம்.

முதலீடு செய்ய என்ன காரணம் என்று கேட்டால் “அதான் , அந்த குரூப்பில் உள்ள மத்த பெரிய கம்பெனிங்க காசு இருக்கே, அந்த காச இங்க கொண்டு வர மாட்டாங்களா என்ன’’ என்று வெகுளியாக கேட்டால் கொண்டு வர மாட்டார்கள்.

அதற்கு சரியான உதாரணம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். பெரிய அளவில் வங்கிகள் கடன் கொடுத்தது, அதன் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தை நம்பித்தான். ஆனால், இப்போது அந்த நிறுவனத்திலிருந்து விஜய் மல்லையா வெளியேறிவிட்டார். தற்போது மல்லையாவுக்கும் அவர் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் இருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட பிறகு, அதிகபட்சமாக 18 டிசம்பர் 2007ல் 315 ரூபாய்க்கு வர்த்தகமாகி, சமீபத்தில் 1.30 ரூபாய்க்கு சரிந்து, தற்போது பி.எஸ்.இ-யில் வர்த்தகமாகாமல் இருக்கிறது.

3. நிர்வாகம் விடும் புஸ்வானம்!

நாம் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள், நிர்வாகிகள் எல்லாருமே திறமையானவர்கள். ஆனால் ஏதோ ஒரு எதிர்பாராத காரணத்தால் தற்செயலாக நிறுவனத்தின் அனைத்து திறமைசாலிகளுமே ஒன்றாக சிந்தித்து தவறாக ஒரு முடிவு எடுப்பார்கள். அந்த முடிவின் பலனை முடிவு எடுத்த பின் அவர்கள் பேசுவதற்கு முன் உலகம் பேசத் தொடங்கி விடும் பங்குகளின் விலை இறக்கம் மூலம்.

அப்படி ஒரு முடிவை நல்ல நிறுவனமான கெம்ராக் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடுத்தது.

தொடக்கத்தில் ஃபைபர் ரீ-இன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக் மற்றும் க்ளாஸ் ஃபைபர் ரீ-இன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்த நிறுவனம் 1995-ம் ஆண்டு காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் நாஷிலே (Nacelle) கவர்களை, சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்திற்காக தயாரிக்கத் தொடங்கியது. 2002ல் கேபிள் ரெக்குகளை ஃபைபர்க்ரேட் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கத் தொடங்கியது.

இப்படி பலதரப்பட்ட பன்முகத்தன்மையோடு வளர்ந்து வந்த நிறுவனம் 2010-ம் ஆண்டில் அகலக்கால் வைக்கத் தொடங்கி அதன் இறக்கத்திற்கான அடித்தளத்தை கட்டத் தொடங்கியது. 2010ல் டாப் க்ளாஸ் எஸ்.பி.ஏ என்கிற காம்போஸைட் மெட்டீரியல்களை தயாரிக்கும் இத்தாலி நிறுவனத்தின் 80 % பங்குகளை வாங்கியது. அதோடு ஐந்து துணை நிறுவனங்களையும் நிறுவியது.

மீண்டும் அதே 2010ல் சுவிட்சர்லாந்தின் டி.எஸ்.எம் காம்போஸைட் ரிசின்ஸ் ஏஜி நிறுவனத்தோடு அன்சாச்சுரேடெட் பாலிஸ்டெர் மற்றும் வினைல் எஸ்டெர் போன்றவைகளை தயாரிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மீண்டும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தோடு ஏரோ ஸ்பேஸ் கார்பன் ஃபைபரை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த அகலக்காலுக்கு பிறகு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறையத் தொடங்கியதால் 02, ஜனவரி 2008ல் சுமாராக 990 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த பங்கு இன்று வெறும் 6.70 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

4. நெறிமுறையில் நெறிக்கப்படலாம்!

இன்று வரை நான் முதலீடு செய்திருக்கும் பார்மா பங்குகள் மிக நன்றாக செயல்பட்டு வருகிறது, சும்மா சொல்லக் கூடாது, இது மாதிரி நல்ல பங்குகளில் முதலீடு செய்ததற்கு என்னையே நான் திருஷ்டி சுத்தி போட்டுக்கணும் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போது, 70 அடிப்படை மருந்துகளின் விலையை கட்டுப் படுத்துவதற்கான சட்டத்தை தேசிய மருந்து விலை ஆணையம் கொண்டு வருகிறது. அந்த 70 மருந்துகளில் நாம் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தின் பல மருந்துகள் இருக்கின்றன. தேசிய மருந்து விலை ஆணையம் விலை கட்டுப்படுத்திய பல மருந்துகள் மூலம் தான் மொத்த பார்மா விற்பனையில் பெரும்பாலான வருமானம் வருகிறது என்றால் அந்தப் பங்குகளின் விலை விறுவிறு என இறங்கத்தான் செய்யும்.

உதாரணமாக : ஏப்ரல் 2016ல் இந்தியாவின் தேசிய மருந்து விலை ஆணையம் (National Pharmaceutical Pricing Authority - NPPA), முக்கியமான 50 மருந்துகளின் விலைக்கு உச்ச வரம்பை விதித்தது.

புற்றுநோய்க்கான Paclitaxel மருந்து இந்தியாவில் 20 பார்மா நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இந்த மருந்தின் விலை ஒரு மில்லி லிட்டருக்கு 207 ரூபாய் ஆக குறைத்திருக்கிறது. இந்த மருந்தின் மொத்த விற்பனையில் 23 சதவிகிதம் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸிடம் இருந்தது. டாக்டர் ரெட்டீஸுக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் விற்பனை ஆகி வந்த மருந்து இது.

அதே போல் Human chorionic gonadotropin (HCG) எனும் மருந்தின் விலை ஒரு பேக்கேட்டிற்கு ரூபாய் 371 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை மருந்தின் மொத்த சந்தையில் சன் பார்மாவிடம் 19 சதவிகிதம் இருந்தது. சன் பார்மாவிற்கு 125 கோடி ரூபாய் விற்பனை கொடுத்த மருந்து இது.

இந்த விலை மாற்றத்தால் பார்மா துறை ஜாம்பவான்களே சற்று தடுமாறத் தான் செய்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆக நெறிமுறைப்படுத்துவது நம் கையில் இல்லை. இருப்பினும் நெறிமுறைப்படுத்தும் போது சில மாதங்களுக்கு முன்பாகவே இதைப் பற்றிய பேச்சு எழத் தொடங்கிவிடும். அப்போதே ஒருபகுதி பங்குகளை நல்ல விலைக்கு விற்று விடலாமே.

5. கவனம் வைக்க வேண்டிய கஷ்டமான பிசினஸ்...!

பிசினஸ் என்றாலே கஷ்ட நஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். அதிலும் கஷ்டமான பிசினஸ் என்றால் விமான சேவைகளைச் சொல்லலாம்.

இன்று வரை இந்தியாவில் பலரும் விமான சேவை நிறுவனங்களைத் தொடங்கி, லாபகரமாக நடத்த முடியாமல் பிசினஸை கைவிட்டிருக்கிறார்கள். இன்று இண்டிகோ. ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற சில நிறுவனங்கள் மட்டும் தான் லாபகரமாக இயங்கி வருகின்றன.

இந்த மாதிரியான துறைகளில் அரசு அனுமதி பெற்று பிசினஸை தொடங்குவதே சற்று கஷ்டம்தான். அதோடு அந்த தொழிலை லாபகரமாக இயக்குவது அதைவிட கஷ்டம். விமான எரிபொருளின் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலையால் அடிக்கடி மாற்றமடைவது, விமான பணியாளர்களுக்கான சம்பளம், விமான நிலையங்களை பயன்படுத்துவதற்கான செலவு என பட்டியல் நீண்டு கொண்டேதான் இருக்கும்.

இது போன்ற துறைகளில், மேற்கூறிய காரணங்களில் ஏதேனும் ஒன்று பிரச்னை என்றால் கூட உடனடியாக பங்குகளில் அதன் எதிரொலி தெரியும். ஆதலால் மிகவும் கடினமான பிசினஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளில் அதிக கவனம் தேவை.