இண்டெக்ஸ்

கடந்த வாரம் வாங்கலாம், விற்கலாம் பகுதியில், இந்திய சந்தையில் ஏற்றம் தொடர்ந்தால், நிஃப்டி 8335 புள்ளிகளுக்கும், பேங்க் நிஃப்டி 18050 புள்ளிகள் வரையும் அதிகரிக்கும் என்று சொல்லி இருந்தோம். முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் கூறி இருந்த புள்ளிகளுக்கு அருகாமையில் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக, ஜூன் 7 செவ்வாய்க்கிழமை நிஃப்டி 8318 புள்ளிகளையும், 10-ம் தேதி வெள்ளிக்கிழமை பேங்க் நிஃப்டி 18026 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

ஆக ஏறக்குறைய, கடந்த வாரத்தில் சொல்லப்பட்டிருந்த இலக்கு விலைகளை சந்தை அடைந்துவிட்டது என்றே எடுத்துக்கொள்ளலாம். எனவே, தற்போது சந்தை புல்பேக் என்றழைக்கப்படும் இறக்கங்களை எதிர்பார்க்கலாம். தற்போது சந்தை இருக்கும் நிலையில், எடுக்கும் ரிஸ்க்குக்கு தகுந்தாற்போல வருமானம் கிடைக்காது என்பதால், பலரும் புதிதாக பொசிஷன்களை எடுக்கத் தயாராக இல்லை.

கடந்த வாரத்தில் காளை வர்த்தகர்கள் தான் சந்தையை ஏற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தோம், ஆனால், இப்போது வரும் வாரத்தில் காளை வர்த்தகர்கள் சந்தையில் வியாபாரத்தை மேற்கொள்ளாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருப்பது போன்றே தெரிகிறது.
வர்த்தக ரேஞ்சுகள் குறைவான இடைவெளியோடு இருந்ததால் பங்குகள் விற்பதும் அதிகளவில் நடைபெறவில்லை.

காளை வர்த்தகர்கள், சந்தையை உயர்த்த கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல்

இருக்கிறார்கள் என்றால், அது சந்தையின் போக்கில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். எனவே, இன்னும் ஒரு வார காலத்துக்கு காளை வர்த்தகர்கள் சந்தையை உயர்த்துகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் சில நெகட்டிவ் செய்திகள் வந்தால் சந்தை இறக்கத்தை காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அடுத்த வாரத்தில் ஜாக்கிரதை யாக, ஸ்டாப்லாஸ் வைத்து வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

நிஃப்டி ஃப்யூச்சர்களுக்கு 8090 என்கிற புள்ளியை இலக்காக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தை நெகட்டிவ்வான செய்திகளால் இறங்கினால் 8020 என்கிற புள்ளிகள் வரை கூட இறக்கம் காணலாம். அதே போல், பேங்க் நிஃப்டி 17350 என்கிற புள்ளிகள் வரை இறக்கம் காணலாம்.
தற்போதைய சந்தை விலைகளை விட கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கு விலைகள் நல்ல இடைவெளியோடு இருப்பதால், அடுத்த வாரத்தில் வர்த்தகர்கள் ஷார்ட் எடுக்கலாம். நிஃப்டி 8295 புள்ளிகளை உடைத்துக்கொண்டு அதிகரிக்கும்போது மட்டுமே, லாங் பொசிஷன்கள் எடுக்கலாம்.

1. ஸ்பைஸ் ஜெட் (BSE Code: 500285)

தற்போதைய விலை : ரூ. 63.75

இந்தப் பங்கின் விலை கடந்த மே 20-ல் ஒரு புதிய ஏற்றத்தை கண்ட பின் சற்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. தற்போது விமானச் சேவையில் கட்டண உச்ச வரம்பை நீக்கிய பின், பல புதிய வர்த்தகர்கள் இந்தப் பங்கில் வர்த்தகம் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, இந்தப் பங்கின் விலை 73 - 75 ரூபாய் வரை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம்.

2. மெர்கெடர் (MERCATOR)

தற்போதைய விலை : ரூ.33.20

இந்தப் பங்கு கடந்த பல மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக விலை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பங்கின் நீண்ட கால சார்ட்டில், நீண்ட காலமாக இந்தப் பங்குகளை வாங்கிச் சேர்த்துக் கொண்டிருப்பது வால்யூம்களின் எண்ணிக்கையில் காட்டுகிறது. கடந்த வாரத்தில் இந்தப் பங்கு அதன் வலுவான ரெசிஸ்டன்ஸான 33 ரூபாயை உடைத்து வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இந்த விலை ஏற்றத்தின் வேகம் நன்றாக இருப்பதால், இந்தப் பங்கின் விலை அடுத்த சில வாரங்களில் 50 - 51 ரூபாய் வரை அதிகரிக்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.27-ஐ ஸ்டாப்லாஸ்-ஆக வைத்துக் கொள்ளவும்.

3. ஜே அண்ட் கே பேங்க் (J&KBANK )

தற்போதைய விலை : ரூ.66.45

இது ஒரு பொதுத்துறை வங்கி. கடந்த பல மாதங்களாக விலை சரிந்து வர்த்தகமாகிய வங்கிப் பங்குகளில் இதுவும் ஒன்று. இந்தப் பங்கு சற்றே விலை அதிகரிக்கத் தொடங்கியபோது வங்கித் துறையில் ஏற்பட்ட பலவீனமான சூழ்நிலையால் இந்தப் பங்கின் விலையும் 55 - 57 ரூபாய்க்குள்ளேயே வர்த்தகமானது.

கடந்த வாரத்தில் இந்தப் பங்கின் விலை சற்றே அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தப் பங்கின் ஆஸிலேட்டர் சார்ட்டில், இந்தப் பங்கின் விலை ரேஞ்சுகள் மாறுபட்டிருப்பதும், வால்யூம்கள் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இவைகளை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பங்கு, விலை ஏற்றத்திற்கு தயாராக இருப்பதை காட்டுகிறது.

இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலையாக 80 - 85 ரூபாய் வரை வைத்துக்கொள்ளலாம்.

தொகுப்பு : மு.சா.கெளதமன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப் பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.