இப்போது வரும்... அப்போது வரும்... என கடந்த பல வருடங்களாக ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்ட கமாடிட்டி ஆப்ஷன்ஸ் தற்போது வரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தற்போது பார்வர்ட் மார்க்கெட் கமிஷன் (எஃப்எம்சி), பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கமாடிட்டியில் ஆப்ஷன்ஸ் வியாபாரம் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செபி தற்போது அறிவித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் தற்போது ஆப்ஷன்ஸ் டிரேடிங் நடைபெற்று வருகிறது. கரன்சி வியாபாரத்திலும் ஆப்ஷன்ஸ் டிரேடிங் நடைபெறுகிறது. ஆனால், கமாடிட்டி சந்தையில் இதுவரை இல்லை. கமாடிட்டி சந்தையில் இந்த ஆப்ஷன்ஸ் எல்லா கமாடிட்டிகளிலும் வருமா அல்லது குறிப்பிட்ட கமாடிட்டியில் மட்டும் வருமா என பல கேள்விகள் எழுந்தாலும் அவற்றுக்கு உடனடி பதில் இல்லை.

இதுவரை கமாடிட்டி சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வகை வியாபாரமே நடந்து வருகிறது. பொதுவாக, ஃப்யூச்சர்ஸ் வகை வியாபாரத்தில் ஈடுபடுபவர் களுக்கு, அளவில்லா லாபம்; இல்லை யென்றால் அளவில்லா நஷ்டம் வரும் என்பது அடிப்படை. ஆனால், ஆப்ஷன்ஸ் என்று வரும்போது அளவில்லா லாபம், அளவுடன் கூடிய நஷ்டம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் செயல்படும்.

பொதுவாக, இந்த ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் என்ற வியாபார வகை, ஸ்பாட் மார்க்கெட்டை அடிப்படையாகக் கொண்டும் (காசை முழுவதுமாகக் கொடுத்து உடனடியாக பொருட்களை வாங்கும் முறை), அதில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையிலும் இயங்குவதால், இவற்றை ‘டெரிவேட்டிவ்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த டெரிவேட்டிவ்ஸ் என்கிற கருத்தாக்கம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம், ஸ்பாட் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கு வரக்கூடிய நஷ்டத்தை ஈடுகட்ட (ஹெட்ஜிங்) ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வியாபாரத்தில் எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதே.

இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். ஒரு விவசாயி நெல்லை விதைக்கும் காலத்தில் அரிசி ஒரு கிலோ ரூ.50 இருப்பதாக வைத்துக் கொள்வோம். மூன்று மாதம் கழித்து அவர் அறுவடை முடிந்து, அரிசியை அவர் சந்தைக்கு கொண்டு வரும்போது, அரிசி விலை கிலோ ரூ.30-ஆக இருந்தால், அந்த விவசாயிக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 நஷ்டம் ஏற்படும். அதே விவசாயி விதைக்கும் காலத்தில் மூன்று மாதத்தில் முடியும் 50 புட் ஆப்ஷனை பயன்படுத்தி விற்று விட்டால், மூன்று மாதம் கழித்து ஸ்பாட் விலை ரூ.30-ஆகக் குறைந்தாலும், எந்த நஷ்டமும் அடையாமல் அதே 50 ரூபாய்க்கே விற்க முடியும். (இந்த லாபத்தில் அவர் கட்டிய பிரீமியம் தொகையை மட்டும் கழிக்க வேண்டி வரும்).

ஆப்ஷன்ஸ் வியாபாரத்தை விவசாயிகள் மட்டுமல்ல, பல்வேறு பொருட்களைக் கையாளும் நிறுவனங்கள், வியாபாரிகள், கிடங்குகளில் பொருட்களைப் பாதுகாத்து வைப்பவர்கள் என பலரும் தங்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தலாம்.

தவிர, சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைப் பயன்படுத்தி, அதன் மூலம் லாபம் பார்க்க நினைக்கும்

‘ஸ்பெக்குலேட்டர்’களும் இதில் பங்கு கொள்ளலாம். விலை ஏறும் என்று நினைப்பவர்கள் ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில் அதிகத் தொகையாக மார்ஜின் கட்டி, அளவில்லாத ரிஸ்க் எடுப்பதற்குப் பதிலாக, குறைவான தொகையைக் கட்டி, அதை மட்டுமே ரிஸ்க் எடுத்து ஒரு கால் ஆப்ஷனை வாங்கலாம். விலை இறங்கும் என்று நினைப்பவர்கள், ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில் அதிக மார்ஜின் கட்டி, அளவில்லாத ரிஸ்க் எடுப்பதற்குப் பதிலாக, குறைவான தொகையை கட்டி, அதை மட்டுமே ரிஸ்க்காக வைத்து ஒரு புட் ஆப்ஷனை வாங்கலாம். கால் மற்றும் புட் ஆப்ஷன் இரண்டிலும் நாம் கட்டும் தொகையை பிரீமியம் என்று அழைப்போம்.

பொதுவாக, ஆப்ஷன்ஸ் சந்தையில் ஈடுபடுபவர்கள் கருத்தில் கொள்ளவேண்டியது என்ன?

* ஆப்ஷன்ஸ் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், அது கால் ஆப்ஷனாக இருந்தாலும், புட் ஆப்ஷனாக இருந்தாலும் அவர்கள் கட்டும் பிரிமீய தொகை முழுவதையுமே இழக்க வாய்ப்புள்ளது.

* ஆப்ஷன் வாங்குபவர்களுக்கு குறைவான நஷ்டம், அளவில்லாத லாபம் வர வாய்ப்பு இருக்கிறது. இதற்கு நேரெதிராக ஆப்ஷன்ஸ் விற்பவர்களுக்கு குறைவான லாபம், அளவில்லாத நஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த வியாபாரத்தில் ரிஸ்க் கூடுதலாக இருப்பதால், அதை ஈடுகட்ட கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் அதிக தொகை வசூலிக்கும்.

* கமாடிட்டி சந்தையில் தற்போது ஃப்யூச்சர்ஸ் வகை வியாபாரம் நடந்தாலும், அதில் டெலிவரி என்று ஒன்று உண்டு. ஆனால், ஆப்ஷன்ஸ் வகை வியாபாரம் வந்தால், அதில் டெலிவரி எடுக்கவோ அல்லது கொடுக்கவோ அனுமதி உண்டா என்பது தெரியவில்லை.

அடுத்தகட்ட அறிவிப்புகள் வரும்போது, கமாடிட்டிச் சந்தையில் ஆப்ஷன் தொடர்பான நமது பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நம்புவோமாக!