அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் முடிந்து, சுண்டல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நம் கேபினுக்குத் திரும்பியபோது, அங்கு சைலன்ட்-ஆக உட்கார்ந்திருந்தார் ஷேர்லக். அவருக்கும் ஒரு தொன்னை நிறைய சுண்டலைக் கொடுத்தோம். அட, ‘‘கொரிப்பதற்கு நல்ல உணவுதான்’’ என்று தின்றபடியே நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். இனி நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

“யூகோ பேங்க் அதன் 7 கோடி பங்குகளை விற்க இருக்கிறதே?”

‘‘மொத்தம் 1.17 கோடி பங்குகளை (முக மதிப்பு ரூ.10) முன்னுரிமை அடிப்படையில், சுமார் ரூ.270 கோடிக்கு எல்ஐசி நிறுவனத்துக்கு யூகோ பேங்க் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. இதனை அடுத்து இந்த வங்கியில் எல்ஐசியின் பங்கு முதலீடு 5.5 சதவிகித மாக அதிகரிக்கும். தற்போது இந்த வங்கியில் எல்ஐசி மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மொத்தம் 12.02 சதவிகிதப் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன.”

‘‘நிஃப்டி 10,000 புள்ளிகளைத் தொடும் என்று ஜேபி மார்கன் கணித்துள்ளது சாத்தியமா?”

‘‘இந்தியப் பங்குச் சந்தைகள் ரொம்பவே பாசிட்டிவ்-ஆன ட்ரெண்டில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை நம்முடைய பெஞ்ச்மார்க் குறியீடுகள் (சென்செக்ஸ், நிஃப்டி) 25% ஏற்றம் கண்டிருக்கின்றன. காரணம், சர்வதேச சந்தைகளில் நிலவும் ரிஸ்க், ஜிஎஸ்டி ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை, பாண்டு வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, சாதகமான பருவநிலை ஆகியவை. இதனால், அடுத்த ஓராண்டில் நிஃப்டி 9500 - 10000 என்ற நிலையை எட்ட வாய்ப்பிருக்கிறது. இது சாத்திய மானால், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் வருமானம் 12 முதல் 15 சதவிகிதம் இருக்கும்.”

“ஹெச்பிஎல் எலெக்ட்ரிக் முதல் நாளே 6% குறைந்ததே?”

“சமீபத்தில் ஐபிஓ வந்து, கடந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹெச்பிஎல் எலெக்ட்ரிக், முதல் நாள் வர்த்தக முடிவில் அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் 6 சதவிகிதம் குறைந்தது. முதல் நாள் அன்று பிஎஸ்இ-யில் 33.81 லட்சம் பங்குகள் வர்த்தகமாகியுள்ளன. என்எஸ்இ-யில் ஒரு கோடிக்கும் மேலான பங்குகள் வர்த்தகமாகியுள்ளன. வால்யூம்கள் அடிப்படையில் பார்க்கும்போது இந்தப் பங்கு டீஸன்ட்-ஆன வர்த்தகத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும், முதல் நாளன்று இறங்கிய பங்கு விலை கடந்த வாரத்தின் ஐந்து வர்த்தக நாளிலும் மீண்டு வரவில்லை என்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தப் பங்கின் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது.”

“பங்கு வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க செபி திட்டமிட்டிருக்கிறதே?”

“கணினி யுகம் மிகத் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இது பங்கு வர்த்தகத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பங்கள் வளர்வதற்கேற்ப குற்றங்களும், மோசடிகளும் அதிகரிக்கவே செய்யும். அதற்காக சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் (செபி) பல கட்டுப்பாட்டு நடவடிக்கை களை எடுத்திருக்கிறது. ஆனால், மாற்றங்களும் கட்டுப்பாடு களும் தேவை என்பதால், செபி தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சந்தைகளே இத்தகைய விஷயங்களில் உடனே முடிவெடுக்க தயக்கம் காட்டுகின்றன. எனவே, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், நிபுணர் களிடம் ஆலோசித்தபின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் செபி தலைவர் யூ.கே. சின்ஹா கூறியுள்ளார்.”

‘‘இந்தியாவில், பெரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே?’’

‘‘பங்குகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் மாதத்திலிருந்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. காரணம், இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தை நல்ல ஏற்றம் கண்டிருப்பதே. அதாவது, 66,958 பேரிலிருந்து 1,24,978 பேராக அதிகரித்துள்ளனர். அண்மைக் கால ஐபிஓ-களில் ஹெச்என்ஐகளின் விண்ணப்பங்கள் 20 - 30 மடங்குகள் வரை செய்யப்பட்டிருப்பது இதற்கான கூடுதல் ஆதாரமாக இருக்கிறது. மேலும், பெரும் பணக்காரர்கள் பங்குகளை வாங்கி உடனே விற்றுவிடாமல் நீண்ட காலத்துக்கு வைத்திருக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இருக்கிறது.”

“இந்தியாவின் ஜிடிபி கணிப்பு பிரகாசமாக இருக்கிறதே உண்மையா?”

“சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒவ்வொரு நாட்டுக்குமான ஜிடிபி-யைக் கணித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி இந்த 2016-17 நிதி ஆண்டில் 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தக் கணிப்பு ரிசர்வ் வங்கியின் கணிப்புடனும் ஒத்துப் போகிறது. மேலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, தடைகளை எல்லாம் மீறி வளரக் கூடியதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி போன்ற சிறந்த கொள்கை முடிவுகளும், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளும், வங்கித்துறை சீர்திருத்தங்களும்தான் காரணம் என்கிறது.”

“அப்படியென்றால் இந்தியாவில் பிரச்னைகளே இல்லையா?”

“பிரச்னைகள் என்று சொல்வதைவிட சவால்கள் என்று சொல்லலாம். உலகளாவிய பொருளாதாரச் சூழல், கமாடிட்டி பொருட்களின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கம், பிரெக்ஸிட் போன்ற வர்த்தகத்தைப் பாதிக்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட சவால்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் சமாளித்து வளர்ந்தால்தான், இந்தியாவின் ஜிடிபி கணிப்பு 7.6 சதவிகிதம் என்பது சாத்தியமாகும். முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.1 சதவிகிதமாக உள்ளது.”

‘‘வங்கிகள் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடு அதிகரித்திருக்கிறதே?’’

‘‘இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அதாவது, வங்கிகள் கடன் கொடுக்காமல், குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளன. 2006 செப்டம்பர் 15 நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்டுகளில் வங்கிகள் செய்திருந்த முதலீடு ரூ.25,000 கோடியாக இருந்தது. ஆனால், 2016 செப்டம்பர் 16-ல் இது ரூ.80,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச முதலீடு என்பது குறிப்பிடத் தக்கது.”

“இந்திய பங்குச் சந்தையின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை விட வெளிநாட்டினர் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாக இருக்கிறதே?”

“உண்மைதான். நடப்பு நிதி ஆண்டின் (2016-17) ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், புதிதாக 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்தியாவில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

கடந்த 2015-16ம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 2,900 வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கான அனுமதியை செபி அமைப்பு வழங்கி இருக்கிறது.

2016 மார்ச் முடிவில், செபியிடம் பதிவு செய்தி

ருந்த வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4,311-ஆக இருந்தது. இது ஜூலையில் 5,322-ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் நீண்ட காலத்தில் நிலையான மற்றும் நல்ல வருமானத்தை தரும் என நம்புவதையே இது காட்டுகிறது. இந்த முதலீட்டாளர்கள் இந்தக் காலகட்டத்தில் சுமார் ரூ.30,000 கோடி இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்து இருக்கிறார்கள்.”

‘‘புதிய ஐபிஓ ஏதாவது...’’

‘‘மேட்ரிமோனி டாட் காம் வருகிற நவம்பரில் ஐபிஒ வெளியிடத் தயாராகிவிட்டது. ஐபிஓ மூலம் ரூ.550 கோடி நிதி திரட்டப் போகிறது அந்த நிறுவனம்’’.

‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்...’’

எஸ்பிஐ, அலெம்பிக் பார்மாசூட்டிக்கல்ஸ், பெட்ரோ நெட் எல்என்ஜி, லஷ்மி மெஷின் ஒர்க்ஸ், என்சிஎல் இண்டஸ்ட்ரீஸ்.

கமாடிட்டி பகுதியைப் படிக்க :

http://bit.ly/2dxYcPH