இண்டெக்ஸ் :

கடந்த வாரத்தில் சந்தை மந்தமாகவே வர்த்தகமானது. சந்தை மந்த நிலையில் இருக்கும் போது இண்டெக்ஸில் டிரேட் செய்வது என்பது சற்றே பிரச்னைக்குரியதுதான். சொல்லப்போனால் கடந்த வாரம் மட்டும் அல்ல, கடந்த செப்டம்பர் மாதம் முழுக்கவே சந்தை மந்தமாகத்தான் வர்த்தகமானது. கடந்த மாதத்தில் ஒரு குறிப்பிட்ட குறுகிய ரேஞ்ச் லெவல்களுக்குள்ளேயே சந்தை வர்த்தகமாகி வந்ததை நாம் பார்த்தோம்.

இந்தச் சந்தை ஏற்றத்தை ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆகஸ்ட் மாதமும் ரேஞ்சு களிலேயேயே வர்த்தகமாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் செப்டம்பர் மாதத்தில் சந்தை ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளுக்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது. விலை ஏற்றங்கள் குறைவாக இருந்ததால், டிரேட் செய்வதற்கான சரியான வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்னையால் எழுந்த பதற்ற நிலை மற்றும் ஆர்பிஐ-ன் 0.25 சதவிகித வட்டி குறைப்பு போன்றவைகளால் சந்தையின் மந்த நிலை தொடரவே செய்தது. ஒரு விதத்தில் இந்த மந்த நிலையை ஒரு நல்ல பாசிட்டிவ் சிக்னலாக எடுத்துக்கொள்ளலாம். சந்தை மேலும் இறங்காமல் தாக்குப் பிடித்து ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளுக்குள்ளேயே பிடிவாதமாக வர்த்தகமாகி வருகிறது என்பதுதான் காரணம்.

மற்றொரு வகையில் பார்த்தால், சந்தையின் டிரெண்ட் ஒரு முடிவுக்கு வருவதுகூட காரணமாக இருக்கலாம். தற்போது இந்த சந்தை ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணுவதற்கு ஒரு நல்ல பிரேக் அவுட் தேவைப்படுகிறது. வரும் வாரத்தில் மிகக் குறைந்த நாட்களே வர்த்தகம் நடைபெறும் எனபதால், சந்தை 8650 புள்ளிகளை நெருங்கி இறக்கம் கண்டால் அல்லது சந்தை அதிகரித்து 8820 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானால் புதிதாக பொசிஷன்களை எடுக்கலாம். பேங்க் நிஃப்டி அடுத்த வாரத்தில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்காது என்றே சொல்லலாம்.

ஜேகே பேப்பர் (JKPAPER)
தற்போதைய விலை : ரூ. 76.85
வாங்கலாம்.

சமீப காலமாக பேப்பர் துறை சார்ந்த பங்குகள் நல்ல விலை ஏற்றம் கண்டு வருகின்றன. இதில், ஜேகே பேப்பர் நிறுவனப் பங்கு மட்டும் நிலையாக விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதோடு இந்தப் பங்கில் கவர்ச்சிகரமான பேட்டன்களும் உருவாகி வருகிறது. தற்போது இந்த பங்கின் விலை தன்னுடைய ரவுண்டிங் பேட்டனில் இருந்து பிரேக் அவுட் ஆகி விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. எனவே இந்த பிரேக் அவுட் மற்றும் சார்ட்டில் இருக்கும் நல்ல பேட்டன்கள் காரணமாக இந்தப் பங்கின் விலை இன்னும் நன்றாக அதிகரிக்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய கால இலக்கு விலை 90 - 95 ரூபாய். 65 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும்.

லாய்ட்ஸ் எலெக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங் (LLOYDELENG)
தற்போதைய விலை : ரூ.276.45
வாங்கலாம்.

ஏழாவது ஊதியக் குழு சம்பள உயர்வு மற்றும் நல்ல பருவமழை காரணமாக கிராமப்புற மக்களின் நுகர்வு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் வீட்டு உபயோக எலெக்ட்ரிக்கல் சாதனங்களைத் தயாரித்து வருகிறது. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பும் நிலையாக அதிகரித்து வருகிறது. அதோடு இந்த நிறுவனம் இந்திய ரயில்வேக்கு குளிர் சாதனங்களையும் அளித்து வருகிறது. சில காலமாக இந்தப் பங்கின் விலை சீராக அதிகரித்துக்கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களாக, இந்தப் பங்கின் விலை கரெக்ஷனில் இருந்தது. அந்த கரெக்ஷன் தற்போது முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய கால இலக்கு விலை 290 - 295 ரூபாய். 265 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளலாம்.

மன் இன்ஃப்ராகன்ஸ்ட்ரக்ஷன் (MAN INFRA)
தற்போதைய விலை : ரூ. 47.85
வாங்கலாம்.

இந்த பங்கின் வாராந்திர சார்ட்டைப் பார்த்தால், விலை அகலமான முக்கோணத்தில் இருந்து குறுகலான முக்கோண பேட்டன்களை உருவாக்கி வருகிறது. பங்கின் விலை நிலை பெற்று வர்த்தகமாகி அக்குமிலேட் ஆகும்போதுதான் இந்த மாதிரியான பேட்டன்கள் உருவாகும். கடந்த வார நிலவரப்படி, இந்த பங்கின் சார்ட்டை பார்க்கும்போது, ஒரு நல்ல பிரேக் அவுட்டுக்கு தயார் ஆவது போல் இருக்கிறது. எனவே அடுத்து வரும் வாரங்களில் புதிய டிரெண்டுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். 44 ரூபாய் ஸ்டாப் லாஸ். இலக்கு விலை 60 ரூபாய்.

தொகுப்பு: மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.