Published:Updated:

கம்பெனி ஸ்கேன்

ஹெச்.டி.எஃப்.சி! (NSE SYMBOL: HDFC)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்

வீட்டு வசதிக்கான கடன் வழங்கும் நிறுவனம் ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட். வீட்டு வசதிக் கடனுக்கான கடனை தரும் தனியார் நிறுவனங்கள் இல்லாத காலத்தில் ஒரு முன்னோடி நிறுவனமாக, 1977-ம் ஆண்டில் வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

ஆரம்ப நாள் முதல் சமீப காலம் வரை கிட்டத்தட்ட 5.4 மில்லியன் வீடுகளுக்கான கடன்களை வழங்கியுள்ளது இந்த நிறுவனம்.  கிட்டத்தட்ட 2.9 டிரில்லியன் ரூபாய் அளவுக்கான கடன் தொகையை வழங்கியுள்ள இந்த நிறுவனம், வங்கிகளைத் தவிர்த்து டெபாசிட் பெறும் நிறுவனங்களில் அகில இந்திய அளவில் மிகப் பெரிய நிறுவனமாக இன்று உருவெடுத்துள்ளது.

சமீப காலம் வரை கிட்டத்தட்ட 1.8 மில்லியன் டெபாசிட்தாரர்களைக் கொண்டு அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.மேலும், வீட்டு வசதிக் கடன் தருவதில் ஒரு முன்மாதிரி நிறுவனமாக அறியப்பட்டுள்ளது இந்த நிறுவனம். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வீட்டு வசதிக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி (கன்சல்டன்சி வசதி) வரும் நிலையில் இருக்கிறது இந்த நிறுவனம் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

வீட்டு வசதிக்கான கடன் அளித்தல் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து டெபாசிட்களைப்

கம்பெனி ஸ்கேன்

பெறுதல் என்பது தொழில் ரீதியாக நிறைய கிளைகளையும் சிறந்த நெட்வொர்க்கையும் கொண்டிருக்கவேண்டிய துறையாகும். ஹெச்டிஎஃப்சி நிறுவனம் இதற்கு ஏற்றாற்போல் 401 இடங்களில் கிளைகளைக் கொண்டு (116 அலுவலகங்கள் ஹெச்டிஎஃப்சியின் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி சேல்ஸ் எனும் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருபவை) அகில இந்தியரீதியாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. 

வேகமான வளர்ச்சியைக் காணும் பொருளாதாரத்தில், மக்களின் கையில் பணப் புழக்கம், வருமான அதிகரிப்பின் மூலம் உயரவே செய்கிறது. சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்கள் வீடுகளை கட்ட/வாங்க முயற்சிப்பது   எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வே. மேலும், இந்த விதமான வருமானத்தின் காரணமாக அதிகரிக்கும் பணப்புழக்கத்தின்போது, பெரும்பாலானோர் வருமான வரியைக் குறைப்பதற்காகவே வீட்டுக் கடன்களைப் பெற முயற்சிக்கின்றனர். வீட்டுக் கடன்களுக்கான வருமான வரி விலக்கு, இந்த விதமான கடன்களுக்கான ஊக்குவிப்பை வழங்குகிறது எனலாம்.

கம்பெனி ஸ்கேன்

மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்கிறது. இது நகர்ப்புறத்தில் புதிய வீடுகள் கட்டப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட  31  சதவிகித  மக்கள் மட்டுமே நகரத்தில் வசிக்கின்றனர். இந்த அளவு, இன்னமும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது எனலாம்.

மேலும், இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60% பேர் முப்பது வயதுக்கும் கீழே இருக்கும் நபர்களாக இருக்கின்றனர். நாளடைவில் இவர்கள் அனைவரும் தனித்தனியாக வீடுகள் கட்டும் முயற்சியில் ஈடுபடு வார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

கம்பெனி ஸ்கேன்

எனவே, வீடுகளுக்கான தேவையும் அதற்கான கடன் வழங்கும் தொழிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது. தற்போதைய நிலவரப்படியே, நகர்ப்புறங்களில் வீடுகளுக்கான தட்டுப்பாடு, கிட்டத்தட்ட 18 மில்லியன் எண்ணிக்கையிலான வீடுகள் அளவில் இருக்கிறது என்கின்றன  புள்ளிவிவரங்கள்.

அரசாங்கமும் வீடு கட்டுவதை ஊக்குவிக்கும் வண்ணம் வீட்டுவசதிக் கடன்களுக்கான வருமான வரி விலக்கைத் தொடர்ந்து அளித்தே வருகிறது. இந்த வகை வரி விலக்குகள் வீடு கட்டுவோருக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க உதவுவதற்கு சமமாகிறது. அதனாலேயே பலரும் வீடு கட்டுவதில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர்.

ஜிடிபி ரீதியான அளவீட்டில்,  வீட்டுவசதிக் கடன் (அடமானத்துடன் கூடிய வகையில்) என்று பார்த்தால், இந்தியாவில் மிகவும் குறைவான அளவான 9% அளவுக்கே இருக்கிறது. இந்த விகிதாச்சாரம்  டென்மார்க்கில் அதிகபட்சமாக 94 சதவிகிதமும், இங்கிலாந்தில் 81 சதவிகிதமும், அமெரிக்காவில் 62 சதவிகிதமுமாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தத் துறையில் சிறந்ததொரு செயல்பாட்டைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், வாராக் கடன் அளவிலும் மிகவும் குறைந்த அளவான (கடந்த நிதியாண்டில்)  1 சதவிகிதத்துக்கும் (நீண்ட கால அடிப்படையிலும்) குறைவான அளவினையே கொண்டுள்ளதும்   குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிதி நிறுவனங்களுக்கு ஒரு அளவுகோலான ‘கேப்பிட்டல் அடிக்குவசி’ என்னும் அளவீட்டிலும் ஒரு திடமான நிலையையே கொண்டுள்ளது இந்த நிறுவனம். 

கம்பெனி ஸ்கேன்

வீட்டு வசதிக் கடன் வழங்குதல் என்ற தொழிலைத் தாண்டி, தன்னுடைய முதலீடுகளை வங்கித் துறை, ஆயுள் காப்பீடு மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ்,  அஸெட் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளிலும், துணை நிறுவனங்களிலும்  செய்துள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் கடன் வழங்கிய விதத்தைப் பார்த்தால் (சென்ற நிதியாண்டின் மத்தியில்), தனி நபர்களுக்கு வழங்கிய கடன் சுமார் 71 சதவிகிதமும்,  கார்ப்பரேட்டுகளுக்கு 9 சதவிகிதமும், கட்டுமானத் துறைக்கான கடன்களாக 12 சதவிகிதமும், லீஸ்/வாடகை வருமானத்துக்கு எதிரான கடனாக 6 சதவிகிதமும் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டு வசதிக் கடன் வழங்குவதில் 38 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருப்பது, வழங்கும் கடனுக்கும் சொத்தின் மதிப்புக்கும் இடையே கணிசமான இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வது, வாராக் கடன் வசூலிப்பதில் கவனத்துடன் இருப்பது, நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்குவது  போன்ற பல நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

வீடு என்பது பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய ஒன்று. பொருளாதாரம் செழுமையாக இருக்கும்போது மட்டுமே வேகமான வளர்ச்சியை வீட்டு வசதிக் கடன் நிறுவனங்கள் பெறும். பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்படும்போது, இந்தத் துறையில் வளர்ச்சி என்பது ஓரளவு குறையலாம். 

இந்தத் துறையில் போட்டிகளும் கணிசமான அளவில் நிலவிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும், செயல்படும் துறை ரீதியாக நீண்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏதாவது ஒரு காரணத்தினால் சந்தை வேகமான இறக்கத்தை சந்திக்கும்போது, வரும் கணிசமான விலை இறக்கத்தில் மட்டும் மூன்று முதல் ஐந்து ஆண்டு கால முதலீட்டுக்கான போர்ட் ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள சிறிய எண்ணிக்கையில் வாங்க, வாசகர்கள் தொடர்ந்து ட்ராக் செய்து வரலாம். 

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol (HDFC)/name of company/time duration)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு