Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964மு.சா. கௌதமன்

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்!

கடந்த வார பரிந்துரையில், இண்டெக்ஸ்  8550 - 8750 லெவல்களிலேயே வர்த்தகமாகும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதேநேரத்தில், இந்த ரேஞ்சுகளை உடைத்து வர்த்தகமாவதற்கு ஒரு சிறு சுணக்கம் இருக்கலாம் என்று கூறி இருந்தோம்.  நாம் சொன்னது அப்படியே நடந்திருக்கிறது. அதற்கு சந்தை நாம் குறிப்பிட்ட ரேஞ்சுகளிலேயே தங்கி இருந்ததும், ஆப்ஷன் டிரேட்களால் அதிக விலை ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோல், கடந்த வாரங்களில் சந்தை ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளுக்குள்ளேயே நிலையாக வர்த்தகமாக முயன்று முடியாமல், அதிக ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமானது. 

பேங்க் நிஃப்டியைப் பார்க்கும்போது, நல்ல சப்போர்ட் லெவல்கள் இருப்பதையே காட்டுகின்றன. 18900 புள்ளிகள் பேங்க் நிஃப்டிக்கு  நல்ல சப்போர்ட்டாக இருக்கிறது. இதுதான்  இதனுடைய குறைந்த புள்ளியாக இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேங்க் நிஃப்டி, கடந்த வாரத்தில் முன்னேறி வாரத்தின் இறுதியில் 19700 புள்ளியைத் தொட்டது.  எனவே, லாபம் கிடைத்திருக்கும்.

கடந்த வாரத்தின் இறுதியில் பங்கு வர்த்தகம் வலுவாகவே இருந்தது. எனவே, அடுத்து வரும்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வாரங்களில் சந்தைக்கு சில புதிய மொமென்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில், டிரேடர்கள் ரோல் ஓவர் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில்  கொள்ளவேண்டும். எனவே, மீண்டும் சந்தை உயர கூடுதலாக சில நல்ல செய்திகள் தேவைப்படுகிறது.

புதிய சாதகமான செய்திகள் இல்லாமல் நிஃப்டி 8750 என்கிற வலுவான ரெசிஸ்டன்ஸ் லெவல்களை கடப்பது சற்று கடினம்தான். சொல்லப்போனால், டெக்னிக்கலாக நிஃப்டியில் தற்போது பல ரெசிஸ்டன்ஸ்கள் இருக்கின்றன. அதேபோல், பேங்க் நிஃப்டியும் 19800-க்கு மேற்பட்ட புள்ளிகளில் வர்த்தகமாகி வரும்போது பல ரெசிஸ்டன்ஸ்கள் இருப்பதையே பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரங்களில் சந்தையில் நல்ல லாபத்தைப் பார்ப்பது  சற்று கடினம்தான். எனவே, சரியான புதிய சிக்னல்கள் வரும் வரை காத்திருக்கவும்.

எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் (EXIDEIND)

தற்போதைய விலை : 204.05

வாங்கவும்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பொதுவாக, மேல்நோக்கி பிரேக் அவுட் ஆவது  பங்கின் விலை ஏற்றத்துக்கான நல்ல அறிகுறியே.  இந்த சமயத்தில் சரியாகச் செயல்படவேண்டும். இப்போது அதுபோன்ற ஓர் அறிகுறி  இந்தப் பங்கின் சார்ட்டில் கடந்த வாரத்தில் உருவாகி இருக்கிறது.  கடந்த சில வாரங்களாக இந்தப் பங்கின் விலை கன்சாலிடேட் ஆகிக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பிரேக் அவுட் தேவைப்பட்டது. இந்தப் பங்கின் மொமென்டம் சார்ட்டில், பிரேக் அவுட், நல்ல மொமென்டம் வரவிருப்பதைக் காட்டுகிறது. எனவே, இந்தப் பங்கு அடுத்து வரும் வாரங்களில் ஏற்றம் காணக்கூடும். தற்போதைய விலையில்  வாங்கவும். 196 ரூபாய்க்கு கீழே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும். இலக்கு விலை 225 ரூபாய்.

ஏஷியன் ஆயில் ஃபீல்டு சர்வீசஸ் (BSE CODE: 530355)

தற்போதைய விலை: 83.25

வாங்கவும்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் இந்தப் பங்கில் நல்ல விலை  பிரேக் அவுட் பேட்டன் உருவாகி இருந்தது.  அதோடு இதன் சார்ட்டைப் பார்க்கும்போது, ஓர் அழகான ரவுண்டிங் பேட்டனைப் பார்க்க முடிந்தது. கடந்த வாரத்தில், பிரேக் அவுட்டின்போது நல்ல விலை ஏற்றத்தையும், வால்யூம் அதிகரித்தையும் நன்றாகவே பார்க்க முடிகிறது. அடுத்த வாரங்களி லும் இந்த வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்க லாம்.  பங்கின் தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். இலக்கு விலை சுமார் 95 - 100 ரூபாய். 75 ரூபாய்க்கு கீழே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.

கொரமண்டல்ஃபெர்டிலைர்சர்ஸ் (COROMANDEL)

தற்போதைய விலை:  276.60

வாங்கவும்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் ரசாயன உரங்கள் தொடர்பாக சில கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன என்கிற வதந்தி பரவியது. இந்த நிறுவனம், ரசாயன உரத் துறையில் பெரிய அளவில் பங்கு வகிப்பதால், இந்த நிறுவனப் பங்கின் விலை சற்றே முன்னேறத் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரத்தில்தான் இந்தப் பங்கின் விலை 62 சதவிகித ரிட்ரேஸ்மென்டை கடந்து வர்த்தகமாகத் தொடங்கியது. எனவே, வரும் வாரங்களில் இந்த பங்கின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இலக்கு விலை 300 ரூபாய். ஸ்டாப் லாஸ் 260 ரூபாய்.

தொகுப்பு: மு.சா. கௌதமன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு