Published:Updated:

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!
தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

தீபாவளி...

நம் அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கும் முக்கிய பண்டிகை. தொழிலுக்கும் முதலீட்டுக்கும் முக்கியமான நாள். அதனால்தான் அன்றைக்கு புதுக் கணக்கு தொடங்குவார்கள் பலர். அன்றைக்கு பங்கு வாங்கினால் அதிர்ஷ்டம் தரும் என்பதால்தான் தீபாவளி அன்று முகூர்த் வர்த்தகம் (முகூர்த் டிரேடிங்) நடக்கிறது.

தீபாவளி நெருங்கும் இந்த சமயத்தில் வாங்கி, நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ள ஐந்து பங்குகளை சென்னையைச் சேர்ந்த சோழா செக்யூரிட்டீஸ் (cholawealthdirect.com) நிறுவனத்திடம் கேட்டோம். அந்த நிறுவனத்தின் அனலிஸ்டுகளான எம்.சத்தியநாராயணன், கே.ஸ்ரீதேவி, ஆசிஷ், ஹேமந்த் மற்றும் பிரவீன், பல நூறு பங்குகளை அலசி ஆராய்ந்து, ஐந்து பங்குகளைத் தேர்வு செய்து தந்தனர். 

‘‘பரிந்துரை செய்யப்பட்ட பங்குகளைப் பார்க்கும்முன், தற்போது நிலவிவரும் பங்குச் சந்தையின் போக்குப் பற்றி முதலில் பார்த்து விடுவோம்’’ என்றபடி ஆரம்பித்தனர் அவர்கள்.
 
‘‘நடப்பு 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சற்று இறக்கத்தில் இருந்தாலும், அதன்பிறகு மத்திய அரசு எடுத்த சில முக்கிய கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங் களால் சந்தைகள் நல்ல ஏற்றத்தைக் காண ஆரம்பித்தன. சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்ட மசோதா, ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரை அமல் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளன.

இதன் காரணமாக, நிஃப்டி 9 சதவிகிதமும், சென்செக்ஸ் 6 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன. முக்கியமாக, நிஃப்டி மிட்கேப் 25 சதவிகிதமும், நிஃப்டி ஸ்மால் கேப் 19 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன.

பங்கு விலை உயர்வில் துறை வாரியாகப் பார்த்தால், மெட்டல், ஆயில் & காஸ் ஆகியவை முறையே 43 சதவிகிதமும், 37 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் 15 சதவிகிதமும், பொதுத்துறை நிறுவனங்கள் 14 சதவிகிதமும், வங்கிகள் 13 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. ஆனால், ஐடி 9 சதவிகிதமும், ஹெல்த்கேர் 3 சதவிகிதமும் இறக்கத்தைக் கண்டுள்ளன.

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

உள்கட்டமைப்புத் துறைகளில் அரசு செய்யும் முதலீடு, இந்த நிதி ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால் சிமென்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு நிறுவனங்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பருவ மழையும் பரவலாக இருப்பதால், விளைச்சல் நன்றாக இருக்கிறது. வருடாந்திர அடிப்படையில், 3.5% விளைச்சல் அதிகரித்துள்ளது.

வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதும் பாசிட்டிவாகப் பார்க்கப்படுகிறது. ஆட்டோ உதிரிப்பாகங்கள், நுகர்வோர் பொருட்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளன. இதனால் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சமநிலையில், வளர்ச்சியின் போக்கில் உள்ளன. நஷ்டத்தில் இருந்த நிறுவனங்களும் மீண்டு வருகின்றன.

நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாக இருப்பதால், இந்தியச் சந்தைகள் மேலும் வளர்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையைப் பட்டாசு, இனிப்புடன் சேர்த்து, நல்ல பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமும் கொண்டாடலாம்.

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இந்தப் பங்குகள் நீண்ட கால முதலீட்டுக்கு உகந்தவை என்றாலும் நாம் ஓராண்டு கால முதலீட்டுக்காக இந்தப் பங்குகளைப் பரிந்துரை செய்துள்ளோம். இனி  பங்குகள்...

வா டெக் வாபேக் (Va Tech Wabag)


நீர் சுத்திகரிப்புத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் இது. நீர் சுத்திகரிப்புக்கான

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

நிலையம் அமைப்பது, திட்டமிடுவது மற்றும் நீர் சுத்திகரிப்பு செய்வது என அனைத்திலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனம் தனது 157 தயாரிப்பு மற்றும் செயல்முறைகளுக்கு காப்பு உரிமம் வைத்துள்ளது. மேலும், 51 தயாரிப்புகள், காப்பு உரிமத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இதுவரை 2,250 திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்திய நீர் சுத்தகரிப்பு துறை சந்தையில் இதன் பங்களிப்பு 14% ஆகும்.

உலக அளவில் 3 சதவிகித நீர் மட்டுமே சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக நீர் சுத்திகரிப்பு செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்த நிறுவனத்துக்கான வளர்ச்சி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளை மையமாக வைத்து இந்தியா தற்போது தனது தொழிலைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இபிசி (EPC-Engineering Procurement Construction) தொழில் மாடலைக் கொண்டிருப்பதால், நிதி நிலையும் நன்றாகவே இருக்கிறது. மேலும், ஆர்டர்களின் எண்ணிக்கையும், வருமான வளர்ச்சியும் இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கிறது.

ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவதிலும், திட்டங்களை முடிப்பதிலும், முடிக்கப்பட்ட வேலைகளுக்கான பணம் வருவதிலும் தாமதம் ஏற்படுவது போன்றவை ரிஸ்க்காக கவனிக்கப்பட வேண்டியவை.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டு காலத்தில் ரூ.690 வரை உயர வாய்ப்புள்ளது.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்!

சிறு மற்றும் குறு வீட்டுக் கடன்களை அதிகமாக வழங்கி வருகிறது ரெப்கோ ஹோம்

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

ஃபைனான்ஸ். இது ரெப்கோ வங்கியின் துணை நிறுவனம். இது இந்தியா முழுக்க 151 கிளைகளைக் கொண்டுள்ளது. தென் இந்தியப் பகுதிகளில் 87% உள்ள டயர் இரண்டு மற்றும் மூன்றாம் நகரங்களில் தனது தொழிலைச் செய்துவருகிறது.

இதன் கடன் திட்டங்கள் நடுத்தர மக்களை எளிதில் சென்று சேரக்கூடியதாக இருக்கிறது. மேலும், பெரும்பாலான பெரு நிதி நிறுவனங்கள் நுழையாத பகுதிகளில் செயலாற்றுவதாலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இதற்கு உள்ளன.

இதனுடைய கடன் மதிப்பு, நிதி ஆண்டு 2012-லிருந்து 2016 வரையில் ஆண்டுக் கூட்டு வளர்ச்சி அடிப்படையில் 29 சதவிகித வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

2016 - 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டு வரையில், இதன் கடன் மதிப்பு ரூ.7,960 கோடி. இதன் நிகர வட்டி வருமானம் ஆண்டுக் கூட்டு வளர்ச்சி அடிப்படையில்  2012-லிருந்து 2016  வரையில் 31% ஆகும்.

இது நிர்வகிக்கும் சொத்துக்களின் தரமும் நன்றாக உள்ளன. இந்த நிதி ஆண்டில், இதன் நிகர வட்டி வருமான வளர்ச்சி மற்றும் நிகர வட்டி வரம்பு ஆகியவையும் ஆரோக்கியமாகவே உள்ளன.

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் தொய்வு, திட்டங்கள் நிறைவடைதலில் தாமதம், கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் மாற்றம் போன்றவை இந்த நிறுவனத்தைப் பாதிக்கும் காரணிகளாகும்.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டில் ரூ.985 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

ஜேகே லட்சுமி சிமென்ட்ஸ்!

வட இந்திய நிறுவனமான ஜேகே லட்சுமி சிமென்ட் நிறுவனத்தின் க்ளிங்கர் (எரிந்த நிலக்கரி

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

கட்டி) உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 6.2 மில்லியன் டன்னாகவும், சிமென்ட் உற்பத்தித் திறன் 8.6 மில்லியன் டன்னாகவும் உள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இந்த நிறுவனம் தனது விற்பனையைச் செய்து வருகிறது. சூரத்தில் புதிதாக ஒரு உற்பத்தி ஆலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிற நிலையங்களிலும் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த நிதி ஆண்டில் இதன் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும்.

சிமென்ட் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பெட் கோக் விலை, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.500 முதல் ரூ.600 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், உள்நாட்டில் நிலக்கரி விலையைக் காட்டிலும் 10-12% விலை குறைவாகவே கிடைக்கிறது. மேலும், இந்த நிதி ஆண்டில் புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான ஆர்டர்கள் இந்த நிறுவனங்களுக்கு இருப்பதால், இதன் வருவாயும் அதிகரிக்கும். மேலும், வடக்கு மாநிலங்களில் இதன் போக்குவரத்து செலவையும் குறைக்க திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் நிதி நிலையைப் பொறுத்தவரை, இதன் உற்பத்தி அளவு அதிகரிக்கப்படுவதாலும், செலவைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாலும், லாப வரம்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்பார்த்த வளர்ச்சி சாத்தியமாகாமல் போகலாம்.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டில் ரூ. 586 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சி 9 சதவிகிதமாக உள்ளது.

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

இதன் ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. காரணம், இதன் புதிய மாடல்கள் வெளியீடு பல புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

சீனா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இதன் விற்பனை அதிகரித்துள்ளது. லேண்ட் ரோவர் 17 சதவிகித வருடாந்திர விற்பனை வளர்ச்சியையும், ஜாக்குவார் 70 சதவிகித வருடாந்திர விற்பனை வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. ஆனால், வருடாந்திர நிகர லாப வளர்ச்சி 38% குறைந்துள்ளது. காரணம், இதன் வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய வருமானம் குறைந்த, சீனாவுடனான கூட்டு தொழில் மதிப்பும், யூரோ மதிப்பும் குறைந்ததும்தான்.

சீனா, பிரேசிலில் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டபிறகு, ஐரோப்பிய கண்டங்களில் ஒரிஜினல் பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் உற்பத்தி 1 மில்லியன் யூனிட்டுகள் அதிகரிக்கப்படும். இது தற்போதைய உற்பத்தியில் 30% ஆகும். மேலும், ஹெக்சா என்ற புதிய எஸ்யுவி மாடலை 2017 ஜனவரியில் அறிமுகப்படுத்த இருக்கிறது. தென் இந்தியப் பகுதிகளில் டீலர்ஷிப்களையும், விற்பனைக் கூடங்களையும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால், அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை 12-15% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருமானம் கணிசமான வளர்ச்சியை அடையும். இது அதன் பங்குகளிலும் பிரதிபலிக்கும். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டில் ரூ.625 வரை உயர வாய்ப்புள்ளது.

சிட்டி யூனியன் பேங்க்

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

தனியார் வங்கியான சிட்டி யூனியன் பேங்க் 525 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கும்பகோணத்தை சேர்ந்த இந்த வங்கி பெரும்பாலான தென் இந்தியப் பகுதிகளில் இயங்கி வருகிறது. இதன் மூன்றில் இரண்டு பங்கு கிளைகள் தமிழகத்தில் உள்ளன. 

துறை சார்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் இந்த வங்கியில், குறிப்பிட்டு சொல் கிற மாதிரி  புரமோட்டர்கள் என யாரும் இல்லை. இதில் எஃப்ஐஐ முதலீட்டாளர்கள் வைத்துள்ள பங்குகளின் அளவு 38.37% ஆகும்.

இதன் டெபாசிட் வளர்ச்சி, வருடாந்திர கூட்டு வளர்ச்சி அடிப்படையில், நிதி ஆண்டுகள் 2011-16 வரையில் 18 சதவிகிதமாக உள்ளது. நிதி ஆண்டு 2016-17 முதல் காலாண்டு நிலவரப்படி, டெபாசிட் கணக்கில் ரூ.21,200 கோடி உள்ளது.

மேலும், இந்த வங்கிக்கு நிகரான பிற வங்கிகள் மத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர

தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

நிறுவனங்களுக்கான கடன்களை வழங்குவதில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. இதன் வாராக் கடன் அளவும் குறைந்திருக்கிறது. இதன் நிகர வட்டி வருவாய், 2011-16 வரையிலான நிதி ஆண்டுகளில் ஆண்டுக் கூட்டு வளர்ச்சி அடிப்படையில் 18.5 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் இதன் பங்கு விலையும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டில் ரூ.156 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

முதலீட்டாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

தொகுப்பு: ஜெ.சரவணன்

50 ஆண்டுகள் கடந்தும் அசராத அமுல் பேபி!

அமுல் என்ற ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களில் மட்டுமே அதன் மொத்த விற்பனை 187 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2009-10 நிதி ஆண்டில் ரூ.8 ஆயிரம் கோடியாக இருந்த அமுலின் மொத்த விற்பனை, 2015-16 நிதி ஆண்டில் ரூ 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.விளம்பர உத்திகளில் அமுல் பேபி விளம்பரம் மிக வித்தியாசமானது. 1966-ல் முதல் முதலாக அமுல் பேபி ஒரு கற்பனை கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டது. அரசியல், சமூகம், நல்லது, கெட்டது, துக்கம், சந்தோஷம் என அனைத்து விஷயங்களையும் ஒரே ஒரு வரியில் விமர்சித்துவிடும் அந்த விளம்பரமே அமுல் வெற்றிக்கு  முக்கியமான காரணம் என்கிறார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு