Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்:

நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் அவற்றின் ரெசிஸ்டன்ஸ் ஜோன் நோக்கி செல்வதால், லாங் பொசிஷன்கள் வைத்திருப்பவர்கள் புராஃபிட் புக் செய்யவும் என கடந்த வாரம் சொல்லி இருந்தோம். அதன்படி செய்திருந்தால், லாபம் கிடைத்திருக்கும். வாரத்தில் நான்கு வர்த்தக தினங்களில் சந்தை சரிந்து வர்த்தகமானது. சிறிய ஏற்றத்துக்குப் பிறகு 8,550-க்கு இறங்கியது.

சிறிய ஏற்றத்தோடு சேர்த்து, அக்டோபர் 27 வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ முதிர்வின்போது, நிஃப்டி 8600-க்கு மேல் நிலைபெற்றிருக்கிறது. வரும் வாரங்களில் இன்னும் பாசிட்டிவ்-ஆன செய்திகள் வந்தால்தான் சந்தை மேலே ஏறும் சூழல் காணப்படுகிறது. ரோலோவர் நன்றாக நடந்திருக்கிறது. நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் பொசிஷன்கள் கடந்த மாதத்தை ஒட்டியே அமைந்திருக்கின்றன. அந்நிய நிதி முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகிறார்கள். நிஃப்டி புதிய சப்போர்ட் ஜோன் 8,580 - 8,600-ஆக இருக்கிறது. பல துறைப் பங்குகள் தற்போதைய நிலையில் ஏற்றத்தில் இல்லை என்பதால், நிஃப்டி அதன் பழைய 8700-க்கு ஏற்றம் காண்பது கஷ்டம்தான். எனவே, முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கில் வர்த்தகம் மேற்கொள்வதற்குப் பதில், பங்குகளின் போக்குகளைக் கவனித்து வர்த்தகம் மேற்கொள்வது நல்லது. தற்போதைய நிலையில், குறைந்த ரிஸ்க் அல்லது அதிக வாய்ப்பு என்பது போல் வர்த்தகத்துக்கான வாய்ப்பு இல்லை என்பதை டிரேடர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மாருதி சுஸூகி இந்தியா (MARUTI)

தற்போதைய விலை: ரூ.5,860

வாங்கலாம்


தற்போதைக்கு மாருதி சுஸூகி இந்தியா பங்கின் மதிப்பீடுகள் சந்தையில் மிக அதிகமாக இருந்தாலும், இந்தப் பங்கின் டிரெண்ட் நன்றாகவும், வலுவாகவும் இருக்கிறது. இந்தப் பங்கின் விலை ஏற்றங்கள் சீரானதாகவும், நிலையான தாகவும் இருப்பதால், இதன் விலை ஏற்றம் மேலும் தொடரலாம் எனலாம். எனவே, தற்போதைய விலையில் இதன் பங்குகளை வாங்கலாம். இந்தப் பங்குக்கு குறுகிய கால இலக்கு விலை 6,050 ரூபாய். ஸ்டாப் லாஸ் 5,750 ரூபாய் வைத்துக் கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

த்ரீபுவந்தாஸ் பீம்ஜி ஜாவேரி (TBZ)

தற்போதைய விலை: ரூ.87

வாங்கலாம்


தற்போதைக்கு ஜுவல்லரி சம்பந்தப் பட்ட பங்குகள் சந்தையில் நன்றாக வர்த்தகமாகி வருகின்றன. இதில் த்ரிபுவந்தாஸ் பீம்ஜி ஜாவேரி நிறுவனப் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த பல மாதங்களாக இந்த நிறுவனம் பல முன்னேற்றங்களைக் கண்டுவருகிறது. இதனை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதோடு, இந்த பங்கின் டெய்லி சார்ட்டில் ஃப்ளாக் (flag) பேட்டன் உருவாகி இருக்கிறது. எனவே, மேல்நோக்கி ஒரு பிரேக் அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை 103 ரூபாய். 80 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிஷ்மென் பார்மா (DISHMAN)

தற்போதைய விலை: ரூ.242

வாங்கலாம்


கடந்த வார இறுதியில் பார்மா துறை சார்ந்த பங்குகள் நல்ல டிமாண்டுடன் வர்த்தகமாயின. அதோடு சில புதிய ஏற்றங்களை இந்தத் துறை சார்ந்த சில பங்குகள் கண்டன. செப்டம்பர் காலாண்டு முடிவுகள் ஒரு கலவையாகவே பார்மா துறைக்கு இருந்தது. கடந்த வாரத்தில் இந்தப் பங்கு மீண்டும் தன் இடைகால சப்போர்ட் லைனுக்கே வந்துவிட்டதை பங்கின் டெய்லி சார்ட்டில் பார்க்க முடிகிறது. அதோடு அந்த சப்போர்ட் லைனில் இருந்து விலை முன்னேற விரும்புவதையும் சார்ட்டில் பார்க்க முடிகிறது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். 265 ரூபாயை இலக்கு விலையாக வைத்துக்கொள்ளவும். 230 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு