எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கும் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஒன்று, முறைப்படி நிபுணர்களிடம் பயிற்சி பெற்று கற்றுக் கொள்வது. இரண்டாவது, எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் களமிறங்கி தவறுகள் செய்து பட்டுத் தெளிந்து கற்றுக்கொள்வது.

இன்றைய சூழலில் நிதித் திட்டமிடலை எவ்வாறு கற்றுக்கொள்வது? தானாகவே தவறுகள் செய்து, அந்தத் தவறுகளில் இருந்து நிதித் திட்டமிடலைக் கற்றுக்கொள்ள முடியுமா? நிதித் திட்டமிடலைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு இன்றைய சூழலில் ஒவ்வொருவருக்கும் அவகாசம் இருக்கிறதா?

இத்தனை கேள்விகளுக்கும் சுருக்கமான பதில்... கற்றுக்கொள்வதும் சிரமம்; கால அவகாசமும் குறைவு. அப்படி என்றால், தேர்ந்த நிதித் திட்டமிடும் ஆலோசகரைக் கண்டறிந்து, அவரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிடலாம்.

நிதித் திட்டமிடலைத் தானாகவே செய்ய முனையும் முதலீட்டாளர்கள், கீழ்கண்ட ஐந்து சிக்கல்களில் ஏதாவது ஒன்றில் சிக்குகிறார்கள். முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலமோ, நல்ல நிதித் திட்டமிடுபவரை நாடுவதன் மூலமோ இந்தச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்

1. பணவீக்கத்தை உதாசினப்படுத்துதல்!

இன்று நாம் வார இறுதியில் ஒரு முறை குடும்பத்துடன் சென்று ஹோட்டலில் சாப்பிட ஆகிற செலவுதான், நமது தந்தை நம் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்கள் வாங்கிய செலவாக இருக்கிறது.

நாம் நமது குழந்தைகளின் ஆரம்பப் பள்ளி அட்மிஷனுக்காகக் செய்கிற செலவு, நமது பெற்றோர், நமது கல்லூரிப் படிப்புக்காகச் செய்த செலவைவிட அதிகமாக இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், பணவீக்கம்.

உதாரணமாக, ஒருவர் 10 வருடங்கள் கழித்து வீடு வாங்குவதற்கு நிதித் திட்டமிடல் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எந்த மாதிரியான வீடு, எந்த இடத்தில் வாங்க விரும்புகிறார், இன்று அந்த வகை வீடு வாங்க எவ்வளவு செலவாகும், இந்தச் செலவு பணவீக்கம் காரணமாக, பத்து ஆண்டுகள் கழித்து எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.

வீடு வாங்க, தன்னுடைய செலவு போக மீதமிருக்கும் தொகையைச் சேமிக்க வேண்டும். அவருடைய செலவு வருடந்தோறும் பணவீக்கத்தால் அதிகரிக்கும். அது அவருடைய சேமிக்கும் திறனைப் பாதிக்கும். இந்த இரண்டு நிலைகளிலும் பணவீக்கத்தை உதாசினப்படுத்தாமல் சரியாகக் கணக்கிட்டால் சிக்கலைத் தவிர்க்கலாம்.

2.இலக்கினைப் பற்றிய தெளிவின்மை!

இன்று பல முதலீட்டாளர்கள் எதற்காக தேவைப்படும், எவ்வளவு தேவைப்படும், எப்போது தேவைப்படும் என்று எதைப் பற்றியும் யோசிக்காமல், கையில் கிடைக்கிற பணத்தை ஏதாவதொரு முதலீட்டில் முதலீடு செய்து வருகிறார்கள்.

சாதாரணமாக வீட்டில் சமையல் செய்யும்போதுகூட எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும், எப்போது சாப்பாடு தயாராக வேண்டும், என்னென்ன சமையல் செய்ய வேண்டும் என்ற தெளிவோடுதான் சமையலை ஆரம்பிக்கிறோம். வீட்டில் கிடைக்கிற மளிகைப் பொருட்களைக் கொண்டு ஏதோ ஒன்றை அளவில்லாமல், கால நேரம் பார்க்காமல் சமைத்து வைப்பது கிடையாது.

ஒருவேளைக்கு சமையல் செய்வதற்கே இவ்வளவு தெளிவாக இருக்கும்போது, எதற்காக நிதித் திட்டமிடல் அல்லது முதலீடு செய்கிறோம் என்ற இலக்கினைப் பற்றிய தெளிவு வேண்டாமா?

நம் எதிர்கால இலக்கினைப் பற்றிய தெளிவு கிடைக்க மூன்று அம்சங்களைக் கவனிக்க வேண்டும். அவை, அளவீடு, தரம், எப்போது இலக்கை அடைவது போன்றவை. மேலே குறிப்பிட்ட வீடு வாங்க வேண்டும் என்ற இலக்கையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

அளவீடு: நமது இலக்கினுடைய அளவீடு தொடர்பான விஷயங்கள். நாம் வாங்க இருக்கும் வீடு எத்தனை சதுர அடி, அறை, தளங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளி மற்றும் அலுவலகத்திலிருந்து எவ்வளவு தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்பதைப் போன்ற நமது இலக்கு சார்ந்த அளவீடு தொடர்பான விஷயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தரம்: அடுத்தக் கட்டமாக நம்முடைய இலக்கினைப் பற்றிய தரம் தொடர்புடைய கேள்விகளுக்கான தெளிவான பதிலை ஆராய வேண்டும்.

எந்தப் பகுதியில் வீடு வாங்க இருக்கிறோம், நகரத்துக்குள்ளேயா, நகரத்துக்கு ஒதுக்குப்புறமாகவா, அடுக்குமாடிக் குடியிருப்பா, தனிவீடா, கட்டுமானத் தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதுதான் அவை.

எப்போது இலக்கை அடைவது? நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளில் நம்முடைய இலக்கினை அடைய வேண்டும் என்பதுப் பற்றிய துல்லியமான கணிப்பு, தெளிவு இருக்க வேண்டும். குறுகிய கால அவகாசம்தான் இருக்கிறது என்றால், அதற்கேற்ப முதலீடுகளையும், சேமிப்பின் அளவையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கால அவகாசம் இருக்கும்பட்சத்தில், அதற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

3. எதிர்பாராத செலவு - இடர்களுக்கு ஒதுக்கீடு!

இதைப் பற்றி பேசாத நிதி ஆலோசகர்கள் இல்லை. இதைப் பற்றி எழுதாத ஊடகங்கள் இல்லை. இதைப் பற்றித் தெரியாத முதலீட்டாளர்கள் இல்லை.

ஆனாலும் எதிர்பாராத செலவு - இடர்களுக்கு பலரும் நடைமுறையில் ஒதுக்கீடு செய்வது இல்லை. இதனால் ஏற்படும் சிக்கலை பலரும் உணர்வதில்லை.

உதாரணமாக, கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது பலருக்கும் தங்களுடைய வீடு வாகனங்களைச் சரி செய்ய எதிர்பாராதவிதமாகத் திடீரென்று பணத்தேவை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் ஏற்கெனவே இத்தகைய தேவைகளுக்காக நிதியைச் சேர்ந்து வைத்திருந்தவர்களால் எளிதாக சூழ்நிலையை எதிர்கொள்ள முடிந்தது. மற்றவர்கள் சற்று நீண்ட கால முதலீடுகளிலிருந்து பணத்தை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இத்தகைய இன்னல்களை எளிதாக எதிர்கொள்ள நிதி ஒதுக்கீடு மிக அவசியம்.

4. குறைவான காப்பீடு!

இதைப் பற்றியும் அனைத்து முதலீட்டாளர் களுக்கும் நன்றாகத் தெரியும். இருந்தும் தேவையை விடக் குறைவான ஆயுள் காப்பீடே பலரும் வைத்திருக்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்பட்டால் குறைவான காப்பீட்டால் தங்களது குடும்பம் எவ்வாறு நிலை குலையும் என்பதை இவர்கள் முழுவதுமாக உணரவில்லை. எனவே, அனைவரும் தங்களுடைய வருமானத்துக்கு ஏற்றவாறு டேர்ம் இன்ஷூரஸ் போதிய அளவு எடுத்துக்கொள்வது அவசியம்.

5. சாத்தியப்படாத அனுமானங்கள்!

நீண்ட காலத்துக்கான நிதித் திட்டமிடலில் ஈடுபடும்போது சில அனுமானங்களை மேற்கொண்டுதான் கணக்கீடு செய்ய வேண்டும். இந்த அனுமானங்கள் நடைமுறையில் சாத்திய மானதாக இருக்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமில்லாத அனுமானங்கள் நம்முடைய நிதித் திட்டத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி விடும்.

பொதுவாக, முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் தவறான அனுமானங்கள் என்னென்ன?

பணவீக்கத்தைக் குறைவாக அனுமானிப்பது, தங்களுடைய வருவாய் அதிகரிப்பு சதவிகித்தை மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ கணக்கிடுவது; முதலீட்டிலிருந்து பெற வேண்டிய வருமானத்தை அதிகமாகக் கணக்கிடுவது; முதலீட்டிலிருக்கும் இடரைக் குறைவாகக் கணிப்பது போன்றவை. தவறான அனுமானங்களைத் தவிர்த்து சாத்தியப் படக்கூடிய அனுமானங்களை மேற்கொள்வது சிக்கலைத் தவிர்க்கும்.

மேற்கூறிய 5 சிக்கல்களையும் தெளிவான கண்ணோட்டத்துடனும் முன்னெச்சரிக்கை யுடனும் செயல்பட்டோ அல்லது நல்ல நிதி திட்டமிடுபவரின் உதவியை நாடுவதன் மூலமோ தவிர்க்கலாம். இனியாவது, நாம் நிதி ஆலோசகரை நாடுவோம்!