கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500, ரூ.1,000 செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தவுடன், பெரும் பணக்காரர்கள் இத்தனை நாளும் பதுக்கி வைத்திருந்த பணத்தை வெளியில் எடுத்த மாதிரி, நம் வீட்டுப் பெண்களும் ஒளித்து வைத்திருந்த பணத்தை வெளியே எடுத்துள்ளனர். (நம் வீட்டுப் பெண்கள் சிறுவாடாக இவ்வளவு பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார்களா என்பது இப்போதுதான் பல ஆண்களுக்கும் தெரிய வருகிறது!)

நமது பெண்கள் பலரும், அது இளைய தலைமுறைப் பெண்களாகட்டும் அல்லது முதியோர்களாகட்டும், அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் செலவழித்தது போக மீதியை மணிபர்ஸிலோ, பீரோவில் துணிகளுக்கு இடையிலோ அடியிலோ அல்லது அஞ்சறைப் பெட்டியிலோ போட்டு வைத்து சேர்த்து வைப்பது இயல்பு. அவசரத்துக்கு உதவுமே என்கிற ஒரே எண்ணம்தான் இதன் அடிப்படை. மேலும், பணம் கையிலிருப்பது அவர்களுக்கு ஒரு மனோ தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது.

ஆனால், நமது மத்திய அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்புக்குப் பிறகு, இனி நமது பெண்கள் வீட்டில் பணம் சேர்த்து வைப்பதை ஒரு முறைக்குக்கு இரு முறை யோசிப்பார்கள். இதுபோல் யோசிப்பவர்களுக்கு சிறுவாட்டுப் பணத்தைச் சேர்த்து வைக்க வேறு என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்று பார்ப்போம்.

நமது இந்தியப் பொருளாதாரத்தில் இனிவரும் காலங்களில் ரூபாய் நோட்டுகளின் உபயோகம் குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காசோலையில் ஆரம்பித்து, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, , நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ், ஆன்லைன் பணப் பரிமாற்றம் என பல வகையான பேமென்ட் முறைகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளைப் போல, நமது நாடும் பணமில்லாத ஒரு பொருளாதாரமாக (Cashless economy) வேகமாக மாறி வருகிறது. ஆகவே, ‘அவசர செலவுக்காக நான் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்களின் எண்ணிக்கையும் இனி படிப்படியாகக் குறையும்.

பணமாக வைத்திருப்பதன் மற்றொரு பெரிய பாதகம், அந்தப் பணம் குட்டி போடாது! நம் நாட்டில் இருக்கும் பணவீக்கத்துக்கு, பணம் குட்டி போட்டால்தான் நாம், நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவின் பொருளாதாரம் வளர வளர, சிறுவாட்டுப் பணத்தின் தொகையும் கூடிக் கொண்டு வருகிறது. ஆயிரங்களில் அல்லது லட்சங்களில் இருக்கும் இந்த சிறுவாட்டுப் பணத்தை கீழ்கண்ட முறைகளில் சேர்த்து வைக்கலாம்:

1. அஞ்சலக சேமிப்புக் கணக்கு

2. வங்கி சேமிப்புக் கணக்கு

3. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் லிக்விட்/ அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள்

நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று முறைகளிலும் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம். தேவைப்படுகிறபோது வேண்டிய பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், போனஸாக இருக்கும் நாட்களுக்கு வட்டியும் கிடைக்கும். இந்த மூன்று வகை சேமிப்புகளையும் சுருக்கமாக பார்ப்போம்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு : நாடெங்கிலும் ஒன்றரை லட்சத்துக்கு மேலான அஞ்சலகங்கள் உள்ளன. 8,086 மக்களுக்கு ஒரு அஞ்சலகம் வீதம் உள்ளது. மேலும், கிட்டத்தட்ட 90% அஞ்சலகங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.

சேமிப்புக் கணக்கு திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.20 தேவை. ரூ.50 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக இருக்க வேண்டும். காசோலை வசதி வேண்டும் என்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 இருக்க வேண்டும். மைனர் பெயரிலும் கணக்குத் திறக்கலாம். ஆண்டுக்கு 4% வட்டி கிடைக்கும். கோர் பேங்கிங் வசதி உள்ள அஞ்சலகங்களில் உள்ள கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு வசதி உள்ளது. மூன்று பேர் வரை ஜாயின்டாக கணக்குத் திறந்துகொள்ளும் வசதியும் உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அல்லது வீட்டுக்குப் பக்கத்தில் அஞ்சலகம் இருக்கும் பெண்களுக்கு இந்தக் கணக்கு சிறந்ததாக அமையும்.

வங்கி சேமிப்புக் கணக்கு: நாடெங்கிலும் பல்லாயிரக் கணக்கான வங்கிகள் உள்ளன. நமது மத்திய அரசாங்கம், பல விதமான அரசு மானியங்களை வங்கிக் கணக்குகள் மூலம்தான் பரிவர்த்தனை செய்வோம் என்று கூறியதால் பல கோடி வங்கிக் கணக்குகள் நாடெங்கிலும் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் திறக்கப்பட்டுள்ளன. இந்த விதமான கணக்குகளில் மினிமம் பேலன்ஸ்கூட இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
இவ்வகைக் கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் என்று அழைக்கப் படுகின்றன. இலவச ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற பல வசதிகள் உள்ளன.

பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்குக்கு 4% வட்டியை வழங்குகின்றன. ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்திருந்தால், 5% அல்லது 6% வட்டியை வழங்குகின்றன. பெரும்பாலான வங்கிகள், ஏடிஎம் கார்டை சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.

செக் புக் வசதியும் வங்கியைப் பொறுத்து, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பேலன்ஸ் தொடர்ந்து வைத்திருந்தால் வழங்கப்படுகிறது. ஆன்லைன் பேங்கிங் வசதியையும் அனைத்து வங்கிகளும் வழங்குகின்றன. தேவைப்பட்டபோது பணத்தைப் போடவோ, எடுத்துக்கொள்ளவோ செய்யலாம். தங்களது சிறுவாட்டுக்கு என பெண்கள் தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கைத் திறந்து கொள்ளலாம்.

லிக்விட் / அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த வகையான கணக்குகளை வழங்குகின்றன. இந்த வகை திட்டங்களில் நுழைவு, வெளியேற்றுக் கட்டணங்கள் ஏதும் கிடையாது. எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம் அல்லது திரும்ப எடுத்துக் கொள்ளலாம். ரொக்கமாக முதலீடு செய்ய முடியாது.

காசோலை அல்லது ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் மூலமாகத்தான் முதலீடு செய்ய முடியும். அதுபோல் உங்களுக்கு தேவை என்று கேட்கிறபோது உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். இந்தத் திட்டங்களின் ஒரு பெரிய பிளஸ் பாயின்ட், சேமிப்புக் கணக்குகளைவிட அதிகமான வட்டியை / வருமானத்தைத் தரும். மாதாந்திர முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி முறையையும் இந்தத் திட்டங்கள் வழங்குகின்றன.

மினிமம் ரூ .500-லிருந்து இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ரிலையன்ஸ், டி .எஸ்.பி போன்ற ஃபண்ட் நிறுவனங்கள் 30 நிமிடத்தில் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியையும் வழங்குகின்றன. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஏடிஎம் கார்டையும் இதுபோன்ற முதலீட்டுக்கு வழங்குகிறது.

முதலீட்டுக்கு ஏற்ற சில நல்ல திட்டங்களை தேர்வு செய்து அட்டவணையில் தந்துள்ளோம். பெண்கள் தங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் பணத்தை ரொக்கமாக வைத்துக்கொள்ளாமல், இதுபோன்ற திட்டங்களில் தேவைக்கு ஏற்றாற்போல் முதலீடு செய்யலாம்.