Published:Updated:

முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!

முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!
பிரீமியம் ஸ்டோரி
முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!

சேனா சரவணன்

முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!

சேனா சரவணன்

Published:Updated:
முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!
பிரீமியம் ஸ்டோரி
முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!
முதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு!

னியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தார் சிவராமன். அவர் சம்பளத்தில் பெரும் பகுதியை முதலீடு செய்து வந்தார். நன்றாகத்தானே இருக்கிறோம் என்று நினைத்து, ஆயுள் காப்பீட்டு பாலிசி எதையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டார். திடீரென ஒரு நாள் எதிரே வந்த வாகனம் மோதியதால், அந்த இடத்திலே சிவராமன் மரணம் அடைந்தார். அதன்பிறகு அவரது குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. 

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் இல்லாத போதும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எனில், ஆயுள் காப்பீடு பாலிசி அவசியம். சொத்து அடமானம் வாங்கும்முன், வீட்டுக் கடன், கார் கடன் வாங்கும்முன் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். 

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக முதலீட்டை ஆரம்பிக்கும்முன், குழந்தைகளின் படிப்புக்குத் தேவைப்படும் தொகையை எடுத்துக்கொண்டு, அந்த அளவுக்கு ஏற்கெனவே எடுத்துள்ள கவரேஜ் தொகையைவிட கூடுதலாக, இந்தச் செலவுகளுக்கான தொகையையும் சேர்த்து ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். 

உதாரணத்துக்கு, 30 வயதுள்ள ஒருவரின் குழந்தைக்கு கல்வி, திருமணத்துக்கு ரூ.25 லட்சம் தேவை. அதற்கான முதலீட்டை ஆரம்பிக்கும்முன், அதே தொகைக்கு குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.  

30 வயதுள்ள ஒருவர் ரூ.25 லட்சம் கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை 30 ஆண்டுகளுக்கு எடுத்தால், ஆண்டுக்கு சுமாராக ரூ.5,000 பிரீமியமாகக் கட்டினாலே போதும். எதிர்காலத்தில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதனால் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற விஷயங்கள் பாதிக்காமல் இருக்க, டேர்ம் பாலிசி மூலம் கிடைக்கும் இழப்பீடு மிகவும் உதவிகரமாக இருக்கும்!