Published:Updated:

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!
பிரீமியம் ஸ்டோரி
கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

வரவணை செந்தில்

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

வரவணை செந்தில்

Published:Updated:
கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!
பிரீமியம் ஸ்டோரி
கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

‘க்ரே மார்க்கெட்’ - சந்தையில் சரளமாக கிடைக்காத பொருட்களைக் ‘காதும் காதும்’ வைத்த மாதிரி வாங்குகிற இடம்... மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த மார்க்கெட் நிறையவே பிரபலம்தான்.  ‘க்ரே மார்க்கெட்’ என்றால்தான் என்ன..? 

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

‘க்ரே மார்க்கெட்’ என்பது கள்ளச்சந்தை அல்ல. ஆகையால் இதனைப் பிரச்னைக்குரிய விஷயம் என்று நினைத்துப்  பயப்படத் தேவை இல்லை. இதை ‘பேரலல்லல் சந்தை’ (Parallel market) என்றே குறிப்பிடுகின்றனர். அப்படி என்றால்..?

நேரடிச் சந்தையில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு சட்டபூர்வமான உரிமைகள் இருக்கும். அது மாதிரியான உரிமைகள் இதில் இருக்காது. ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பொருளை விற்பனை செய்ய, அந்த நிறுவனத்தின் நேரடி ஷோரூம் ஒரு ஊரில் இல்லாத நிலையில், மூன்றாம் நபரிடமிருந்து வாங்குவதுதான் ‘க்ரே மார்க்கெட்’ விற்பனை.

உதாரணமாக, தற்போது ஆப்பிள் மொபை லின் லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 7 அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் வெளியானது. இந்த போன் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்பே எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பலரும் துடித்தார்கள். அமெரிக்காவிலிருந்து ஆப்பிள் 7-யை வாங்கிக் கொண்டு வந்தவர்களிடம் அதிக விலை கொடுத்து அந்த போனை வாங்கினார்கள். இப்படி ஒரு பொருளை நேரடியான அதன் விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்க முடியாத நிலையில்,  பல தரப்பட்ட பொருட்களை மூன்றாம் நிலையில் இருந்து வாங்குவதுதான் ‘க்ரே மார்க்கெட்’. 

‘க்ரே மார்க்கெட்’ என ஒன்று உருவாவதன் முதல் புள்ளியாக இருப்பது பற்றாக்குறைதான். அதற்கு அடுத்தபடியாக இருப்பது, விலை. இன்று உலகமயமாக்கல் என்பது  நடைமுறை ஆகிவிட்டதால், விலை காரணமாக நேரடி விற்பனையாளரிடம் வாங்காமல் க்ரே சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தை உருவாக பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள். அந்தக் காரணங்களை இனி பார்ப்போம். 

மூன்று வகை மார்க்கெட்!


இந்த க்ரே மார்க்கெட்டை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். 

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

1.க்ரே மார்க்கெட் சந்தைக்குப் புதிதான ஒரிஜினல் பொருட்கள், ஆனால் அங்கீகரிக்கப் படாத வழிகளில் கிடைக்கும்.

2.க்ரீன் மார்க்கெட் அங்கீகரிப்பட்ட டீலர்களிடம் வாங்கிய, பயன்படுத்தப்பட்ட பொருட்களின் சந்தைதான் இது.

3.டார்க் மார்க்கெட்
க்ரே மார்க்கெட்டுக்கும் ப்ளாக் மார்கெட்டுக்கும் நூலிழை வித்தியாசத்தில் இயங்கும் சந்தை.

டார்க் மார்க்கெட்டில் குரூட் ஆயில், இறக்குமதி செய்யப்பட்ட உணவு தானியங்கள் போன்றவற்றை விற்பார்கள், வாங்குவார்கள். இதை செய்யும் போது இம்மி பிசகினாலும் கள்ளச்சந்தை, பதுக்கல் போன்ற குற்றங்களுக்கு ஆளாக நேரிடும்.

மலிவு விலைப் போட்டி!

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்களை விற்க அதிகப்படியான டிஸ்ட்ரிபூட்டர்களை நியமிக்கிறார்கள். அதிகப்படியான விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்ட காரணத்தால், அவர்களுக்குள் பொருளை விற்பதில் போட்டி ஏற்படுகிறது. ஒருவரின் எல்லையில் மற்றொருவர் தங்கள் லாபத்தைக் குறைத்து விற்கத் தொடங்குகிறார். ஆனால், பொருட்களுக்கு உரிய பில் போன்றவை அதற்குக் கிடைக்காது என்பதால், ஒரிஜினல் பொருள்; ஆனால், சந்தையைவிடக் குறைந்த விலை என்ற நிலை ஏற்படும்.

வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விலைகள்!

பொருளை அது உற்பத்தி ஆகும் நாடுகளிலிருந்து வாங்கி, விற்பனையாகும் நாடுகளில் விற்பது. உதாரணமாக, இந்தியாவில் தயாராகும் பின்னலாடைகள் ஐரோப்பிய சந்தைக்கு விற்பனைக்குச் செல்கின்றன. ஆனால், இந்தியாவின் உற்பத்தி விலைக்கு ஐரோப்பிய சந்தை விலைக்கும் நிச்சயமாகப் பெரிய வேறுபாடு இருக்கும். அதைப் பயன்படுத்தி க்ரே மார்க்கெட்கள் உருவாகின்றன.

விற்பனை இலக்கு!

உற்பத்தியாளர்கள், தங்களின் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நிர்ணயிக்கும் விற்பனை இலக்கு க்ரே மார்க்கெட்டின் சாத்தியங்களை அதிகரிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இவ்வளவு பொருட்களை விற்கவேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிப்பதால், அந்தப் பிரதிநிதிகள் சந்தை விலையைவிடக் குறை வான விலையில் பொருட்களை விற்பதனால் ஏற்படுகிறது.

‘க்ரே மார்க்கெட்டில்’ இந்த பொருட்கள் தான் விற்பார்கள் என்றில்லை. செல்போன் கவர் தொடங்கி, கார் வரை பல பொருட்களை விற்பார்கள்.  

 

கலகல கார்கள்!

இந்தத் துறையில் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்படும் டிமாண்டைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுவதால், க்ரே மார்க்கெட் கொடிகட்டிப் பறக்கிறது. இன்று பெரும்பாலான கார் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் கால் பதித்துவிட்டன. ஒரு குறிப்பிட்ட மாடல் கார் இந்தியாவில் வெற்றிகரமாக விற்பனையாகும்போது, அதனுடைய ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு அதிகம் தேவை ஏற்படும். அப்படியான சூழலில் ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ்களைவிட குறைவான விலையில் ஒரிஜினல் அல்லாத ஸ்பேர்ஸ் க்ரே சந்தையில் விற்பனைக்கு வரும். இது சட்டத்துக்கு புறம்பானதல்ல. ஆனால், பில் இல்லாமல் வாங்குவதால், சட்டரீதியான பாதுகாப்பு (அதாவது, நுகர்வோர் பாதுகாப்பு விதிகளுக்குப் பொருந்தாது) இதற்குக் கிடைக்காது. அதே மாடல் மற்றொரு நாட்டில் டிசைனில் மட்டுமே சில மாற்றங்களுடன் இங்குள்ள விலையைவிடக் குறைவான விலையில் கிடைக்கும்போது, அங்கேயிருந்து ஸ்பேர்ஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு க்ரே மார்க்கெட்டில் விற்கப்படும்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் இயங்கும் க்ரே மார்க்கெட்டில் முன்னணியில் இருப்பது ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையே ஆகும். குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் பைக் ரகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாதவை என்பதால், ‘பயன்படுத்திய பைக்குகள்’ எனக் குறிப்பிடப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பைக்குகளின் விலை, ஷோரூம்களின் விலையைவிட மிகக் குறைவாகவே இருப்பதால், க்ரே மார்க்கெட் அங்குச் செழிப்பாக இயங்குகிறது.

  வீடியோ கேம்ஸும் கிடைக்கும்!

வெளியில் தெரியாமல், ஆனால் அதே நேரம் செல்போன்  விற்பனைக்கு இணையான பணம் புழங்கும் துறையாக இருப்பது வீடியோ கேம்ஸ் சந்தைதான். இந்தியாவில் வெளிநாடுகளைப் போல, இணையத்துடன் இணைத்து விளையாடும் பழக்கம் இல்லாமல் இருப்பதால், சிடிகளில் நகலெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் வீடியோ கேம்ஸ்களுக்கு பெரிய தடை இருப்பதில்லை. 90-களில் விளையாடப்பட்ட கணினி கேம்ஸ்கள்கூட இந்தியாவில் இன்னும் புழக்கத்தில் இருப்பது இந்தத் துறையில் க்ரே மார்க்கெட்டை தக்க வைக்கிறது.

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

இவை மூன்றும்தான் இன்று முன்னணியில் உள்ளன என்ற போதிலும் ஆயிரக்கணக்கான பொருட்களுடன் க்ரே மார்க்கெட் இயங்கியபடிதான் உள்ளது.

பாதிப்புகளும் உண்டு!

இந்த க்ரே மார்க்கெட்டினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?  கம்பெனி நிர்ணயித்த தொகையைவிடக் குறைவான விலையில் பொருட்களை க்ரே சந்தையில் விற்கத் தொடங்கும்போது, அந்தப் பொருட்களுக்காக உற்பத்தியாளர் நிர்ணயித்த லாபம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. தவிர, க்ரே மார்க் கெட்டுக்கு வரும் பொருட்கள் நிறுவனத்தின் உத்திரவாதத்தை இழக்கின்றன. அப்படி விற்கப்படும் பொருட்களில் ஏற்படும் குறைபாடுகள் விற்பவரைப் பாதிக்காமல் உற்பத்தியா ளரின் ‘பிராண்டின்’ மீது அவப்பெயரை உண்டாக்குகின்றன.

நம்மூர் க்ரே மார்க்கெட்டுகள்!

கிறங்கடிக்கும் க்ரே மார்க்கெட்!

1.நேரு ப்ளேஸ்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருக்கும் நேரு ப்ளேஸில் அங்கிகரீக்கப்பட்ட டீலர்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றனர். அனைத்து வகையான மென்பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. மத்திய இந்தியாவில் இருக்கும் பிரதானமான எலெக்ட்ரானிக்ஸ் பஜாரான இது, மிகப் பெரிய க்ரே சந்தையும்கூட. 

2.மதன் தெரு

கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த தெருக்களில் ஒன்றான மதன் தெரு கிழக்கு இந்தியாவுக்கான கம்ப்யூட்டர் தேவைகளைத் தீர்க்கிறது. குறைந்த விலையில் ஒரிஜினல் உதிரிப்பாகங்களை விற்கும் க்ரே மார்கெட் கடைகள் இங்கு உண்டு. ஆனால், கியாரன்டியோ, வாரன்டியோ எங்களிடத்தில் எதிர்பார்க்காதீர்கள் என்றே குறிப்பிட்டு விற்கிறார்கள்.

3.எஸ்.பி ரோடு

பெங்களூருவில் இருக்கும் எஸ்.பி தெருதான் மென்பொருட்கள் மற்றும் கணினி பொருட்களின் சொர்க்கம். இங்கு இருக்கும் க்ரே சந்தையில், தங்களின் பொருட்களின் விலையைப் பார்த்தால் உற்பத்தியாளர்களே அசந்து போவார்கள்.
25 ரூபாய்க்கு ஹெட்போன் விற்பனையாகிறது இங்கே.

4.ரிச்சி ஸ்ட்ரீட்


தமிழகத்தின் சிலிக்கான் பள்ளத் தாக்கு இந்த ரிச்சி தெரு. மொபைலில் தொடங்கி பெரிய கம்ப்யூட்டர் வொர்க் ஸ்டேஷன் வரை இங்கு ஒயிட் சந்தை மற்றும் க்ரே சந்தையில் கிடைக்கிறது. மொபைல் சம்பந்தப்பட்ட பொருட்கள் இங்கு மொத்தமாக விற்கப்படுவதால், வெளியூரிலிருந்து ஆட்கள் வந்து இறங்கியபடி உள்ளனர்.

க்ரே மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் பழையதா, புதியதா எனத் தீர்மானிக்கவும், கண்டுபிடிக்கவும் இயலாமல் இருப்பது பெரிய குறை. நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நடக்கும் வர்த்தகம் என்பதால், பொருட்களின் பயன்பாட்டுக்கு உத்திரவாதம் கிடையாது.

 

ஒரே பொருள், பல விலைகள்!

க்ரே மார்க்கெட்டில், நுகர்வோரைக் குழப்பும்படியாக பல்வேறு விலைகளில் ஒரே பொருள் கிடைப்பது இன்னொரு பெரிய குறையாகும். அங்கீகரிக்கப்பட்ட சந்தையில் வெளிப்படையான விலை நிலவும்போது இங்கு உள்ள வியாபாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விலை சொல்லும் நிலை இருக்கிறது. அதிக விலை சொல்லும் வியாபாரி, குறைவான விலையில் தரும் வியாபாரிகள் விற்கும் பொருட்களை தரமில்லாத பொருள் என்றே  சொல்கிறார்கள். இதனால் உற்பத்தியாளருக்குத் தெரியாமலே அவர் நிர்ணயித்த விலை கூடவோ, குறையவோ வாய்ப்புண்டு. அதனால் அவரது பிராண்ட் மதிப்பு குறைகிறது. இன்று இணையத்தில் புதிய, பழைய பொருட்களை  வாங்கும், விற்கும் பலரும் கீழ்க்காணும் விஷயங்களைக் கவனிப்பதில்லை.

1. க்ரே சந்தையில் வாரன்டி, கியாரன்டி என்கிற பேச்சுக்கே இடமில்லை. உற்பத்தி யாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் அதிகாரபூர்வ விற்பனையாளரிடமிருந்தோ வாங்காத காரணத்தால் இந்த வாய்ப்பை இழக்கிறீர்கள்.

2. அங்கு வாங்கப்படும் பொருட்கள் நம்பிக்கையானவை அல்ல. சமயங்களில் ஒரிஜினல் போலவே இருக்கும் போலிப் பொருளை நீங்கள் வாங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு. புதியதா அல்லது பயன்படுத்தப்பட்டு, புதிது போன்று தோற்றமளிக்கச் செய்யப்பட்டதா என உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அப்படிக் கண்டுபிடித்தாலும் அதற்கு எந்த மாற்றையுமே நீங்கள் பெறமுடியாது.

3. விற்பனைக்குப் பிறகு கிடைக்கும் ஆப்டர் சேல்ஸ் சர்வீஸை நீங்கள் க்ரே சந்தையில் வாங்கிய பொருட்களில் பெற முடியாது. இது பெரிய இழப்பாகும்.

எனவே, உத்திரவாதமில்லாத எதிலும் அதிக பணத்தை முதலீடு செய்ய முடியாது என்பதால் கவனத்துடன் இருக்கவேண்டும்.
 
படங்கள் : பா.காளிமுத்து

அரசு சந்திக்கும் விளைவுகள்!

க்ரே மார்கெட்டில் விற்கப்படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் வரி செலுத்தப்படாமலே விற்கப்படுவதுதான். விற்கவும், வாங்கவும் வரிகள் விதிக்கப்படும் சூழலில் ‘அதைத் தாண்டி நடக்கும் இத்தகைய விற்பனை’ அரசுக்குக் கிடைக்கவேண்டிய வரிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவ்வளவு இருந்தும் க்ரே சந்தை வளமையாக இயங்குவதற்கான வாடிக்கையாளர்கள், கிடைக்க இரண்டு காரணங்கள்தான் இருக்கின்றன. முதல் காரணம், சந்தையைவிட விலை குறைவாக கிடைக்கிறது என்பதுதான்.

இந்தியா போன்ற நாடுகளில் நுகர்வோர் உரிமைகள் பற்றிய புரிதல் இல்லாததாலும், அப்படியே இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போன்ற உடனடித் தீர்வுகள் சாத்தியமில்லாத காரணத்தாலும் இதன் அடிப்படையில் க்ரே சந்தையில் விலை குறைவாக வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இரண்டாவது காரணம், “இந்தப் பொருள் எங்கள் ஊரில் கிடைப்ப தில்லை” என்பதாக இருக்கிறது. இது பெரிய ஸ்போர்ட்ஸ் காரிலிருந்து சாதாரண தைல பாட்டில் வரை பொருந்தி வரும். உதாரணமாக, இலங்கையில் விற்பனையாகும் ‘ராணி சந்தன சோப்’க்கு தமிழகத்தில் வரவேற்பு உண்டு ஆனால், அதன் அதிகாரபூர்வ விற்பனையாளர் இங்கு இல்லாத காரணத்தால் அதைப் பயன் படுத்தி பழகியவர்கள் க்ரே மார்க்கெட்டில்தான் வாங்கியாக வேண்டிய நிலை.