Published:Updated:

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!

பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் சிஇஓ ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்பு பேட்டி..!சி.சரவணன்

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!

பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் சிஇஓ ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்பு பேட்டி..!சி.சரவணன்

Published:Updated:
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆஃம்பி (Association of Mutual Funds in India - AMFI)-ன் சேர்மன் மற்றும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களில் நான்காவது பெரிய நிறுவனமான பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின்  தலைமை செயல் அதிகாரி மற்றும் முதன்மை முதலீட்டு அதிகாரியான ஏ.பாலசுப்பிரமணியனை நாணயம் விகடன் 12 -ம் ஆண்டு சிறப்பிதழுக்காக பேட்டி கண்டோம்.

இந்தியாவில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரும் காலத்திலும் தொடருமா?

‘‘இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் இப்போது 5 கோடிக்கும் மேற்பட்ட ஃபோலியோக்கள் மூலம்  2 கோடி பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.16 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-15- ம் ஆண்டில் 22 லட்சம் ஃபோலியோக்கள் மற்றும் 2015-16-ம் ஆண்டில் 59 லட்சம் ஃபோலியோக்கள் என இரு ஆண்டுகளில் மொத்தம் 81 லட்சம் புதிய கணக்குகள் மியூச்சுவல் ஃபண்டில் தொடங்கப் பட்டுள்ளன. இதில் 30% புதிய முதலீட்டாளர்கள்.

நடப்பு 2016-17-ம் ஆண்டு மற்றும் வரும் 2018-19-ம் ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேல் புதிதாக ஃபோலியோக்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.”

பிரதமர் மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பழைய ரூ.500, ரூ.1,000 தாள்கள் மதிப்பு நீக்கம் (demonitization) செய்யப்பட்டிருக்கிறது . இதனால் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பாதிப்பு வருமா?

‘‘இது ஒரு குறுகிய கால பாதிப்பாகவே  இருக்கும். கிட்டத்தட்ட ஆறு மாதம் பாதிப்பு இருக்கும். அதன்பிறகு நிலைமை சீராகிவிடும். பொது மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்போது, மத்திய அரசின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதனால் நிறுவனங்கள் வளர்ச்சி காண ஆரம்பிக்கும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் அதிகத் தொகை வந்து சேர்ந்திருக்கிறது. இதனால், வங்கி டெபாசிட் வட்டி இன்னும் குறையும். பினாமி சொத்து நடவடிக்கை காரணமாக ரியல் எஸ்டேட் சுமூகமாக இல்லை. தங்கத்தில் முதலீடும் லாபகரமாக இல்லை.  இந்த நிலையில், பலரின் பார்வை, நிதித் திட்டங்கள் பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு அதிக முதலீடு வர வாய்ப்பு உள்ளது. அதுவும் ஈக்விட்டி ஃபண்டுகள் மற்றும் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகளுக்கு அதிக முதலீடு வரும். இன்னும் 10-15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.”   

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்!

முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஆஃம்பி அமைப்பு மூலம் ஏதாவது திட்டமிட்டிருக்கிறீர்களா?

‘‘மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்பு உணர்வை மியூச்சுவல் ஃபண்ட் துறையினர் மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்கள் இடையே ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது பெரிய கடல். இதுபற்றிய விவரங்களை அனைவருக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இப்போது ஆண்டுக்கு ஒரு முறை மும்பையில் மியூச்சுவல் ஃபண்ட் மாநாடு நடத்துகிறோம். இனி 2017 ஜனவரி முதல், மாநிலம் தோறும் மியூச்சுவல் ஃபண்ட் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு தொடர்பான விளம்பரங்களை இன்னும் சில மாதங்களில் பிராந்திய மொழிகளில் வெளியிட இருக்கிறோம்.’’

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள 93% மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சராசரியாக 15% வருமானம் அளித்துள்ளன. எதிர்காலத்திலும் இது சாத்தியமா?


‘‘பொதுவாக, எந்த முதலீட்டின் மூலம் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம் என்பதைச் சொல்கிறேன். ஃபிக்ஸட் இன்கம் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகள் எனில், நீண்ட காலத்தில், பணவீக்க விகிதத்தைவிட            3 - 4% கூடுதலாக வருமானம் எதிர்பார்க்கலாம்.  இது பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்கிறபோது ஜிடிபி வளர்ச்சி, பணவீக்க விகிதம் இவற்றைவிட 2 - 5%  கூடுதல் வருமானத்தை எதிர்பார்க்கலாம். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஜிடிபி வளர்ச்சி 6%, பணவீக்க விகிதம் 4% எனில், 6+4+5=15% வருமானத்தை பங்கு சார்ந்த ஃபண்ட் திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கலாம்.”
  
இந்திய பங்குச் சந்தை  அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிறு முதலீட்டாளர் களுக்கு தங்களின் ஆலோசனை என்ன?

‘‘பங்குச்  சந்தையின் இயற்கை குணமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதுதான். சிறு முதலீட்டாளர்கள், ஏன் பெரிய முதலீட்டாளர்கள் கூட சந்தையின் ஏற்ற இறக்கம் கண்டு கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முதலீட்டை நிறுத்தாமல் தொடர வேண்டும்.  முடிந்தால் சந்தை இறக்கத்தில் கூடுதல் முதலீட்டை மேற்கொண்டால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.’’

அவர் சொல்வது சரிதானே!