Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்!

சில வாரங்களுக்குமுன் சந்தை இறக்கம் காணத் தொடங்கியவுடன், நிஃப்டி 8000 என்கிற வலுவான ரெசிஸ்டன்ஸை உடைத்து, கீழே இறங்குவது எல்லாம் சாத்தியமற்றது என்றுதான்  கருதினோம்.  இருப்பினும், சந்தை தன் போக்கிலேயே இறக்கம் கண்டு 8000 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது. தற்போது, நிஃப்டி கண்ட ஏற்றத்தில் 50% ரிட்ரேஸ் ஆகி 7915 புள்ளிகளை சப்போர்ட் லெவல்களாக எடுத்திருக்கிறது. முக்கியமாக, இதுவரை (வியாழக்கிழமை வரை) அந்த சப்போர்ட் லெவல் களை உடைக்காமல் வர்த்தகமும் ஆகி வருகிறது.

சந்தையின் ஏற்றமான 8900 புள்ளிகளில் இருந்து சுமாராக 1000 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இதுவே இறக்கத்தின் முடிவாககூட இருக்கலாம். எனவே, மீண்டும் சந்தை தொடர்ந்து இறங்கும் என்று சொல்ல முடியாது. இனி சற்றே இறக்கம் குறைந்து, ஏற்றம் காண வாய்ப்பு இருக்கிறது.  எனவே, இந்த சூழ்நிலையை முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பாகப் பார்க்கலாம்.

இண்டெக்ஸில் அதிக வெயிட்டேஜ்கள் கொண்ட பங்குகளின் விலை உயர்ந்தால்தான், நிஃப்டி தன் இறக்கத்தில் இருந்து விடுபட்டு உயர்வைக் காணத் தொடங்கும். டிசம்பர் மாத தொடக்கத்தில் இது நடக்கிறதா என பார்க்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்டுகள் ரோல் ஓவர் ஆவது குறைவது, எஃப்ஐஐ முதலீடுகள் மெதுவாக உள்ளே வரத் தொடங்குவது போன்றவை  தான் சந்தை உயர்வதை உறுதிப்படுத்தும். பேங்க் நிஃப்டியில் கணிசமாக ஷார்ட் பொசிஷன்களை எடுத்திருக்கிறார்கள். எனவே, அடுத்த வார வர்த்தக நாட்களை நன்றாக கவனிக்க வேண்டும். வரும் டிசம்பர் மாதம் சற்றே நீண்ட மாதம். டிசம்பர் 29 அன்றுதான் எஃப் அண்ட் ஓ கான்ட்ராக்ட்டுகள் எக்ஸ்பயரி ஆகும். எனவே, சந்தை சரிவில் இருந்து மீண்டு, டிரெண்டுகள் மாறி, ஏற்றத்தை காணத் தொடங்கலாம். இதற்கு சில வாரம்கூட ஆகலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



என்எம்டிசி (NMDC) தற்போதைய விலை: ரூ.119.65

வாங்கவும்

கடந்த சில வாரங்களில் சந்தையின் இறக்கத் தால், இந்தப் பங்கின் விலை இறக்கம் கண்டி ருக்கிறது. இதன் 52 வார உச்சமான  ரூ.142-ல் இருந்து இறங்கி, ரூ.110 -ஆக வர்த்தகமாகி வருகிறது. தற்போது டிரேடர்கள் மத்தியில் மெட்டல் துறை சார்ந்த பங்குகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டி ருக்கிறது. எனவே, இந்தப் பங்கின் விலை ஏற்றம் காணும் எனலாம். வரும் வாரங்களில் இதன் விலை ஏற்றம்  ரூ.130-132 வரை போகலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம்.ஸ்டாப் லாஸ் ரூ.114 வைத்துக்கொள்ளவும்.

அதானி டிரான்ஸ்மிஷன் (ADANITRANS) தற்போதைய விலை: ரூ.57.45

வாங்கவும்

அதானி என்டர்பிரைசஸில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்கு  கடந்த பல வாரங்களாகவே கன்சாலிடேட் ஆகி வர்த்தக மாகி வந்தது. கடந்த ஆகஸ்ட் 2015-ல் இந்த நிறுவனப் பங்கு பட்டியலிடப்பட்டது.  பங்கின் விலை கன்சாலிடேட் ஆன காலங்களில் ரூ.42 என்கிற லெவல்கள் வலுவான ரெசிஸ்டன்ஸாகவே இருந்திருக்கிறது. கடந்த வாரத்தில், அந்த ரெசிஸ்டன்ஸ் உடைக்கப்பட்டு நன்றாக விலை ஏறி வர்த்தகமாகி வருகிறது. எனவே, பங்கில் ஒரு புதிய மொமென்டம் காணப்படுகிறது. இதனால்  பங்கின் விலை நல்ல ஏற்றம் காணும்.  குறுகிய காலத்தில் விலை ரூ.65-70-க்கு  உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.51-ஆக வைத்துக்கொள்ளலாம்

திருமலை கெமிக்கல் (TIRUMALCHM)  தற்போதைய விலை : ரூ.654.15

வாங்கவும்

இந்த நிறுவனப் பங்கின் விலை சமீபத்தில்தான் தன்னுடைய 52 வார உச்சமான ரூ.984-யை  எட்டியது. சந்தையின் ஒட்டுமொத்த இறக்கம் காரணமாக இந்தப் பங்கின் விலை சுமாராக 35% சரிந்திருக்கிறது. இந்தப் பங்கின் சார்ட்டில் ஹேமர் பேட்டனை காண முடிகிறது. அத்துடன் இந்தப் பங்கின் விலை குறைந்த அளவுக்கு அதன் வால்யூம் குறையவில்லை. எனவே, இது ஒரு உண்மையான சரிவல்ல. எனவே, ஒட்டுமொத்த சந்தை ஏற்றம் காணும்போது, இந்தப் பங்கின் விலையும் நல்ல ஏற்றம் காணும். முதலீட்டாளர்கள் தற்போது இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய கால இலக்காக ரூ.780 -ஆக வைத்துக்கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர் கள் இந்தப் பங்கை மேலும் வாங்கிச் சேர்க்கலாம். நீண்ட காலத்தில் புதிய உச்சத்தை இந்தப் பங்கு தொடும். 

(பங்கு விலை 24.11.16 நிலவரப்படி)

தொகுப்பு: மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.