Published:Updated:

முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!

முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!

மு.சா.கெளதமன்

முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!

மு.சா.கெளதமன்

Published:Updated:
முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!
முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!

ந்தை சரியும் இந்த நேரத்தில் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது என முதலீட்டாளர்கள் குழம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் விதமாகப் பங்குகளை அலசி ஆராய்ந்து, 12 பங்குகளை பரிந்துரை செய்ய முடியுமா என மும்பையைச் சேர்ந்த ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் ஏ.கே பிரபாகரிடம் கேட்டோம். பங்குகளைப் பரிந்துரை செய்யும்முன் ஃபண்ட்மென்டல்கள் பற்றி முதலில் விளக்கினார். 

எட்டு ஆண்டு சுழற்சி!

‘‘ஒவ்வொரு எட்டு வருடத்துக்கும் ‘கரெக்‌ஷன்’ என்கிற பெயரில் அருமையான வாய்ப்பு பங்குச் சந்தையில் கிடைக்கும். இந்த ‘கரெக்‌ஷன்’ காலத்தில் டிரெண்டில் உள்ள பங்குகள் ஒதுங்கி, புதிய பங்குகள் வெளிச்சத்துக்கு வரும். 

1992-ல், அன்றைய பொருளாதாரம் சார்ந்த சிமென்ட், ஸ்டீல் போன்ற உற்பத்தித் துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. 2000-ல் மென் பொருள் நிறுவனப் பங்குகள் அதிக விலை உயர்ந்து, சந்தையை மேலேற்றின. 2008-ல் நிதி நிறுவனப் பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட் நல்ல ஏற்றம் கண்டு மொத்த சந்தையை உயர்த்தியது.  அப்படியொரு மாற்றத்தை இனி நீங்கள் எதிர்பார்க்கலாம்.

நிஃப்டி இப்போது!

2016, நவம்பர் 23-ம் தேதியின்படி, 8033 புள்ளிகளில் நிஃப்டி வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும் நிஃப்டியின் 200 வார மூவிங் ஆவரேஜ் 7480 புள்ளிகளாக இருக்கிறது. எனவே, நிஃப்டி, கூடிய விரைவில் இந்தப் புள்ளிகளுக்கு இறங்க வாய்ப்பு இருக்கிறது.

இறங்கும் துறைகள்!


கிராமப்புறங்களின் நுகர்வுகளை பெரிய அளவில் நம்பி இருக்கும் எஃப்.எம்.சி.ஜி, துறை சார்ந்த பங்குகளின் விலை அதிக அளவில் இறக்கம் காண வாய்ப்பு இருக்கிறது. மைக்ரோ ஃபைனான்ஸ் துறை சார்ந்த பங்குகள் 2008-க்குப் பிறகு தலை தூக்கி பெரிய உச்சங்களைத் தொட்டுவிட்டது.  இனிவரும் காலங்களிலும், இந்தத் துறை ஏற்றப் பாதையில் பயணிப்பது சற்றுக் கடினம்தான். ஹவுஸிங் ஃபைனான்ஸ் துறை சார்ந்த பங்குகளும் இறங்கவே வாய்ப்புண்டு. எனவே இனி மொத்த டிரெண்ட் மாறும் என்பதை மனதில்கொண்டு முதலீடு செய்ய வேண்டும்’’ என்றவர் பரிந்துரை செய்த பங்குகள் பற்றிய விவரங்கள் இனி.
  
பார்தி ஏர்டெல் ( BHARTIARTL)

‘‘ரிசர்வ் வங்கி, பேமென்ட் வங்கிகளை நடத்த அனுமதி அளித்திருக்கும் நிறுவனங்களில் முதன்மையானது பார்தி ஏர்டெல். மக்களை இணைப்பதற்கான டெக்னாலஜி தொடர்பான சாதனங்களும், திறமையும் போதிய அளவில் இந்த நிறுவனத்திடம் இருக்கிறது. பேமென்ட் பேங்க் முறையில், போன் மூலமாகவே ரீசார்ஜ் செய்யும் வசதியை, ஏற்கெனவே இந்தியாவில்  பயன் படுத்திய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் பேமென்ட் வங்கியைக் கூடிய விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். உலக அளவில் மார்ச் 2016 நிலவரப்படி, 34.20 கோடி பயன்பாட்டாளர்களுடன் உலக அளவில் மூன்றாவது இடத்திலும், இந்தியாவில் முதல் இடத்திலும் இருக்கிறது.

இந்தப் பங்கின் சார்ட்டில் நல்ல டபுள் பாட்டத்தைப் பார்க்க முடிகிறது. 2016, ஜனவரி 28-ல் இதன் பழைய லோவாக ரூ.282 இருந்தது.  அதேபோல, மார்ச் 2014-ல் ரூ281.90-ல்  இருந்து உயர்ந்து வர்த்தகமாகத் தொடங்கியது. எனவே,    ரூ. 280 என்கிற லெவலை வலுவான சப்போர்ட்டாக கருதலாம். ஒருவேளை 330 ரூபாயை இந்தப் பங்கு தாண்டினால் ரூ.390-ஐ எளிதாகத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.

பரிந்துரை பங்குகள்

முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RELIANCE)

கடந்த செப்டம்பர் 1, 2016-ல் ஜியோ வெளியானது என்றாலும், சந்தையில் அதிகம் பேரைக் கவர்ந்திழுத்திருக்கிறது. பேமென்ட் வங்கியை அமைப்பதற்கான உரிமத்தை இந்த நிறுவனத்துக்கும் ஆர்பிஐ வழங்கி இருக்கிறது. ஜியோ ஓரளவுக்கு வளர்ந்தவுடன், பேமேன்ட் வங்கி தொடங்கப்படும் என்று சொல்லப் படுகிறது.  தற்போது ஜியோ, இந்தியாவின் 2-வது இடத்தைத் தொட்டுவிட்டது. விரைவில் பேமென்ட் வங்கியையும் எதிர்பார்க்கலாம்.

2008-09 காலங்களில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு பெரிதாக, விலை ஏற்றம்  காணவில்லை. தொடர்ந்து ‘கரெக்‌ஷனி’லேயே இருந்து வந்திருக்கிறது. சுத்திகரிப்பு ஆலைகளும் நன்றாக செயல் படுவதால், இனி நல்ல விலை ஏற்றம் காணலாம். 2016 நவம்பர் 24-ல் ரூ.987-க்கு வர்த்தகமானது. ரூ.1,130 லெவல்களை கடந்தால், வாழ் நாள் உச்சமான ரூ.1,626-ஐ நோக்கி விலை ஏறலாம். 

ஐ.ஆர்.பி இன்ஃப்ரா (IRB)


மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைகள் நிர்ணயிக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பது, பராமரிப்பது, குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அந்த ஹைவேக்களை பயன்படுத்தும் வாகனத்திடம் ‘டோல்’ கட்டணங்களை வசூலிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது. தற்போது மும்பை - புனே எக்ஸ்பிரஸ் ஹைவே, என்.ஹெச் 4 நான்கு வழிச் சாலையாக மாற்றுவது, மும்பையோடு மஹாராஷ்டிராவின் மற்ற முக்கிய நகரங்கள் மற்றும் டவுன்களை இணைப்பது போன்ற அரசுத் திட்டங்கள் பலவற்றை கையில் வைத்திருக்கிறது. ரியல் எஸ்டேட் மந்தநிலையில் இருந்தாலும், அரசு திட்டங்கள் ஏராளமாக கையில் இருப்பதால், இந்த நிறுவனப் பங்கை வாங்கலாம். டோல் கட்டணம் வசூலிப்பு டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், வருமானம் அதிகரிக்கவும் முழுமையாக வந்து சேரவும் வாய்ப்பிருக்கிறது.

2013 ஜூலை 25-ல், ரூ.52-ஆக இருந்த பங்கின் விலை, நவம்பர் 2014-ல்  உச்சபட்சமாக ரூ.289-ஆக அதிகரித்தது. நவம்பர் 22, 2016-ல் ரூ.182-க்கு வர்த்தகமானது. சுமாராக தன் உச்சமான ரூ.289-ல் இருந்து 37% விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது. ஒருவேளை தன் 52 வார உச்சமான ரூ.289-யைத் தாண்டி வர்த்தகமாகத் தொடங்கினால், தன் வாழ் நாள் உச்சமான 312 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகலாம்.

முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!


ஐஎல்அண்ட்எஃப்எஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன் நெட்வொர்க்ஸ் (IL&FSTRANS)

தரைவழிப் போக்குவரத்தைச் சார்ந்த நிறுவனம் இது. கட்டுமானம் மற்றும் டெக்னாலஜி கலந்த கலவையாகச் செயல்படும் நிறுவனமும்கூட.  தற்போதைக்கு அதிகமான சாலைகளை அமைத்து,  அவற்றின் மூலம், கட்டணம் வசூலித்து வருகிறது. இப்போது டிஜிட்டல் வேலட்டுகள், பேமென்ட் வங்கிகள் வந்து, பணம் செலுத்தப்படுவது கணினிமயமாக்கப்பட்டால், பணத்தை வசூலிக்க நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கைக் குறையும். இதனால் நிறுவனத்துக்கு நல்ல லாபம் வரலாம்.

இந்த நிறுவனப் பங்கின் விலை நன்றாக ‘கரெக்‌ஷன்’ ஆகி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2010-ல் ரூ.342-க்கு வர்த்தகமாகிய பங்கு, தற்போது (நவம்பர் 24, 2016)-ல் ரூ.95-க்கு  வர்த்தகமாகி வருகிறது. சந்தை கரெக்‌ஷனில் இருந்து வெளிவந்த பிறகு, விலை மேல்நோக்கி எழும் என்று எதிர்பார்க்கலாம்.

பவர் கிரிட் (POWERGRID)

பவர் கிரிட் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் நன்றாகவே வந்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.6,250 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இதே காலாண்டைவிட 28.5% வளர்ச்சி. இதன் நிகர லாபம் ரூ.1,872 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த செப்டம்பர் 2015-ல் கிடைத்த ரூ.1,418 கோடியைவிட 24.25% அதிகம். வருவாய் அதிகரிக்கும் அளவுக்கு நிகர லாபமும் அதிகரித் திருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தின் நிகர லாப வரம்பு 28 சதவிகிதத்துக்கு  மேலேயே இருக்கிறது.

இந்த நிறுவனப் பங்கின் விலை, 2007-ல்      ரூ.167.50 என்கிற தன் பழைய வாழ்நாள் உச்சத்தைத் தாண்டி, தற்போது வர்த்தகமாகிறது. இந்த நிறுவனத்தின் அடிப்படைகளும் நன்றாக இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பங்கின் விலை இரண்டு மடங்கு அதிகரிக்கக் கூடும்.

என்.டி.பி.சி (NTPC)

அமெரிக்க தேர்தல் மற்றும் இந்தியாவில் பண நீக்க மதிப்பு ஆகிய இரண்டு நடவடிக்கைகளால் இந்திய பங்குச் சந்தை திசை தெரியாமல் இருக்கும் போது மின்சாரத் துறை சார்ந்த பங்குகள் நன்கு வர்த்தகமாகி வருகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய அனல் மின் உற்பத்தியாளர் இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு பாசிட்டிவ்வாகவே வந்திருக் கிறது. பவர் கிரிட்டை போல, அதிக லாபம் வரவில்லை என்றாலும் நிலையாக வியாபாரம் நடந்து வருகிறது.

இந்த நிறுவனப் பங்கு, 2008 ஜனவரி 7-ல் தன் வாழ் நாள் உச்சமான ரூ.291-ல் வர்த்தகமானது. அதன்பிறகு 2015 ஆகஸ்ட் 18-ல்  ரூ.107-க்கு இறங்கி மீண்டும் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்துக்கான மோசமான வர்த்தக சைக்கிள் முடிவடைந்திருக்கிறது எனலாம். எனவே, இந்தப் பங்கின் விலையில் புதிய வாழ்நாள் உச்சங்களை நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதன் மூலம் பார்க்க முடியும்.
 
ஏஷியன் பெயின்ட்ஸ் (ASIANPAINT)

தற்போதைக்கு ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருக்கிறது என்றாலும், கட்டுமானப் பணிகள் குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, பெயின்ட் தொடர்பான நுகர்வுகள் பெரிய அளவில் குறையும் என்று சொல்ல முடியாது. தற்காலிகமாக இந்த நிறுவனப் பங்கின் விலை குறைந்திருந்தாலும்,  நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய நல்ல பங்கு என்பதை மறந்துவிடக் கூடாது. 

இந்தப் பங்கின் வாழ்நாள் உச்சம் ரூ.1,230-க்கு  கடந்த அக்டோபர் 06, 2016-ல் வர்த்தகமானது. கடந்த 52 வார குறைவாக ரூ.826-க்குப் பதிவாகி இருக்கிறது. இந்த ரூ.826 என்கிற லெவல்களை வலுவான ரெசிஸ்டன்ஸாக கருதலாம். எனவே, ஒருவேளை இந்தப் பங்கின் விலை கீழ் நோக்கி இறங்கினாலும், ரூ.820-826 லெவல்களில் இருந்து மேல் நோக்கி செல்லலாம். 

மைண்ட் ட்ரீ (MINDTREE)

அமெரிக்க தேர்தல் மற்றும் பண நீக்க மதிப்பு நடவடிக்கை அடுத்து அதிகம் பாதிக்காத துறை என்றால் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. அதிலும் குறிப்பாக, இந்த நிறுவனம் பிற நிறுவனங்களை போல, ஐடி சேவைகளை வழங்காமல், டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களை உருவாக்குவது மற்றும் அதை செயல்படுத்துவது போன்ற வேலைகளை பெரிய அளவில் செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் 2011-ல் ரூ.71-க்கு வர்த்தகமாகி வந்த பங்கு நிலையாக ஏற்றம் கண்டு ஏப்ரல் 2015-ல் ரூ.795-யைத் தொட்டது. மார்ச் 2016-ல் ரூ.803 என்கிற புதிய வாழ்நாள் உச்சத்தைத் தொட்டது. தற்போது (நவம்பர் 24, 2016) சுமாராக 40% சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இனி இந்த ரிட்ரேஸ்மென்ட் 63% வரை போகலாம். அதன்பிறகு காணும் ஏற்றத்தால், இந்தப் பங்கு புதிய வாழ்நாள் உச்சங்களைத் தொடும் எனலாம்.

அபாட் இந்தியா (ABBOTINDIA)


இது பன்னாட்டு பார்மா நிறுவனம். இதன் ஸ்பெஷாலிட்டியே, மருந்துகளைக் கண்டுபிடிப்பது எல்லாம் வெளிநாட்டில். அந்த ஃபார்முலாகளை பயன்படுத்தி, இந்தியாவில் தயாரித்து, இந்தியா விலேயே மருந்துகளை விற்று காசு பார்க்கும் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்து வருவதுதான். அமெரிக்க அரசியல் தலைமை மாற்றமும், பண நீக்க மதிப்பும் இந்தத் துறையில் இதுவரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இனியும் ஏற்படுத்தாது என்றே தோன்றுகிறது.

கடந்த மார்ச் 2013-ல் ரூ.1,251-க்கு  வர்த்தக மாகத் தொடங்கி, செப்டம்பர் 2015-ல் ரூ.6,177  வரை அதிகரித்தது. தற்போது ஏறத்தாழ 38.2% ரிட்ரேஸ்மென்ட்டில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், இந்திய சந்தைகளில் ‘கரெக்‌ஷன்’  நடந்து கொண்டிருப்பதால், அதிகபட்சமாக 50% வரை ரிட்ரேஸ் ஆகி, ரூ.3,700 வரை இறங்கலாம். இந்த இறக்கங்கள் எல்லாம் முடிந்தபின் அடுத்த சில ஆண்டுகளில் பங்கின் விலை இரண்டு மடங்கு ஆகலாம்.

முதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்!

க்ளாக்ஸோ ஸ்மித்க்ளின் பார்மா (GLAXO)

இங்கிலாந்தை சேர்ந்த பார்மா நிறுவனம். பிரெக்ஸிட்டுக்கு பிறகு கொஞ்சம் தடுமாறினாலும், ஒட்டுமொத்த சந்தை இறக்கம் காரணமாக கொஞ்சம் விலை குறைந்ததாலும், நல்ல விலைக்கு, சரியான மதிப்பீடுகளுக்கு தற்போது இந்த நிறுவனப்  பங்கு கிடைக்கிறது. அக்டோபர்          2012-ல் ரூ.1,801-ல் இருந்து, மார்ச் 2016-ல் ரூ.3,872 என்கிற தன் வாழ் நாள் உச்சத்தைத் தொட்டது. தற்போது 61.2% விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. ‘கரெக்‌ஷன்’ காலம் முடிந்து, காளை ஓட்டம் சந்தையில் தொடங்கினால், தன் வாழ்நாள் உச்சத்தைத் தாண்டி வர்த்தகமாகலாம்.

ஜீ என்டர்டெயின்மென்ட் (ZEEL)

இந்திய அளவில், ஜீ நிறுவன சேனல்களான ஜீ மூவீஸ், ஜீ அன்மோல் சினிமா போன்றவை  டாப் மூவி சேனல்களில் முதல் 5 இடங்களில் இருப்பதாக பி.ஏ.ஆர்.சி தெரிவித்திருக்கிறது. செய்தி சேனல்களிலும் டாப் ஐந்தில் நான்காவதாக இருக்கிறது ஜீ நியூஸ் சேனல். 2000-ம் ஆண்டில் இந்த நிறுவனப் பங்கு தன் வாழ்நாள் உச்சமான ரூ.492-யைத் தொட்டது. அதன் பிறகு சமீபத்தில் ஜூலை 2016-ல்தான் அதைக் கடந்து ரூ.589.90 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. தற்போது சுமாராக 24% இறக்கம் கண்டு, வர்த்தகமாகி வருகிறது. இந்த ‘கரெக்‌ஷன்’  முடிந்தவுடன் சந்தை சரியானால் போதும். இந்தப் பங்கு அடுத்த சில வருடங்களில் இரண்டு அல்லது மூன்று மடங்கு வரை அதிகரிக்கலாம்.

ஏ.ஐ.ஏ இன்ஜினீயரிங் (AIAENG)


சுரங்கத் தொழிலில் அடுக்கடுக்காக பொருட் களைப் பெயர்த்து எடுக்கும் கருவிக்கு பெயர்தான் வியர் காம்போனென்ட் (Wear Component). பொது வாக, இதை இரும்பில்தான் செய்வார்கள். இரும்பில் செய்வதால், மிக வேகமாக மழுங்கிவிடும். தேய் மானமும் மிக அதிகமாக இருக்கும். இந்த நிறுவனம் அதே சாதனத்தை குரோமியத்தில் செய்கிறது. புதிய உலோகக் கலவைகளையும் (இரும்பு, தங்கம், கா ப்பர், ஜிங்க், லீட்) வைத்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்கிறது.

மே 2013-ல் ரூ.276-க்கு வர்த்தகமாகி வந்த இந்த பங்கு, விலையில் சீரான ஏற்றம் கண்டு, மார்ச் 2015-ல் ரூ.1,357-க்கு அதிகரித்தது. தற்போது 11% இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. ஒட்டுமொத்த சந்தை நுகர்வு சற்றே வலுவடையத் தொடங்கி, பங்குச் சந்தை ஏற்றம் காணத் தொடங்கும்போது, இந்தப் பங்கு தன் புதிய உச்சங்களை எளிதில் கடந்து இரண்டு மடங்காக விலை அதிகரிக்கலாம்’’ என்று முடித்தார்.

இந்தப் பங்குகளை தற்போதுள்ள சந்தை நிலைமையைக் கவனித்து முதலீட்டு முடிவை எடுப்பது நல்லது!