Published:Updated:

`உச்சத்தில் பெட்ரோல்,  டீசல் விலை!’ - பண வீக்க விகிதம் மேலும் உயரும் அபாயம்?

`உச்சத்தில் பெட்ரோல்,  டீசல் விலை!’ - பண வீக்க விகிதம் மேலும் உயரும் அபாயம்?
News
`உச்சத்தில் பெட்ரோல்,  டீசல் விலை!’ - பண வீக்க விகிதம் மேலும் உயரும் அபாயம்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பண வீக்க விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 பேரல் விலை 80 டாலரை எட்டியுது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80 ஐ தாண்டியுள்ளது. டீசல் ரூ.73 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

`உச்சத்தில் பெட்ரோல்,  டீசல் விலை!’ - பண வீக்க விகிதம் மேலும் உயரும் அபாயம்?

இந்த விலை உயர்வு காரணமாக, சலவை சோப், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 4.7 சதவிகிதம் வரையில் உயர வாய்ப்புள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை பாதிப்பதோடு,  நாட்டின் சில்லரை பண வீக்க விகிதம் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு கண்டிப்பாகப் பொருள்களின் தேவையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஜி.எஸ்.டி கவுன்சில் கடந்த நவம்பரில் 178 பொருள்கள் மீதான வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்தது. இதைத்தொடர்ந்து, நிறுவனங்கள் டிட்டர்ஜென்டுகள், டியோரென்டுகள், ஷாம்பு, ஸ்னாக்ஸ் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் மீதான விலையை 10-20 சதவிகிதம் வரையில் குறைத்தன.
இதே போன்று பெட்ரோல்,  டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், அடுத்து வரும் இரண்டு காலாண்டுகளில் நுகர்வோர் பொருள்கள் விலை 4-5 சதவிகிதம் வரையில் உயர வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை நன்றாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் நுகர்வோர் பொருள்களின் விலை உயர்வு கண்டிப்பாகக் கிராமங்களில், தேவை மற்றும் விற்பனையைப் பாதிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விவசாயிகளுக்கு உரிய ஆதார விலையை வழங்க மத்திய அரசு கச்சா பாமாயில் மீதான இறக்குமதி தீர்வையை 30 சதவிகிதத்திலிருந்து 44 சதவிகிதமாக உயர்த்தியது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி தீர்வை 40 சதவிகிதத்திலிருந்து 54 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதுவும் நுகர்வோர் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் போது கிடைக்கும்  உபரிப் பொருள்கள் பாட்டில்கள் மற்றும் டி-யூப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாக நுகர்வோர்களை பாதிக்கிறது. பாமாயில் மீதான இறக்குமதி தீர்வை உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் பிஸ்கட் போன்ற பொருள்களின் விலை 5-7 சதவிகிதம் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

`உச்சத்தில் பெட்ரோல்,  டீசல் விலை!’ - பண வீக்க விகிதம் மேலும் உயரும் அபாயம்?

கச்சா எண்ணெய் விலை உயர்வால், பேக்கிங் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் கச்சா பொருள்களின் விலை 15-20 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நுகர் பொருள்களின் லாப வரம்பு மிகவும் சரிய வாய்ப்புள்ளது. மேலும், காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு, நுகர்வோர் பொருள்கள் விலை உயர்வு ஆகியவற்றால் பணவீக்க விகிதம் மிகவும் கடுமையாக உயரக்கூடும். இதுநடுத்தர மக்களின் வாங்கும் திறனையும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.