Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்!

முடிந்த வாரத்தில் சந்தை மேலும் இறக்கம் காணும் என்கிற பயத்துடன் நாம் இருந்தோம். ஆனால், கடைசி இரு தினங்கள் சந்தை ஏற்றம் காண ஆரம்பித்ததை அடுத்து சந்தை சென்டிமென்ட் மேம்பட்டிருக்கிறது.
சந்தை ஏற்றத்துக்கு நிஃப்டியில் இடம்பெற்றுள்ள வங்கிப் பங்குகளின் விலை அதிகரித்தது ஒரு காரணமாக உள்ளது.பேங்க் நிஃப்டி சப்போர்ட் 18200-ஆக இருந்தது.

அது உடைக்கப்பட்டு இப்போது 18000 ஆக இருக்கிறது. 

தற்போது சார்ட்டில் உருவாகி இருக்கும் ஆசிலேட்டர்-ன் படி, தற்போதைய நிலையிலிருந்து பேங்க் நிஃப்டி மேலே ஏறுவதற்கான நல்ல சிக்னலாக  இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து இரு வாரங்களாக நிஃப்டியில் நிலையற்ற கேண்டில்கள் உருவாகி இருந்தன. இப்போது பாசிட்டிவ் கேண்டில் உருவாகி இருக்கிறது. இதனால், சந்தை, காளையின் பிடிக்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம்.
இது நடக்க வேண்டும் என்றால் வங்கி துறை தவிர இதர துறை பங்குளும் ஏற்றம் காண வேண்டும் என்பது முக்கியமான விஷயம். 

8280-க்கு மேல் நிஃப்டி வாங்கலாம். பேங்க் நிஃப்டியை அதன் தற்போதைய நிலையில் தொடங்கி 18600 இறங்கும் வரை வாங்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் வாரத்தில் நிஃப்டி இலக்கு 8420 ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல, பேங்க் நிஃப்டி இலக்கு 19000 ஆக இருக்கலாம்.

டைம் டெக்னோ (TIMETECHNO)

பங்கு விலை : ரூ.101.80

வாங்கலாம்

கன்டெய்னர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஸ்மால் கேப் நிறுவனம் இது. அண்மைக் காலத்தில் இந்த நிறுவனப் பங்கின் விலை போக்கு ஏற்றமாக இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக பங்கின் விலை நிலை பெற்று, முக்கோண வடிவ பேட்டர்ன் உருவாகி இருந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் இந்த பேட்டர்ன் மேல் நோக்கி உடைக்கப்பட்டிருக்கிறது. இது புதிதாக வாங்கக்கூடிய சிக்னலை குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறது எனலாம்.

இந்தப் பங்கை அதன் தற்போதைய விலையில் வாங்கலாம். பங்கின் விலை ரூ. 120-130-க்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்டாப் லாஸ் ரூ. 90 வைத்துக் கொள்ளவும்.

அப்டெக் (APTECHT)

பங்கு விலை : ரூ.171.35

வாங்கலாம்

கல்வித் துறையை சார்ந்த முன்னணி நிறுவனம் இது.

இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்திருந்த சில பெரிய முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் விற்றிருக்கிறார்கள். இதனால், பங்கின் விலை இறக்கம் கண்டிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதே நேரத்தில், வெள்ளிக்கிழமை இறங்கியதில் 50% ஏற்றம் கண்டிருக்கிறது. வரும் வாரத்தில் இந்தப் பங்கின் விலை நல்ல ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். பங்கின் விலை மீண்டும் ரூ. 195-200க்கு அதிகரிக்கக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ. 160-ஆக வைத்துக் கொள்ளவும். 

சென்டம் எலெக்ட்ரானிக்ஸ் (CENTUM ELEC)

பங்கின் விலை ரூ.614.35

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அட்வான்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டத்தில் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நடுத்தர அளவு நிறுவனம் இது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


இந்த நிறுவனப் பங்கின் விலை நிலை பெற்றிருந்தது அண்மைக் காலம் வரை. இந்த நிலை தற்போது உடைக்கப்பட்டு ஏற்றத்துக்கு தயாராகி வருகிறது.

வரும் வாரங்களில் பங்கின் விலை ரூ.700-730க்கு அதிகரிக்கும் என என எதிர் பார்க்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப் லாஸ் ரூ.570 வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: பங்குகளின் விலை டிசம்பர் 9, 2016 நிலவரப்படி.

தொகுப்பு: சி.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism