Published:Updated:

சிறிய தொகை... பெரிய நஷ்டம்!

சிறிய தொகை... பெரிய நஷ்டம்!
பிரீமியம் ஸ்டோரி
சிறிய தொகை... பெரிய நஷ்டம்!

சேனா சரவணன்

சிறிய தொகை... பெரிய நஷ்டம்!

சேனா சரவணன்

Published:Updated:
சிறிய தொகை... பெரிய நஷ்டம்!
பிரீமியம் ஸ்டோரி
சிறிய தொகை... பெரிய நஷ்டம்!
சிறிய தொகை... பெரிய நஷ்டம்!

ங்குச் சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் ரூ.500 ஆகும். பிறகு, ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் சுமார் ரூ.300 இருக்கும். இந்த சில நூறு ரூபாயை மிச்சப்படுத்த சிலர் தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களின் டீமேட் கணக்கில் முதலீட்டை மேற்கொள்கிறார்கள். இது ஆபத்தில் கொண்டு போய்விட வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்துக்கு, சுரேஷ் என்பவர் தனது நண்பர், கமலின் டீமேட் கணக்கில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். கமலுக்கு திடீரென பணத் தேவை ஏற்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கு வாங்கிய பங்கின் விலை குறைந்து ரூ.90,000-ஆக உள்ளது. இருந்தாலும் அவசரத் தேவை என்பதால், சுரேஷுக்குத் தகவல் தெரிவிக்காமல் அந்தப் பங்குகளை விற்றுவிட்டார். சில மாதங்கள் கழித்து அதே எண்ணிக்கையில் பங்குகளை வாங்க ரூ.1.25 லட்சம் தேவைப்பட்டது. இதனால் விற்ற பங்குகளை திரும்பவும் வாங்காமல் விட்டுவிட்டார் கமல். ஓராண்டு கழிந்த நிலையில், தனது முதலீடு ரூ.1.75 லட்சமாக அதிகரித்திருக்கும் என்று நினைத்து பங்குகளை விற்பதற்காக சுரேஷ் தயாராக, அந்தப் பங்குகளை ஏற்கெனவே விற்றுவிட்டதாக கமல் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனார்.

பங்கு விற்ற பணம் ரூ.90 ஆயிரத்தை உடனடியாக தர இயலாது என்றும், மாதம் 10,000 ரூபாய் வீதம் 9 மாதங்களில் தருவதாகவும் சொன்னார் கமல். சுரேஷுக்கு தான் செய்த தவறு இப்போது புரிந்தது. சில நூறு ரூபாயை செலவழித்து தன் பெயரில் ஒரு டீமேட் கணக்கைத் தொடங்கி இருந்தால், இன்றைக்கு 1.75 லட்சம் ரூபாய் லாபம் பார்த்திருக்கலாமே என்று நினைத்து நொந்துபோனார்.

சுரேஷ் செய்த தவறை நீங்களும் செய்து நஷ்டப்படாதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism