Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் - நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் - நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரம் பங்குகளை வாங்குவதற்காகத் தரப்பட்ட இலக்குகள்  எதுவும் எட்டப்படவில்லை. வாரத்தின் ஆரம்பத்தில் சந்தை இறக்கத்திலேயே வர்த்தகமானது. கிட்டத்தட்ட வாரம் முழுக்க இதே நிலைதான் காணப்பட்டது. அமெரிக்க ஃபெடரல் கூட்டம் நடக்கப்போவதை, சந்தை சற்று தயக்கத்துடனே அணுகியது. ஆனால், வட்டி விகிதம் 0.25% அதிகரிக்கப்பட்டதும், இந்திய பங்குச் சந்தை, சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானது.

வரும் வாரமும் சந்தை தொடர்ந்து இறங்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் பெரிய செய்திகளோ, நிகழ்வுகளோ இல்லை என்பதால், சந்தையின் போக்கை கணிப்பது கஷ்டமாக இருக்கும்.  உள்ளூர் செய்திகள் பங்கின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில், இது சந்தையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அந்த வகையில் அடுத்த வாரம் சந்தையில் ஏற்றமோ, இறக்கமோ குறைந்த அளவுக்கே இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி 8075 என்பது முந்தைய வாரத்தின் குறைந்தபட்ச புள்ளி. இது முதல் சப்போர்ட்-ஆக இருக்கிறது. இது இன்ட்ரா டே சார்ட்டில் குறுகிய கால டிரெண்ட்லைன்-ஆக இருக்கிறது. இதற்கு கீழே இறங்கினால் 8000-ஐ நோக்கி இறங்கக்கூடும். அந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆப்ஷன் - ஓப்பன் இன்ட்ரஸ்ட் பொசிஷன்கள் இறக்குவற்கான குஷன்-ஆக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!அதேசமயம் சந்தை ஏற்றம் காண தொடங்கினால், நிஃப்டி 8285-க்கு உயரக்கூடும். 8300 ஸ்ட்ரைக் விலையில் அதிக எண்ணிக்கையில் கால் ஆப்ஷன் ஓப்பன் இன்ட்ரஸ்ட் இருப்பதால், இது நடக்க வாய்ப்பு குறைவுதான்.

பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், தனியார் வங்கிகளின் பங்கு விலை இறக்கம் கண்டுவருவதால் பேங்க்  நிஃப்டி  ஏற்றம் காணுவதற்கான சூழ்நிலை இறுக்கமாக காணப்படுகிறது. பேங்க் நிஃப்டி-ன் முக்கிய சப்போர்ட்-ஆக 18200 இருக்கிறது.

ஐடி பங்குகள் விலை ஏற ஆரம்பித்திருக்கின்றன. இது வங்கிப் பங்குகளின் விலை இறக்கத்தால் ஏற்பட்டுள்ள சந்தை பலவீனத்தைக் குறைத்துள்ளன. எனவே, நிஃப்டி ஏற்றம் காண இதர துறை பங்குகள் உதவ வேண்டும்.

ஏ.ஐ.ஏ இன்ஜினீயரிங் (AIAENG)

வாங்கலாம்

தற்போதைய சந்தை விலை : ரூ.1,316.80

பொறியியல் துறையைச் சேர்ந்தது, இந்த நிறுவனம்.  இந்த  நிறுவனம்  பொறியியல் வேலை களுக்கு தேவையான இயந்திரங்களின் பாகங்களை வடிவமைத்தல், கட்டமைத்தல், உற்பத்தி, பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக, இந்த நிறுவனம் குரோமியத்தில் தயாரான பாகங்களையே பெரிதும் பயன்படுத்தி வருகிறது. இந்த பாகங்கள் அதிகம் தேய்மானம் அடையும் சிமென்ட் நிறுவனங்கள், நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்த நிறுவனப் பங்கின் விலை நிலையாக ஏற்றம் கண்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த பங்கின் விலை பிரேக் அவுட் ஆகி, புதிய விலை உச்சங்களைக் காண தயாராக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்தப் பங்கின் விலை கன்சாலிடேட் ஆகியிருந்ததால், இந்தப் பங்கின் சார்ட்டில்கூட நல்ல பேட்டன்கள் உருவாகி இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே, இந்தப் பங்கு அடுத்துவரும் மாதங்களில் நல்ல விலை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலையாக ரூ.1500 -ஆக வைத்துக் கொள்ளவும். 3 - 6 மாதத்துக்குள் இந்த பங்கின் விலை ஏற்றம் காணலாம்.

பலாசூர் அலாய்ஸ் (ISPATALLOY)

வாங்கலாம்

தற்போதைய விலை : ரூ.51.65

இந்தியாவில் இரும்பு உலோகக் கலவை (ஃபெர்ரோ அலாய்) தயாரிப்பது மற்றும் சப்ளை செய்வதில் முக்கியமான பெரிய நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று. அதுவும் இந்த நிறுவனம் தன் சொந்த சுரங்கங்களையும் வைத்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்த நிறுவனத்துக்கு பல தொழிற்சாலைகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் கேட்கும் விதத்தில்  ஃபெர்ரோ அலாய்களை தயாரித்து தர முடிகிறது. சமீபத்தில் சந்தையில் ஃபெர்ரோ அலாய்களின் விலை அதிகரித்து வருவதால், இந்த நிறுவனத்தின் பங்கின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை இன்னும் சில வாரங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில்தான் இந்த பங்கு, தன் சுவிங் ஹை விலையான ரூ.42-ஐக் கடந்தது. எனவே, இனிவரும் மாதங்களில் தன் வாழ் நாள் உச்சமான ரூ.72 -யைக் கடந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கவும். ஸ்டாப் லாஸாக ரூ.42-யை வைத்துக்கொள்ளவும்.

பி.டி.எல் என்டர்பிரைசஸ் (PTL)


வாங்கலாம்

தற்போதைய விலை : ரூ.147.15


இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அர்டெமிஸ் மெடிகேர் சர்வீசஸ்,  அர்டிமிஸ் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்கிற புதிய மருத்துவ மனையை குர்கானில் தொடங்கி இருக்கிறது. இது அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தக் காரணத்தால் இந்த நிறுவனப் பங்கின் விலை, நிலையாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு மாத காலங்களில் இந்த பங்கின் விலை கன்சாலிடேட் ஆகி இருந்தாலும், பங்கின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சார்ட்டில் மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்ஸ் (Moving Average Convergence Divergence - MACD) உருவாகி இருக்கிறது. இதனால் பங்கின் விலை ஏற்றம் காணும் எனலாம். குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.170 - 185 வரை அதிகரிக்கலாம். தற்போதைய விலையில் இந்த பங்கை வாங்கவும். 130 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.