Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்!

கடந்த 2016 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய  இந்திய பங்குச் சந்தையின் ஏற்றம், சந்தையில் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் வங்கிப் பங்குகள் இந்த ஏற்றத்துக்கு வலிமை சேர்த்தது என்றே சொல்லலாம். சொல்லப்போனால், ஐ.டி துறை சார்ந்த பங்குகள்கூட இந்த ஏற்றத்தை தாங்கிப் பிடித்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


 கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க விசா  தொடர்பாக  வெளியான அறிவிப்புகளால்தான் ஐ.டி பங்குகளின் டிரெண்ட் மாறத் தொடங்கின. இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் டிரெண்ட் தொடர மற்ற துறைகளின் ஏற்றமே போதுமானதாக இருந்தது. 

இந்தப் புத்தாண்டில், சந்தை ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருப்பதாகவே தெரிகிறது. இனியும் இந்த ஏற்றம் தொடருமா என்பதுதான் கேள்வி.

நிஃப்டி சார்ட், இதுவரை 7950 என்கிற புள்ளிகளுக்கு அருகில் 2 லோ லெவல் களுக்கு வந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் ஏற்றம் எப்படியோ அடித்துப்பிடித்து, தங்களுடைய சுவிங் ஹை புள்ளிகளைக் கடந்து, 8294 புள்ளிகளுக்கு மேல் நிலை பெற்று வர்த்தகமாக முயற்சித்து வருகிறது.

ஆக, ஒரு டபுள் பாட்டத்தை சார்ட்டில் பார்க்க முடிகிறது. எனவே, இதில் இருந்து ஒரு நல்ல பிரேக் அவுட்டை எதிர்பார்க்கலாம். அப்படி ஒரு நல்ல பிரேக் அவுட்டுக்கு, விலையின் ஏற்றத்தை அதிகரித்துக்கொண்டு செல்ல நல்ல மொமென்டம் தேவை. இந்த மொமென்டம்தான் சந்தையில் தற்போது இல்லாமல் இருக்கிறது. நிஃப்டி ஃப்யூச்சருக்கு 8350 என்கிற புள்ளியும், பேங்க் நிஃப்டிக்கு 18500 என்கிற புள்ளியும் சற்றே வலுவான ரெசிஸ்டென்ட் புள்ளியாகத்தான் இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ஒன்று சந்தை மேல்நோக்கி உயர்வதற்கோ அல்லது மொத்தமாக டிரெண்ட் வீழ்வதற்கான சூழலோ இருக்கிறது.  வழக்கம்போல இந்த டிரெண்டைத் தூக்கிப்பிடிக்க வங்கித் துறை பங்குகள் தேவைப்படுகிறது. அதோடு மற்ற துறைகளும் தற்போதைய விலையில் இருந்து சற்றே முன்னேறினால்தான் இந்த ஏற்றம் தொடரும்.

ஒட்டுமொத்தத்தில், சந்தையில் அதிகமானவர்கள் வியாபாரம் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், ஐ.டி துறையும் அதிகம் இறக்கம் கண்டு விடக்கூடாது (ஐ.டி துறை நிஃப்டியில் குறிப்பிடத்தக்க வெயிட்டேஜ் இருப்பதை கவனத்தில் கொள்ளவும்!).

இந்த முக்கிய தருணத்தில் எந்த பாசிட்டிவ் செய்தி வந்தாலும், அது காளைகளுக்குச் சாதகமாக இருக்கும். அதேபோல், எந்த நெகட்டிவ் செய்தி வந்தாலும் கரடியின் கைகளை ஓங்க வைக்கும். குறிப்பாக, சந்தையில் மொமென்டம் குறைவாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, சந்தையின் டிரெண்டைக் கவனித்து, டிரேடர்கள் வியாபாரத்தை மேற்கொள்ளவும். முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃபோர்டிஸ் ஹெல்த் (FORTIS)

தற்போதைய விலை: ரூ.190.90

வாங்கலாம்


இந்தப் பங்கின் சார்ட்டைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு நல்ல செய்திக்காகக்  காத்திருத்தது போல தெரிகிறது. இந்தப் பங்கின் விலை கடந்த 18 மாதங்களாக ரூ.155-195 ரூபாய்க்குள்ளேயே கன்சாலிடேட் ஆகி வந்தது. கடந்த வாரத்தில், சிங் சகோதரர்கள் கே.கே.ஆர் நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பங்குகளை விற்க இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்துதான் கன்சாலிடேட் ஆன விலை, பிரேக் அவுட் ஆகி இருக்கிறது. அதோடு இந்தப் பங்கில் வர்த்தகம் மேற்கொள்ள பல வியாபாரிகளை இந்தச் செய்தி ஈர்த்திருக்கிறது. எனவே, விலையும் அதிகரித்து வருகிறது. இந்தப் பங்கை ரூ.195-க்கு மேல் வாங்கவும். இலக்கு விலை 245 ரூபாய்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எஸ்பி அப்பேரல்ஸ் (SPAL)

தற்போதைய விலை : ரூ.347.65

வாங்கலாம்

சமீபத்தில் சந்தைகளில் பட்டியலிடப் பட்ட,  ஆடைகளை ஏற்றுமதி செய்யக் கூடிய நிறுவனம். பட்டியலிடப்பட்ட உடன்  பங்கின் விலை சற்று ஏற்றம் கண்டது. அதன்பின் 350 ரூபாய் என்கிற உச்சத்தைத் தொட்டு சிறிய இறக்கத்துடன் நிலையாக வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் இந்தப் பங்கின் விலை மீண்டும் தன் உச்சத்தை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, இந்த முறை தன்னுடைய உச்ச விலையான 350 ரூபாயைத் தாண்டி விலை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கலாம்.  இந்தப் பங்கின் விலை 360 ரூபாயை உடைத்தப்பிறகு வாங்கவும். 350 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக்கொள்ளவும். மூன்று மாத இலக்கு விலையாக 400 ரூபாய்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வினதி ஆர்கானிக்ஸ் (VINATIORGA)

தற்போதைய விலை: ரூ.626.40

வாங்கலாம்

சிறப்பு வகை கெமிக்கல்களைத் தயாரித்து வருகிறது. அத்துடன் ஆர்கானிக் இடைநிலைப் பொருட்களையும், பாலிமர்களையும் தயாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இந்த நிறுவனப் பங்கின் விலை 350 ரூபாயிருந்து 665 ரூபாய் வரை அதிகரித்தது.  இந்த விலை ஏற்றத்தில் சிறிய பகுதியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.  கடந்த வாரம் இந்தப் பங்கு தன் உச்ச விலையை உடைத்து அதிகரிக்க முயற்சித்ததைப் பார்க்க முடிகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை 3 மாத இலக்கில் வாங்கலாம். 620 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக்கொள்ளவும். 700 - 725 ரூபாய் வரை இலக்கு விலையாக வைத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு : மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.