Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் 
 நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964


இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தின் போக்கில் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டதைப் பார்த்தோம். அதே சமயம், இறக்கம் அடைவதற்கான சூழ்நிலைகள் சற்று உருவானதையும் உணர முடிந்தது.

ஆனாலும், இந்தியச் சந்தைகள் ஓரளவு சமாளித்துக்கொண்டு இறக்கம் அடையாமல் அதிக ஏற்றத்தைச் சந்தித்து, தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமானது.

இதற்காகத்தான் நாம் அனைவரும் காத்திருந்தோம். வங்கிகள் மிக நன்றாகவே ஏற்றம் அடைந்திருக்கின்றன. ஐ.டி துறை பங்குகளும் இறக்கம் அடைவதிலிருந்து மீண்டு ஏற்றமடைந்து வந்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற வாரம் நாம் குறிப்பிட்டது போலவே, இந்த இரண்டு துறை பங்குகளின் சிறப்பான செயல்பாடுகளால் சந்தை தொடர்ந்து ஏற்றம் அடைந்ததோடு, நிஃப்டி தன் முதல் இலக்கான 8350-ஐ தாண்டி வர்த்தகமாகி, அடுத்த இலக்கான 8425 என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பேங்க் நிஃப்டியும் தனது அடுத்த ரெசிஸ்டன்ஸ் இலக்கான 19000-ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  

பங்குகளின் வளர்ச்சிக்கான காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இண்டஸ்இந்த் வங்கியின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்திருப்பதன் மூலம், அது பிற வங்கிகளின் வளர்ச்சிக்கான ஆரம்பமாக இருக்கிறது. இதுநாள் வரை இறக்கத்தில் சோர்ந்து போயிருந்த சந்தைக்கு இது திருப்பத்தைத் தந்திருக்கிறது. அதேபோல், ஐ.டி துறையின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ்  சந்தையை ஏமாற்றவில்லை. அடுத்து, இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவு வர இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

காலாண்டு முடிவுகள் வரவிருக்கும் நிலையில், அதன் பங்குகளில் நடக்கும் வர்த்தகங்களைப் பார்க்கும்போது, அதன் முடிவுகள் அவ்வளவு மோசமாக இருக்காது என்றே தெரிகிறது. எனவே, ஐ.டி துறை பங்குகள் மேலும் ஏற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நிஃப்டியின் போக்குக்கும் பாசிட்டிவாக இருக்கும். 

அதற்குத் தேவைப்படுவதெல்லாம்  தொடர்ச்சியான பாசிட்டிவ் செய்திகள் மட்டுமே. இப்போது (8450) நிஃப்டி ஃப்யூச்சர்ஸில் 50% ரீட்ரேஸ்மென்ட் நடந்திருக்கிறது. மேலும், இது  (வியாழக்கிழமை) இறக்கத்திலிருந்து 13-வது நாள்.  எனவே, சீக்கிரத்தில் நமக்கான நேரமும் நல்ல விலையும் ஒன்றாக வர வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கலாம். தற்போது சென்டிமென்ட் கொஞ்சம் துடிப்புடன் இருப்பதால், குறுகிய கால ‘டாப்பிங் ஆக்‌ஷன்’ ஏற்படலாம் என்பதையும் வர்த்தகர்கள் எச்சரிக்கை யுடன் கவனிக்க வேண்டும். லாங் பொசிஷன்களை உறுதியான ஸ்டாப் லாஸுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மெக்மானி ஆர்கானிக்ஸ் (MEGH)

தற்போதைய விலை: ரூ.44.15

வாங்கவும்

ஸ்மால் கேப் நிறுவனமான இது பிரத்யேகமான கெமிக்கல்களை உற்பத்தி செய்து வருகிறது. இதன் சார்ட் பேட்டர்ன் சற்று கவர்ச்சிகரமாக உள்ளது. அக்டோபர் 16-ல் ஏற்பட்ட உறுதியான விலை ஏற்றத்துக்குப் பிறகு இந்தப் பங்கு 52 வார உச்சத்தை எட்டியது. பிறகு இந்தப் பங்கில் ஏற்பட்ட எதிர்வினையால் இறக்கம் அடைந்து, தற்போது ரீட்ரேஸ்மென்ட் மண்டலத்தின் 50 சதவிகித கட்டத்தில் இருக்கிறது.

மேலும், அதன் சார்ட் பேட்டர்னில் ஏற்றத்துக்கான மொமென்டம் புதிதாகத் தொடங்கி இருப்பது தெரிகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.56 என்ற புதிய உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எம்எம்டிசி (MMTC)

தற்போதைய விலை: ரூ.71.55

வாங்கவும்

கமாடிட்டி சார்ந்த பல நிறுவனங்களின் பங்குகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்களின் ஆர்வம் கமாடிட்டியை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனங்களான எஸ்டிசி மற்றும் எம்எம்டிசி நிறுவனப் பங்குகளின்மீது திரும்பி உள்ளது. எம்எம்டிசி பங்கின் வரலாற்றில் அதிகபட்ச விலை உயர்வு கண்ட பின், அரசின் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் நடவடிக்கைக்குப் பிறகு சரியத் தொடங்கியது. ஆனால், தற்போது மீண்டும் இந்தப் பங்கு ஏற்றம் அடைவதற்கான ட்ரெண்டுகள் உருவாகி இருப்பது அதன் சார்ட் பேட்டர்ன்களில் தெரிகிறது.

சமீபத்தில் இந்தப் பங்கில் ஏற்பட்டுள்ள திருப்பம், இந்தப் பங்குகளை வாங்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பாசிட்டிவான சார்ட் பேட்டர்ன் உருவாகி இருப்பது மட்டுமல்ல, வர்த்தகமாகும் பங்குகளின் அளவும் இந்தப் பங்கில் நல்ல மொமன்டம் உருவாகி இருப்பதை உறுதி செய்கிறது. குறுகிய காலத்தில் ரூ.80-85 வரை உயர வாய்ப்பிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 63 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விரிஞ்சி டெக்னாலஜி (BSE: 532372)

தற்போதைய விலை: ரூ.87.40

வாங்கவும்

ஐ.டி துறை பங்கான விரிஞ்சி டெக்னாலஜி பங்கை சில பெரிய முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கி இருப்பதாக வந்த செய்திகளால் இந்தப் பங்கின் மீது முதலீட்டாளர்களின் கவனம் குவிந்திருக்கிறது.

கடந்த வருடம் அக்டோபரிலிருந்து இந்தப் பங்கின் வர்த்தகம் சீராக இருந்து வந்துள்ளது. இந்தச் சீரான வர்த்தகப் போக்கு, அந்தப் பங்கு ஏற்றமடைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கின. ஒவ்வொரு ஏற்றத்தின் போதும் அதிக எண்ணிக்கை யிலான பங்குகள் வர்த்தகம் ஆகின. அதோடு மொமன்டமும் சீராக இருக்கிறது. எனவே, இந்தப் பங்கு விலை உயர்ந்து வர்த்தகம் ஆவதற்குத் தயாராக இருக்கிறது.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.105 வரை உயர வாய்ப்பு உண்டு.

தொகுப்பு : ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism