Published:Updated:

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?
என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ்...மு.சா.கெளதமன்

பிரீமியம் ஸ்டோரி
என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதியே தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வரவு செலவுகள் மற்றும் புதிய அறிவிப்புகளை எதிர்நோக்கி மொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. இதில் நிதிச் சொத்துகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் களுக்கும், வர்த்தகர்களுக்கும் எந்த மாதிரியான அறிவிப்புகள் வந்தால், நன்மை பயக்கும் என்பது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள்

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

விளக்குகிறார்கள்.

  பங்குச் சந்தை!


2017 - 18-ம் நிதி ஆண்டில், பங்குச் சந்தைக்கு என்ன மாதிரியான அறிவிப்புகள் வந்தால், நன்றாக இருக்கும் என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டபோது விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பது தொடர்பான பேச்சுக்கள், மத்திய அரசிடமிருந்து வரத் தொடங்கிவிட்டன. பங்குச் சந்தையில், இந்திய மக்கள் தொகையில் 10% மக்கள்கூட வராத நிலையில், நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. எனவே, நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்காமல், பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கான கால அளவை ஓர் ஆண்டில் இருந்து அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கலாம். பல மேலை நாடுகளில் இந்த மூன்று ஆண்டுகள் எனும் கால அளவு பின்பற்றப்பட்டு வருகிறது. 

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் மற்றும் டிரேட் செய்பவர்களுக்கு, எஸ்.டி.டி என்றழைக்கப்படும் செக்யூரிட்டி டிரான்ஸாக்‌ஷன் டாக்ஸ் மற்றும் சி.டி.டி என்றழைக்கப்படும் கமாடிட்டி டிரான்ஸாக்‌ஷன் டாக்ஸ் விதிக்கப்படுகிறது. இந்த இரண்டு வரிகளையும் ரத்து செய்தால், சந்தையில் வியாபாரம் செய்பவர்கள் அதிகம் குழப்பம் அடையாமல் தரகுக் கட்டணத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு வியாபாரம் செய்ய வசதியாக இருக்கும். இதனால் சந்தையில் லிக்விடிட்டி அதிகரிக்கும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வருமானத்துக்கு வருமான வரி முதலில் செலுத்தப்படுகிறது. அதன்பிறகு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்கும் டிவிடெண்ட் தொகை, ஏற்கெனவே வரி செலுத்தி இருந்த லாபத்தில் இருந்துதான் தரப்படுகிறது. லாபத்தை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாகக் கொடுக்க டி.டி.டி (DDT - Dividend Distribution Tax) என்கிற பெயரில் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. மீண்டும் ஒரு பங்குதாரர், டிவிடெண்ட் மூலமாக ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், தனியாக வேறு வரிச் செலுத்த வேண்டியிருக்கிறது. இப்படி ஒரே லாபத்துக்கு மூன்று முறை வரிச் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்குத் தீர்வாக, டிவிடெண்ட் தொகைக்கான வரித் தொகையை முதலீட்டாளர்களிடம் இருந்தே பிடித்தம் செய்வதாக இருந்தால் நன்றாக இருக்கும்.

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?



ஜி.எஸ்.டி வரி எவ்வளவு சீக்கிரம் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, பங்குச் சந்தையில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லது. அதோடு, இந்த ஜி.எஸ்.டி முறையில் மூன்று அல்லது நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட இருக்கின்றன. அதில் பெட்ரோல், டீசல் போன்ற மிகவும் அடிப்படைப் பொருட்கள், தற்போது மிக அதிக வரியுடன் இருப்பதை போலவே வரி விதிக்கப்படாமல், குறைவான வரியுடன் இருந்தால், மொத்தச் சந்தையும் பயன் அடையும். இந்திய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் படிப்படியாகக் குறையும்.

பணப் பரிமாற்றங்களுக்கு அதிகபட்சமாக 0.25 சதவிகிதத் தொகை மட்டுமே கட்டணமாகவோ, கமிஷனாகவோ பிடித்தம் செய்யப்பட வேண்டும். இதையும் பட்ஜெட்டுடன் அறிவித்தால், இந்தியாவில் பணப் புழக்கம் சீராகி, வர்த்தகமும் அதிகரிக்கத் தொடங்கும்; பங்குச் சந்தையும் பாசிட்டிவாகச் செயல்படும்.

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

  மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் என்ன சலுகைகள் தேவை என்று ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி சொன்னார்.

‘‘நேரடியாக முதலீட்டுத் திட்டங்களை ஆராய்ந்து முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் மக்கள் தைரியமாக முதலீடு செய்வது மியூச்சுவல் ஃபண்டுகளில்தான். அதுவும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள், அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை பெரிதாகப் பார்ப்பார்கள். இப்படி இருக்கும் போது, ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு திடீரென நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதற்கான பேச்சுக்கள் அடிபட்டு வருவது, வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு நல்ல முடிவாக இருக்காது. தற்போது இருக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்புகளை மாற்றாமல் இருப்பது நல்லது. அப்படி மாற்றியே ஆகவேண்டும் என்றால், ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு வரி விதிப்பதைவிட, நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கான காலத்தை அதிகப்படுத்துவது கொஞ்சம் நியாயமானதாக இருக்கும். அதோடு, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்போது மியூச்சுவல் ஃபண்ட் துறை அதிகபட்சமாக 15 சதவிகிதத்துக்குள் வரி செலுத்தும்படி இருந்தால், இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் துறை வளர்வதற்கும், அதிக மக்கள் இதில் முதலீடு செய்வதற்கும் வசதியாக இருக்கும்.

மக்களுக்கே இப்போதுதான் ஓய்வு காலத்தைப் பற்றிய தெளிவான யோசனைகள் வரத் தொடங்கி இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில், என்பிஎஸ் திட்டங்களில் ஆண்டுக்கு 50,000 ருபாய் வரை முதலீடு செய்து வரிச் சலுகை அளிப்பதைப் போல, கொஞ்சம் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தனியாக வழங்கினால் நன்றாக இருக்கும்.

முதலில் என்பிஎஸ் திட்டத்துக்கு வழங்கப்படும் அந்த 50 ஆயிரம் ரூபாய் தொகையை எந்த வகையான திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலும், 50,000 ரூபாய்க்கு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கும் ஓய்வு ஊதியத்தின் முக்கியத்துவமும் புரியும்.

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?



  இன்ஷூரன்ஸ்!

இன்ஷூரன்ஸ் துறைக்குத் தேவையான மாற்றங்களைக் குறித்து கவர்ஃபாக்ஸ் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநர் சீனிவாசன் தன் கருத்துக்களை முன்வைத்தார்.

‘‘இன்ஷூரன்ஸ் என்ற உடனே முதலில் நினைவுக்கு வருவது 80C வரிச் சலுகைகள் தான். அப்படி வெறும் வரிச் சலுகைகளுக்கு மட்டுமே பயன்படக் கூடிய ஒரு விஷயமாக இன்ஷூரன்ஸ் இருந்துவிடக்கூடாது. எனவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்குச் செலுத்தும் பிரீமியத் தொகைக்கு 80D வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகை பெற முடிவதுபோல, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்குத் தனியாக ஒரு வரிச் சலுகையினை அறிவித்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக, ஒவ்வொரு குடும்பத்தினருக் கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்கிற எண்ணமும் அதிகரிக்கும்.

ஜி.எஸ்.டி வரி விரைவில் அமல் படுத்தப்பட இருப்பது நமக்குத் தெரிந்ததே. இதில் இன்ஷூரன்ஸ் துறையைக் குறைவான வரி வரம்பில் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் என்பது சேவைத் துறை சார்ந்தது என்பதால் சேவை வரி மற்றும் தீர்வைகளைக் கட்டி களைத்துப்போய் இருக்கிறார்கள்.  இந்த நிலையை ஜி.எஸ்.டி, வரும் காலத்திலாவது மாற்றினால், இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கும், இன்ஷூரன்ஸ் துறையின் வளர்ச்சிக்கும் உதவும்.’’

நிபுணர்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?

ரியல் எஸ்டேட்

வீட்டுக் கடன் வட்டியில் சலுகை!

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?


அனுஜ் பூரி, தலைவர், ஜேஎல்எல் இந்தியா.

‘‘வீட்டுக் கடன் வட்டியில் சலுகை அளிக்கும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன்பெறுவதற்கான தெளிவான விளக்கம் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்.

அண்மையில் பிரதமர், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம்  வரையிலான கடன் திட்டத்தில் 4% வட்டி மானியமும், ரூ.12 லட்சம் வரையிலான கடன் திட்டத்தில் 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் இரண்டு வருமான பிரிவினர் அதிக அளவில் கடன் பெற முடியும். இதற்கு மானியமும் பெற முடியும். இந்த பட்ஜெட்டில் இதில் பயன்பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும்.

முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் மலிவான விலையில் கிடைக்கும் வீடுகளை வாங்கும்போது, அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கூடுதல் வருமான வரிச் சலுகைகள் பெற முடியுமா என்பது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வேண்டும். ‘2022-ல் அனைவருக்கும் வீடு திட்டம்’ எந்தத் திசையில் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் வேண்டும்.

எந்த விதிமுறையும் இல்லாமல் இந்தியாவில் வாடகை வீடுகள் செயல்பட்டு வருகின்றன. இனி வாடகை வீட்டில் வசிப்பதைவிட, வாடகை கொடுக்கும் தொகையில் சொந்த வீட்டிற்கான  தவணை செலுத்தமுடியும் என்றவகையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதுபோல் கொண்டு வருவதற்கு வீடு கட்டுமானப் பணியில் இருப்பவர்களும் முன்வர வேண்டும்.’’

- ஞா.சக்திவேல் முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு