Published:Updated:

பிஎஸ்இ ஐபிஓ... முதலீடு செய்யலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிஎஸ்இ ஐபிஓ... முதலீடு செய்யலாமா?
பிஎஸ்இ ஐபிஓ... முதலீடு செய்யலாமா?

மு.சா.கெளதமன்

பிரீமியம் ஸ்டோரி

சியாவின் மிகப் பழைமை வாய்ந்த பங்குச் சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியல் இடப்படாத பங்குகளே இல்லை. இப்போது அந்த எக்ஸ்சேஞ்சின் பங்குகளே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட இருக்கிறது.        பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இ கூடிய விரைவில் ஐபிஓ வெளியிட இருக்கிறது. அதற்குமுன்பே பிஎஸ்இ தனது ஐபிஓ-வை வெளியிடப் போகிறது.

பிஎஸ்இ ஐபிஓ... முதலீடு செய்யலாமா?

   ஐபிஓ விவரங்கள்!

பிஎஸ்இ இந்த ஐபிஓ வெளியீடு மூலம் 1,350 கோடி ரூபாயைத் திரட்ட இருக்கிறது. ஜனவரி    23 - 25 தேதிகளில் ஐபிஓ வெளியிடப்பட இருக்கிறது. சுமார் 1.54 கோடி பங்குகள் வெளியிடப் பட இருக்கின்றன. ஒரு பங்கின் விலை ரூ.805 - 806  வரை இருக்கும் என்று நிர்ணயத்திருக்கிறார்கள்.

   யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள்?

பிஎஸ்இ எக்ஸ்சேஞ்சில் ஏற்கெனவே பல்வேறு அமைப்புகள் முதலீடு செய்திருக்கின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 4.75 சதவிகிதப் பங்குகளையும், லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4.68 சதவிகிதப் பங்குகளையும் வைத்திருக் கின்றன. தற்போது ஐபிஓ மூலம் சிங்கப்பூர் பங்குச் சந்தை 4.67 சதவிகிதப் பங்குகளையும், ஜார்ஜ் சோரஸ் ‘ப்ராம்டட் குவான்டம்’,  ‘அட்டிக்ஸ் மொரீஷியஸ்’ போன்ற நிறுவனங்கள் 3.68 சதவிகிதப் பங்குகளையும் விற்க இருக்கிறது.

பிஎஸ்இ நிறுவனம் வெளியிடும் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா என்று கார்வி நிறுவனத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“1875-ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காலத்துக்குத் தகுந்தாற் போல தன்னை மாற்றி வடிவமைத்துக்கொண்டு, இன்று ஆசியாவின் மிக வேகமாக வர்த்தகம் நடக்கும் பங்குச் சந்தையாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2011-12 நிதி ஆண்டில், நாள் ஒன்றுக்கு 32.35 கோடியாக இருந்த டிரேடிங் வால்யூம், கடந்த 2015-16 நிதி ஆண்டில் 40.75 கோடியாக அதிகரித்திருக்கிறது.

பிஎஸ்இ ஐபிஓ... முதலீடு செய்யலாமா?

தற்போதைக்கு இந்தியாவில் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் என்னும்போது வெறும் 5 சதவிகித மக்கள்தான் இருக்கிறார்கள். இது வருங்காலங்களில் நிச்சயமாக அதிகரிக்கத்தான் செய்யும் என்னும்போது, ஒரு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும். 

பிஎஸ்இ நிறுவனத்துக்கு இரண்டுவிதமாக வருவாய் வருகிறது. ஒன்று, பங்கு வர்த்தகம் மூலமாகக் கிடைக்கும் வருமானம். இரண்டாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் அளிக்கும் கட்டணங்கள். இதில் 2013 - 14-ம் நிதி ஆண்டில் பங்கு வர்த்தகம் மூலம் வரும் வருவாய் ரூ.187.24 கோடியில்  இருந்து, 2015 - 16-ம் நிதி ஆண்டில் ரூ.243.01 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதே போல், கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டணங்கள் மூலம் 2013 - 14-ம் நிதி ஆண்டில் ரூ.59.14 கோடி யிலிருந்து, 2015 - 16-ம் நிதி ஆண்டில் ரூ.161.11 கோடி யாக அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2015 - 16-ம் நிதி ஆண்டில் 516 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டியிருந்தது. அதில் 273 கோடி ரூபாய் நிகர லாபமாகவும் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி, பிஎஸ்இ நிறுவனத்தின் துணை நிறுவனங்களான சிடிஎஸ்எல்,  ஐசிசிஎல், பிஐஎல், எம்டிபிஎல் போன்ற நிறுவனங்களும் நல்ல லாபத்தில்தான் இயங்கி வருகின்றன.

வெளிவர இருக்கும் பிஎஸ்இ-யின் பங்குகள் அதன் வருவாய் மதிப்பைவிட, 17 மடங்குதான் கூடுதலாக இருக்கிறது. இந்தியாவில் பட்டியலிடப் பட்டிருக்கும் எம்சிஎக்ஸ்-ன் பங்குகள் அதன்  வருவாய் மதிப்பீட்டைவிட சுமாராக 40 மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே, இந்தப் பங்கை ஒரு வாழ்நாளுக்கான நல்ல முதலீடாகக் கருதி வாங்கலாம். தயவுசெய்து பட்டியலிடப்பட்ட பின் சொற்ப லாபத்துக்கு ஆசைப்பட்டு விற்றுவிட வேண்டாம். ரிலையன்ஸ்,  ஹிந்துஸ்தான் யூனிலிவர் போன்று சிறப்பாகச் செயல்பட்டு, நல்ல லாபத்தைத் தரக்கூடியது என்பதை மறக்க வேண்டாம்’’ என்றார் ரெஜி தாமஸ்.

பிஎஸ்இ ஐபிஓ-வில் முதலீடு செய்ய முடிவு செஞ்சுட்டீங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு