Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் 
 நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964


இண்டெக்ஸ்!

கடந்த வாரத்துக்கு, முந்தைய வாரத்திலேயே பங்குச் சந்தை ஏற்றம் காணத் தொடங்கியது. அதே ஏற்றத்தைக் கடந்த வாரத்திலும் பார்க்க முடிந்தது. குறிப்பாக, நாம் கடந்த வாரப் பரிந்துரையில் வழங்கி இருந்த இலக்குப் புள்ளிகளைவிடக்  கூடுதலாக இந்த ஏற்றங்கள் இருந்திருக்கின்றன.

 நிஃப்டி ஃப்யூச்சர் சுமாராக 50% ரிட்ரேஸ் ஆகி, 8450 புள்ளிகள் வரை அதிகரித்தது. பேங்க் நிஃப்டி கூட அதே அளவுகளுக்கு ஏற்றம் கண்டது. சந்தை, நாம் எதிர்பார்த்த நிலையைத் தொட்டுவிட்டது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நடப்பு ஜனவரி மாதத்தின் ரேஞ்ச், சுமாராக 300 புள்ளிகளாக இருக்கிறது. இந்த 300 புள்ளி ரேஞ்ச் என்பதை, இதன் நீண்ட கால சராசரிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிகவும் குறைவு.  இவ்வளவு குறைந்த ரேஞ்ச்களோடு 2007 மற்றும் 2014-ம்  ஆண்டுகளின் ஜனவரி மாதத்தில்தான் வர்த்தகம் நடந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் ஜனவரி மாத சராசரி ரேஞ்ச் அளவான 558 புள்ளிகளைத் தொட வேண்டும் என்றால், இனி சந்தை ஏற்றம் கண்டு, இந்த ரேஞ்சின் அளவை அதிகரிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் சந்தை இறங்கினால், அதை முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பாகக் கருதி வாங்கவும்.  வங்கித் துறை இன்னும் நன்றாகச் செயல்பட வேண்டும். இதுவரை வெளிவந்திருக்கும் காலாண்டு முடிவுகள் ஒரு கலவையாகவே இருக்கின்றன. 

பொதுத் துறை வங்கிகள் வழக்கமானதைவிட  சிறிது தாமதமாகக் காலாண்டு முடிவுகளை வெளியிடும் என்றே தோன்றுகிறது . காலாண்டு முடிவுகளின் தாக்கம் சந்தையில் எப்படி இருக்கிறது என்பதை, பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியான பிறகே தெரிய வரும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேங்க் நிஃப்டி கடந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று 19000 புள்ளிகளை உடைத்திருந்தாலும், அந்த எல்லையைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. 19000 என்கிற லெவலைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இன்னும் சற்று வலுவான முயற்சி தேவைப்படுகிறது. எனவே, இறக்கம் மேலும் தொடர்ந்து, சுமாராக 18700 வரை போகலாம்.

இனிவரும் வாரத்திலும் சந்தை மேல் நோக்கி வர்த்தகம் ஆகும் என்று  எதிர்பார்க் கலாம்.  8300-8330-ல் நிஃப்டி ஃப்யூச்சர்ஸை வாங்கலாம். ஸ்டாப் லாஸாக 8280 புள்ளிகளை வைத்துக்கொள்ளவும். அதேபோல், பேங்க் நிஃப்டியும் 18500 - 18700 புள்ளிகளில் வாங்கலாம். ஸ்டாப் லாஸாக 18450 புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்.

ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் (HINDOILEXP)

தற்போதைய விலை : ரூ.71.75


ஒரு காலத்தில் இந்த நிறுவனப் பங்கின்  விலை அதிகரித்துக் காணப்பட்டது. பிறகு விலை சரியத் தொடங்கி, ஒரு நிலை பெற்று நீண்ட நாட்களாக குறைந்த விலையிலேயே  (சுமார் ரூ.25) வர்த்தகமாகி வந்தது.  கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பங்கின் விலை ஏற்ற இறக்கம் கண்டு, இரண்டு ரவுண்டிங் பேட்டன்களை அமைத்திருப்பதை இதன் சார்ட்டில் பார்க்க முடிகிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது இந்தப் பங்கின் விலை சுமார் 70 ரூபாயில்,  பிரேக் அவுட் ஆகும் தருணத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் தொடர்பாக வரும் செய்திகள் பாசிட்டிவ்வாக இருக்கின்றன. நல்ல காலாண்டு முடிவு, இந்த நிறுவனத்தின் திட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒப்புதல்கள் போன்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

தற்போது இந்தப் பங்கின் சார்ட்டில் இருக்கும் பேட்டன்படி, இதன் விலை 125 ரூபாய் வரை அதிகரிக்கலாம். ஆனால், குறுகிய காலத்தில் பங்கின் விலை 90 ரூபாய் வரை அதிகரிக்கலாம். 68 ரூபாய்க்கு விலை இறங்கும்போது முதலீடு செய்யவும். 65 ரூபாயை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும்.

ஜெய்ஸ்ரீ டீ (JAYSREETEA)

தற்போதைய விலை : ரூ.112.40


சமீபகாலமாக, தேயிலையின் விலை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே, தேயிலை சம்பந்தப்பட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்ட பங்குகளில் ஒன்றுதான் இந்த ஜெய்ஸ்ரீ டீ. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது இந்தப் பங்கின் விலை அதிகரிப்பது ஒரு சிறிய தொடக்கம்தான்.  இனி வருங்காலங்களில் இந்தப் பங்கின் விலை நன்றாக அதிகரிக்கக் கூடும்.  இந்தப் பங்கின் மாதாந்திர சார்ட்டில் நல்ல பேட்டன்கள், குறிப்பாக, பாட்டம் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது.

தற்போதைய விலையில் முதலீடு செய்யாமல், கொஞ்சம் பொறுத்திருந்து 109 ரூபாய் இறங்கியவுடன் முதலீடு செய்யவும்.  சில மாதங்களில் பங்கின் விலை 130 - 140 ரூபாய்க்கு அதிகரிக்கக்கூடும். 95 ரூபாயை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும்.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் (ICICIPRULI)

தற்போதைய விலை : ரூ.359.40


சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கு டெக்னிக்கலாக விளக்கமளிப்பது சிரமமான விஷயம். காரணம், போதுமான டேட்டா இருக்காது. பொதுவாக, ஐபிஓ வந்த பங்குகள், எப்போது தன்னுடைய உச்ச விலையைத் தாண்டி வர்த்தகமாகத் தொடங்குகின்றனவோ, அப்போது விற்ற முதலீட்டாளர்கள் மீண்டும் வந்து, பங்குகளை வாங்கத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.  சமீபத்தில்தான் இந்தப் பங்கின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பங்கு முதன்முறையாக தன்னுடைய லோ லெவல்களில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்த தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து, மற்ற பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஐபிஓ வந்து பட்டியலிடப்பட இருக்கின்றன. எனவே, இந்தப் பங்கின் விலை ஏற்ற வேகம் குறைவாக இருந்தாலும், ஏற்றம் தொடரும் என்றே சொல்லலாம். பொறுமை உள்ள முதலீட்டாளர்கள், இந்தப் பங்கில் முதலீடு செய்து நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்ளலாம். டிரேடர்கள் குறுகிய கால இலக்காக 380 ரூபாய் வைத்து முதலீடு செய்யவும்.

தொகுப்பு: மு.சா. கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு