Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்ஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்!

கடந்த வாரத்தில், வழக்கத்தைவிட சந்தை நல்ல ஏற்றத்தைக் காட்டியது. இத்தனைக்கும் கடந்த வாரத்தில் வழக்கத்தைவிடக் குறைந்த வர்த்தக நாள்கள், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்களின் எக்ஸ்பைரி வேறு இருந்தது. இருந்தபோதிலும் பங்குச் சந்தை அதிகரித்ததுதான் ஆச்சர்யம்.

கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் காளைகள் சந்தையை ஏற்றத்தில் கொண்டு சென்றன. முந்தைய வாரத்தில் காளைகள் சந்தையை ஏற்றத்தில் கொண்டுபோக முடியாதபோது சந்தை, கரடிகளின் பிடியில் இறக்கத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்டச் சூழலில், குறிப்பாக எந்த செய்திகளும் இல்லாத நேரத்தில், கடந்த வாரத்தில் காளைகள் சந்தையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது, நிச்சயமாக

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையை இயக்கும் ஆப்ரேட்டர்களின் வேலையாகதான் இருக்கும்.

இனி ஏதோ சில நல்ல செய்திகள் வர இருப்பதைத்தான் இப்படி சந்தை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம், எப்போதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் பங்குச் சந்தை ஏற்றம் காண்பதைப்போல, இந்த ஏற்றத்தையும் பார்க்கலாம்.

கடந்த வாரப் பரிந்துரையில், மாதாந்திர ஏற்ற இறக்க ரேஞ்சு விலைகள் மிகக் குறைவாக இருப்பதைச் சொல்லி இருந்தோம். அதோடு, இந்த ரேஞ்சுகள் அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் அது, சந்தை ஏற்றம் கண்டு ரேஞ்சுகள் அதிகரிக்கும் என்றும் சொல்லி இருந்தோம். அதேபோல், கடந்த வாரம் மட்டும் சந்தை  355 புள்ளிகள் ஏற்றம் கண்டது. கடந்த ஒரு  மாதமாக ஏற்றம் காண முடியாமல் திணறிய சந்தை, கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டிருக்கிறது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது நடந்திருக்கும் இந்த ஏற்றம், கடந்த மூன்று மாத சராசரியைவிடக் கூடுதலான  எஃப் அண்ட் ஓ ரோல் ஓவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. துறை வாரியாகப் பார்த்தால், மீடியா, டெக்ஸ்டைல், பவர் போன்ற நிறுவனப் பங்குகளில் அதிகம் ரோல் ஓவர் ஆகி இருக்கின்றன. மாறாக, வங்கி, டெக்னாலஜி, கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற  நிறுவனப் பங்குகளில்  மிகக் குறைந்த ரோல் ஓவர்களே ஆகி இருக்கின்றன.
 
இதுவரை சந்தையில் ஏற்றத்தை நிலையாக வைத்துக் கொள்வதற்கான நகர்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. இனிவரும் வாரத்தில் அதற்கான நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதுவரையான சந்தையின் போக்கு நன்றாக இருக்கிறது. அதோடு, சத்தமில்லாமல் லாபத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு முதலீடு செய்துகொள்ளலாம். எனவே, தற்போதைக்கு, லாபத்தை எடுத்துக்கொண்டு, சந்தை புல்பேக் ஆவதற்காக காத்திருக்கவும். இல்லை என்றால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்கவும்.

இப்போதைக்கு பங்குகள் நன்றாக வர்த்தகமாகி வருகின்றன. பங்குகளின் விலை அதன் ஃபண்டமென்டல்கள் மற்றும் அதன் தொடர்பான செய்திகளாலேயே மாற்றம் அடைகின்றன என்பதையும் கவனிக்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் (TVSELECT)

தற்போதைய விலை : ரூ.204.90

வாங்கவும்

பாயின்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்களைத் தயாரிக்கும், இந்த நிறுவனப் பங்குகளுக்கான தேவை, பண மதிப்பு நீக்கத்துக்குப்பிறகு அதிகரித்தது. எனவே, பங்கின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. கிடுகிடுவென உயர்ந்த விலை, ரூ.231 என்கிற 52 வார உச்சத்தைத் தொட்டது. தற்போது இந்தப் பங்கின் சார்ட்டைப் பார்த்தால், ஒரு ‘பென்னன்ட்’  ரக பேட்டன் உருவாகி இருக்கிறது.  எனவே, இந்தப் பங்கின் விலை மீண்டும் தன் 52 வார உச்ச விலையான 231-ஐத் தாண்டி வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.235 இலக்கு விலையாக வைத்துக் கொள்ளலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஸ்டெர்லைட் டெக் (STRTECH)

தற்போதைய விலை: ரூ.120.35

வாங்கவும்

கடந்த 2016-ம் ஆண்டில் சீராக நல்ல விலை ஏற்றத்தைக் கண்ட  நிறுவனப் பங்குகளில் இதுவும் ஒன்று. இந்தப் பங்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறது. எந்த ஒரு பெரிய விலை மாற்றமும் கிடையாது. பொறுமையாக, தேவையான கால அளவை எடுத்துக்கொண்டு விலை மாற்றம் நிகழ்கிறது. இந்த செயல்பாடுகள் சில குறிப்பிட்ட, இந்தப் பங்கின் விலைப்போக்குப் பற்றி நன்கு தெரிந்த வியாபாரிகளால் மட்டுமே நிகழ்கின்றன. கடந்த வாரத்தில் இந்தப் பங்கு, அடுத்த ஏற்றத்துக்குத் தயாராக இருப்பதைக் காட்டி இருக்கிறது.  எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். 

இந்தப் பங்கின் விலை உயர்ந்தால், அதிகபட்சமாக 135 - 140 ரூபாய் வரை அதிகரிக்கலாம். அதன் பிறகு, மீண்டும் விலை 108 என்கிற விலையில் கன்சாலிடேட் ஆகத் தொடங்கும். இது ஒரு நிலையான பங்கு என்பதால், அதிக விலை இறக்கத்தைச் சந்திக்காது. எனவே, 105 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொண்டு முதலீடு செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அட்லஸ் சைக்கிள்ஸ் (ATLASCYCLE)

தற்போதைய விலை: ரூ.517.10

வாங்கவும்

சமீபத்தில்தான் இந்த நிறுவனப் பங்கின் விலை அசுர வேகத்தில் ரூபாய் 500-ல் இருந்து 694-க்கு  அதிகரித்தது. இந்த விலை ஏற்றத்தினால் இந்தப் பங்கு வியாபாரிகள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டது. மற்றபடி இதுவும் ஒரு சாதாரணப் பங்குதான். இந்த பங்கில் திடீரென சில பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததால்தான் இந்த திடீர் விலை ஏற்றம் நடந்தது.  இந்தப் பங்கின் விலை ஏற்றம் எந்த அளவுக்கு வேகமாக இருந்ததோ, அதே அளவுக்கு இறக்கமும் வேகமாக இருந்தது. விலை அப்படியே இறங்கி மீண்டும் 500 ரூபாய் லெவல்களில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிறுவனத்துக்கான பேட்ரனேஜ் (patronage) என்று சொல்லப்படும், வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வந்து ஒரு குறிப்பிட்டத் தொகையை செலவழிப்பது சற்றுக் குறைவாக இருந்தது. அவை இப்போது சரிசெய்யப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கும் இந்தப் பங்கின் விலை, முதலீடு செய்யத் தவறிய முதலீட்டாளர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் பங்கு உடனடியாக விலை ஏற்றம் காணும் என்று சொல்ல முடியாது. எனவே, பொறுமையாக சில மாதங்களாவது காத்திருக்க விரும்பும் முதலீட்டாளர்கள் மட்டும், இந்தப் பங்கை வாங்கவும். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். 450 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும். 750 ரூபாயை இலக்கு விலையாக வைத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு