Published:Updated:

ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!

ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!
ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!

‘‘பட்ஜெட் எப்படி?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘அது இருக்கட்டும். மத்திய பட்ஜெட் தாக்கல் நிறைவடையும்போது சந்தை திடீரென வேகம் எடுக்க என்ன காரணம்..?’’ என்று கேட்டோம்.

‘‘2017-18 -ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் அரசு மிக விவேகமாக நடந்துகொண்டிருக்கிறது. நிதி நெருக்கடி அதிகமாகிவிடாதபடி மிகவும் கவனமாக அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. பங்கு முதலீட்டுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி அதிகரிக்கப்படும்;  மூலதன ஆதாயம் கணக்கிடுவதற் கான ஆண்டுகள் அதிகரிக்கப்படும் என  எதிர்பார்க்கப்பட்டது. இவை நடக்கவில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு பாசிட்டிவ் செய்தி. இதனால், பட்ஜெட் தாக்கலின்போது ஏற்றம் அடையலாமா, வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்த சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் பட்ஜெட் தாக்கல் நிறைவை நெருங்கும் போது கணிசமாக ஏற்றமடைந்து வர்த்தகமானது. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மறைமுக வரியிலும் இந்த பட்ஜெட்டில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டிருப்பது சந்தையின் ஏற்றத்துக்குக் காரணம்.

பட்ஜெட் தாக்கலை ஒட்டி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள், அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அடையாத உச்சத்தை எட்டின. ஏறக்குறைய 1.8% உயர்ந்து வர்த்தகமாயின. இது பட்ஜெட் தினத்தன்று, கடந்த 12 ஆண்டுகளில் காணாத அளவுக்கு அதிகமாகும்.

2017-18-ம் நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.2 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கணிக்கப்பட்ட மூன்று சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகம். ஆனாலும் இது பற்றி எல்லாம் முதலீட்டாளர்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை. ரூ.1,133.70 கோடி மதிப்பிலான பங்குகளை ஃபண்ட் நிறுவனங்களும், பெரு முதலீட்டாளர்களும் நிதி நிறுவனங்களும் வாங்கி உள்ளன. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ரூ.92.7 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்தியச் சந்தைகளின் வாலட்டைலிட்டி குறியீடு மே 2014-க்குப்பிறகு, பிப்ரவரி 1, 2017-ல்  ஒரே நாளில் 17% குறைந்து 13.97 புள்ளிகளானது. இதனால் டிரேடர்களுக்கு குறுகிய காலத்தில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு, வரம்புக்குட்பட்டுதான் இருக்கும் என்று அனலிஸ்ட்டுகள் தெரிவிக்கிறார்கள். இதுபோக சந்தையைப் பாதிக்கும் அமெரிக்க வட்டி விகிதம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைகள் மற்றும் இவற்றினால், சர்வதேச சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஆகிய காரணிகள் இந்தியச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்று நீண்ட விளக்கம் தந்தார். 

‘‘பட்ஜெட் வரி விலக்கு பட்டியலிலிருந்து ஆர்ஜிஇஎஸ்எஸ் வெளியேறுகிறதே..!’’ என்றோம்.


‘‘ராஜீவ் காந்தி பங்குச் சந்தை சேமிப்பு திட்டத்தின் (ஆர்ஜிஇஎஸ்எஸ்) கீழ், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குக் கீழ் உள்ளவர்கள் ரூ.50,000 முதலீடு செய்தால், அதில் 50% அதாவது ரூ.25,000 வரிச் சலுகை கிடைக்கும். அதுவும் முதன் முறையாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர் களுக்குதான். இந்த வரிச் சலுகை 80சி முதலீடு தவிர்த்துக் கூடுதலாகக் கிடைக்கும். 2018-19-ம்  நிதி ஆண்டு முதல் ஆர்ஜிஇஎஸ்எஸ்க்கு வரிச் சலுகை அளிப்பது நிறுத்தப்படும் என 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று குறிப்பிடவில்லை. இந்த முதலீட்டுக்கு, முதலீட்டாளர்கள்  மத்தியில் அதிக ஆதரவு இல்லை என்கின்றன புள்ளி விவரங்கள். இதுதான் காரணமா, இல்லை இந்தத் திட்டத்தின் பெயர் காரணமா எனத் தெரியவில்லை என்கிறார் மும்பை அனலிஸ்ட் ஒருவர்’’ என்று புன்னகைத்தார். 

ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!

‘‘பட்டியலிடப்பட்ட அன்றே பிஎஸ்இ பங்கு விலை கணிசமாக அதிகரித்துள்ளதே?’’ என்றோம் ஆச்சர்யப்பட்டபடி.

‘‘வெள்ளிக்கிழமையன்று ஆசியாவின் மிகப் பழைமையான பங்குச் சந்தையான பிஎஸ்இ-யின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் அந்தப் பங்கின் விலை 35% அதிகரித்து வர்த்தகமானது. இதன் வெளியீட்டு விலை ரூ.806. இதைவிட 35% அதிகமாக ரூ.1,085-க்கு பட்டியலிடப்பட்டது. வர்த்தகத்தின் இடையே ரூ.1,200 வரைக்கும் சென்றது. இந்தப் பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு கொழுத்த லாபம்தான்’’ என்றார் புருவத்தை உயர்த்தியபடி.

‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால்  ஜிடிபி வளர்ச்சி பாதிப்படையுமா?’’ என்று வினவினோம்.

‘‘மத்திய புள்ளிவிவர அலுவலகம் (சிஎஸ்ஓ), பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுப்பதற்குமுன் மேற்கொண்ட கணிப்பின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2016-17-ம் ஆண்டில் ரூ.151.93 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பின் மத்திய நிதி அமைச்சகம் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி,  நாட்டின் ஜிடிபி வளர்ச்சி இந்த ஆண்டில் ரூ.150.75 லட்சம் கோடியாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறது. இது கிட்டத்தட்ட 0.9% குறைவான மதிப்பீடாகும்.”

‘‘மூன்றாம் காலாண்டு முடிவுகள் வங்கிகளுக்கு பாதமாக இருக்கின்றனவே?’’ என்றோம் கொஞ்சம் கவலையுடன்.

‘‘உண்மைதான். வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்கின் நிகர வாராக் கடன், மூன்றாம் காலாண்டில் 2.28 சதவிகிதத்தில் இருந்து 4.35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்த வங்கியின் வாராக் கடனுக்கு ஒதுக்கீட்டை அதிகரித்தால், நிகர லாபம் 19% குறைந்துள்ளது.

யூகோ பேங்க், 2015-16-ம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வாராக் கடனுக்காக ரூ.2,361 கோடியை ஒதுக்கீடு செய்தது. இது நடப்பு 2016-17-ம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.1,326 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியின் நிகர இழப்பு ரூ.1,497 கோடியிலிருந்து ரூ.437 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, நிகர இழப்பு 71% குறைந்துள்ளது’’ என்று விளக்கம் தந்தார்.  

‘‘பங்கு விலக்கல் மூலம் அடுத்த நிதி ஆண்டில் ரூ.72,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட இருப்பதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறாரே!’’ என்று கேட்டோம்.

‘‘அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொண்டு நிதித் திரட்டுவதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசு, அடுத்த இரண்டு மாதங்களில் ரூ.15,000 கோடி நிதித் திரட்ட இருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டு முடிவில் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் மூலம் அரசு திரட்டிய நிதி ரூ.45,550 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.56,500 கோடியை எட்டாவிட்டாலும் இது அதிகபட்ச நிதி திரட்டல்தான்.

வரும் நிதி ஆண்டில் ரூ.72,500 கோடி டிஸ்இன்வெஸ்ட்மென்ட் டார்கெட்டாக பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதற்காக ரயில்வே, பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங் களின் பங்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆனால், ரூ.72,500 கோடியை முழுமையாகத் திரட்ட முடியுமா என்பது சந்தையின் போக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றைச் சார்ந்தே இருக்கும்” என்றவர், கிளம்பும் முன் வாட்ஸ்அப்பைப் பார்த்தார்.

‘‘நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்எஸ்இ)-ன் புதிய நிர்வாக இயக்குநராக  ஐடிஎஃப்சி-யின் நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமேய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் வரும் மார்ச் மாதம் பங்குச் சந்தையில் என்எஸ்இ  பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ!

அங்கீகாரம் இல்லா மனை, வீடுகளுக்கான தடை நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனை மற்றும் வீடுகளை தடை செய்ய கடந்த 2016 செப்டம்பர் 9 -ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 30-ம் தேதிக்கு வந்தது. தமிழக அரசின் வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்கவே, விசாரணை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.