Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

டந்த வாரத்தில் முக்கிய நிகழ்வாக அமைந்தது மத்திய பட்ஜெட் தாக்கல். சந்தை ஆர்வலர்கள், இந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் புதிய வரி விதிப்புகளோ அல்லது அரசியல் ரீதியிலான அறிவிப்புகளோதான் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!ஆனால் பட்ஜெட்டில் இவை இரண்டுமே இல்லாதது உறுதியானதும் சந்தை, ஏற்றத்தை நோக்கி வர்த்தகமாகத் தொடங்கியது. அன்றைய வர்த்தகத்தின் முடிவில் சந்தைக் குறியீடுகள் உச்சத்தை நோக்கி நகர்ந்தன. பிறகு சந்தை பெரிய பதற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து வர்த்தகமானது. இப்போது சந்தைக்கு மேலும் இரண்டு முக்கிய நிகழ்வுகள்க் வரும் வாரத்தில் காத்திருக்கின்றன.

வாரத்தின் தொடக்கத்தில் (பிப்ரவரி 8) ரிசர்வ் வங்கிக் கூட்டம் இருக்கிறது, அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இவற்றையொட்டி பார்க்கும்போது, சந்தையின் போக்கு பட்ஜெட்டுக்குப் பிறகு உறுதித் தன்மையுடன் தொடர்ந்தாலும் வரும் வாரத்தில் இருக்கும் நிகழ்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டியிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி தற்போது  அதன் 78.6 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் விலை ஏற்றம் தொடர்வது தடுக்கப்படலாம். பேங்க் நிஃப்டி, அதன் முந்தைய பிவோட் (pivot)  வரம்புக்குள் 20300 புள்ளிகள் என்ற நிலையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஏற்றம் அடைவதும் குறையும். ரிசர்வ் வங்கிக் கூட்டம் முடியும் வரை இந்த நிலைதான் தொடரும். 

எனவே, பங்குச் சந்தை இறங்கக் கூடும். தனிப்பட்ட நிறுவனப் பங்குகளின் செயல்பாட்டைப் பொறுத்து மட்டுமே வர்த்தகமாகும் நிலைக்கு அது தள்ளப்படும். ஐ.டி மற்றும் பார்மா துறைப் பங்குகளின் வர்த்தகம் இறக்கம் அடைவதிலிருந்து தடுக்கப் பட்டு ஏற்றமடையத் தொடங்கி இருப்பது,  நிஃப்டியின் போக்கை      8750-8600 என்ற வரம்புக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பது மட்டும்தான் இப்போதைக்கு உள்ள ஆறுதல்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஏரிஸ் அக்ரோ (ARIES)

தற்போதைய விலை ரூ.180.20

வாங்கலாம்

இந்த நிறுவனம் செடிகள் மற்றும் விலங்குகளுக்கான நுண்சத்து (மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்) மற்றும் பிற சத்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்து வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் உள்ள தரமான சத்துப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் சேர்ந்து பிரத்யேகமான மார்க்கெட்டிங் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பங்கின் விலை  பேட்டர்ன் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாகவே இருந்திருப்பதால் அதன் தற்போதைய நிலையை உடைத்து ஏற்றமடைவதற்கான சூழலுக்குத் தயாராக இருக்கிறது.

எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த சில மாதங்களில் இதுவரை இல்லாத ரூ.225 என்ற புதிய உச்சத்தை அடைய வாய்ப்பிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எஸ்கார்ட்ஸ் (ESCORTS)

தற்போதைய விலை ரூ.380.25

வாங்கலாம்

பட்ஜெட்டினால் பலனடையப் போகும் நிறுவனங்களில் எஸ்கார்ட்ஸ் நிறுவனமும் ஒன்று. கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் பிரிவுக்கு பாசிட்டிவாக மாற வாய்ப்புள்ளது.

சில காலமாகவே இந்தப் பங்கின் விலைப் போக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. முன்னதாக இந்தப் பங்கின் விலையில் ஏற்பட்ட கரெக்‌ஷனால் ரூ.415-லிருந்து ரூ.280-க்கு இறங்கியது. தற்போது மீண்டும் ஏற்றமடையத் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் பழைய நிலையை அடையும் அளவுக்கு அதன் வர்த்தகத்தில் ஏற்றத்துக்கான மொமென்டம் இருக்கிறது.

எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த சில மாதங்களில் அதிகபட்சமாக ரூ.440 வரை உயர வாய்ப்பிருக்கிறது. ஸ்டாப் லாஸ் ரூ. 360 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிஎல்எஃப் (DLF)

தற்போதைய விலை: ரூ.143.55


வாங்கலாம்

பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கும் கணிசமான பலன் இருக்கிறது. காரணம், வீட்டு வசதிப் பிரிவுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றும், அதன் பிறகும் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் ஏற்றமடைந்தன.

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டிஎல்எஃப்-க்கும் பட்ஜெட்டினால் பலன் இருக்கிறது. மேலும், சமீப காலமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கணிசமாக ஏற்றம் கண்டு வருகிறது. வரும் காலங்களில் இந்தப் பங்கு விலை மேலும் ஏற்றமடைவதற்கு வாய்ப்பு நன்றாகவே உள்ளது.

 தற்போது இந்தப் பங்கின் குறுகிய கால ரெசிஸ்டன்ஸ் நிலையை உடைத்து, 160-170 என்ற நிலைக்கு விரைவாக உயர வாய்ப்பிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.132 ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.