Published:Updated:

ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு!

ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த  இந்தியன் வங்கிப் பங்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு!

ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு!

ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு!

ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு!

Published:Updated:
ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த  இந்தியன் வங்கிப் பங்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு!
ஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த  இந்தியன் வங்கிப் பங்கு!

‘‘உமது ஆதரவு யாருக்கு, ஓ.பி.எஸ்-க்கா, சி.கே.எஸ்-க்கா?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘எங்கள் கருத்து இருக்கட்டும். நாணயம் விகடனின் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/NaanayamVikatan) இது தொடர்பாக ஒரு சர்வே நடத்தினோம். ‘ஓ.பி.எஸ், சி.கே.எஸ் - இந்த இருவரில் யார் தமிழக முதல்வரானால், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்?’ என்று கேட்டோம். இந்த சர்வேயில் வாக்களித்த வாசகர்களில் சுமார் 75% பேர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், 1% பேர் சிகேஎஸ்-க்கு ஆதரவாகவும், 24% பேர் இருவருமே இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் ஒருபக்கம் இருக்கட்டும். பொருளாதாரச் செய்திகளை முதலில் சொல்லுங்கள்’’ என்று அவரை செய்திகள் பக்கம் இழுத்தோம். தொண்டையை செருமியபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். நாம் அவரிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

‘‘இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் என்ன பிரச்னை?’’

‘‘இந்தியாவின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ், கார்ப்பரேட் கவர்னன்ஸுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. 2015 ஜூன் மாதத்துக்குப் பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சில நிர்வாக மீறல் நடந்திருப்பதாக அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். பொதுவாக, வேலையை விட்டுச் செல்லும் பணியாளர்களுக்கு 80% சம்பளம்தான் தரப்படும். ஆனால், ஒருவருக்கு மட்டும் 100% சம்பளம் அதிகம் தரப்பட்டிருக்கிறது. இது குறித்து இன்ஃபோசிஸ் சிஇஓ விஷால் சிக்கா, சேர்மன் ஆர்.சேஷசாயி, தனிப்பட்ட இயக்குநர் ஜெஃப்ரி லெக்மன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல். நாராயணமூர்த்தி சந்தேகிக்கிற மாதிரி எந்த விதிமுறை மீறலும்  நடக்கவில்லை என்கிறார் விஷால் சிக்கா. ஏற்கெனவே ஹெச்1-பி விசா பிரச்னை ஒருபக்கம் இருக்க, இந்த சர்ச்சையினால் இன்ஃபோசிஸ் பங்கின் விலை பெரிதாகக் குறையவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம்.’’

‘‘நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எப்படி வருகின்றன?’’

‘‘கலவையாகவே வருகின்றன. எஸ்பிஐ வங்கியின் இதர வருமானம் அதிகரித்ததால், மூன்றாம் காலாண்டில் அதன் நிகர லாபம் 134% அதிகரித்து ரூ.2,610 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்)-ன் நிகர இழப்பு மூன்றாம் காலாண்டில் பாதியாகக் குறைந்து ரூ.795 கோடியாக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பையும் தாண்டி, பாரத் பெட்ரோலியத்தின் நிகர லாபம் 47% உயர்ந்துள்ளது. கெய்ர்ன் இந்தியாவின் செயல்பாட்டு லாபம் குறைந்து போனதால், மூன்றாம் காலாண்டில் அதன் நிகர லாபம் 22% குறைந்துள்ளது.’’

“செபியின் தலைவராக அஜெய் தியாகி நியமிக்கப்பட்டிருக்கிறாரே?”


“பொருளாதார விவகாரத் துறையின் முதலீட்டு பிரிவின் கூடுதல் செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜெய்  தியாகி (Ajay Tyagi), இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார்.”

‘‘ஐடிசி பங்குகள் கடந்த செவ்வாய் அன்று 5.6% உயர்ந்திருக்கிறதே?’’


‘‘மத்திய அரசு, தனது ஸ்பெசிஃபைட் அன்டர்டேக்கிங் ஆஃப் யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா  (SUUTI) என்ற அமைப்பின் மூலம் ஐடிசி நிறுவனத்தில் பங்கு மூலதனத்தை வைத்திருந்தது. இதிலிருந்து தற்போது இரண்டு சதவிகிதப் பங்குகளை விற்றதன் மூலம் ஐடிசி-யில் அரசு வைத்திருந்த பங்கு மூலதனம் 9.17 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. மூன்று பிரிவுகளில் மொத்தமாக 24.25 கோடி பங்குகள். அவற்றின் மதிப்பு ரூ.6,700 கோடி. அரசு விற்ற இரண்டு சதவிகிதப் பங்கை ரூ.275.85 விலையில் முழுமையாக எல்ஐசி நிறுவனம் வாங்கிக் கொண்டது. இதனால் ஐடிசி-யின் பங்குகள் கடந்த செவ்வாய் அன்று ஒரே நாளில் 5.6% உயர்ந்து வர்த்தகமானது. 2017 தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஐடிசி 14.6% உயர்ந்திருக்கிறது. எஸ்யுயுடிஐ, மேலும் பட்டியலிடப்பட்டுள்ள 43 நிறுவனங்களில் பங்கு மூலதனம் வைத்துள்ளது.’’

‘‘வங்கிகள் வாராக் கடன் அதிகமாக இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் பங்கு விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதே..!’’

‘‘இந்தியன் வங்கிப் பங்கு விலை 2016-ம் ஆண்டில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர் கடன்களில் அதிகக் கவனம் செலுத்தியதால், இந்த வங்கியின் லாபம் அதிகரித்துள்ளது. அது இந்தப் பங்கின் விலையிலும் எதிரொலித்துள்ளது. கார்ப்பரேட் கடன்களைக் காட்டிலும், நுகர்வோர் கடன்களை அதிகமாக வழங்கியதன் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமானது. மேலும், ஆசியாவிலேயே சிறப்பாக லாபம் கொடுத்த வங்கிப் பங்காக இந்தியன் வங்கிப் பங்கு உள்ளது. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் கடந்த 12 மாதங்களாகவே வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவிப்பதால்,  அவற்றின் பங்குகள் சிறப்பாகச் செயல்படவில்லை.’’

‘‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் விரைவில் ஐபிஓ வரும் போலிருக்கிறதே?’’

‘‘இந்தியாவின் பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், இன்னும் 6 முதல் 8 மாதங்களில் பொதுமக்களுக்கு, பங்கு வெளியிட உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது அரசின் பங்கு மூலதனம் 100 சதவிகிதமாக உள்ளது. இது 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜி.ஸ்ரீனிவாசன் உறுதிப்படுத்தி உள்ளார்.’’

‘‘குஷால் டிரேடுலிங் நிறுவனப் பங்கு 16,000%  வருமானம் கொடுத்திருக்கிறதே?’’

‘‘அகமதாபாத் நகரைச் சேர்ந்த காகித நிறுவனமான குஷால் டிரேடுலிங் பங்கு விலை, கடந்த 2013 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை, அதாவது நான்கரை ஆண்டுகளில் சுமார் 16,000% அதிகரித்துள்ளது. கடந்த 2014 பிப்ரவரி 10-ல் ரூ.7.01 ஆக இருந்த இந்தப் பங்கின் விலை, 2017 ஜனவரி 24-ல் ரூ.610-க்கு அதிகரித்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை ரூ.475-க்குக் குறைந்துள்ளது. ஆனாலும் இந்தப் பங்கிலிருந்து பெரும்பாலான முதலீட்டாளர்கள் முழுமையாக வெளியேறிய மாதிரித் தெரியவில்லை. பல லட்சக்கணக்கான புதியவர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பங்கில் முதலீடு செய்வது ரிஸ்க் மிகுந்தது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.’’ 

வரும் டிசம்பருக்குள் சென்செக்ஸ் 39000 புள்ளிகளுக்கு உயரும் என மார்கன்லி ஸ்டான்லி கருத்துத் தெரிவித்துள்ளதே?

‘‘ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், பாசிட்டிவான விஷயங்களால் வட்டி விகிதம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், பங்கு, தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி நிறுவனம், சந்தை, காளையின் பிடியில் இருந்தால், இந்த ஆண்டு டிசம்பருக்குள் சென்செக்ஸ் 39000 என்ற நிலையைத் தொடும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கரடியின் பிடியில் சிக்கினால், டிசம்பரில் சென்செக்ஸ் 24000 என்கிற நிலையில்தான் இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது’’ என்றவர், குளிர்காற்று தாக்கக்கூடாது என்பதற்காக தலையில் குல்லாவைப் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!