Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்ஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. அதேபோல் ஆர்பிஐ-யின் வட்டி விகித முடிவுகளிலும் எதிர்பார்க்கப்பட்டது. வட்டி விகிதம் குறைக்கப்படாத போதும், சந்தை அதிகரித்தது. சந்தை, தான் கண்ட ஏற்றத்தில் 786 என்கிற முக்கியமான ரிட்ரேஸ்மென்ட் புள்ளியைக் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை கடந்த வார பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தோம். வங்கிப் பங்குகள் தற்போதைக்கு நன்றாகவே ஏற்றம் கண்டிருக்கின்றன. எனவே, பேங்க் நிஃப்டி 20500 புள்ளிகள் வரைகூட அதிகரிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


வட்டி விகிதத்தைக் குறைக்காத போதும் சந்தை, தன் ஏற்றத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யமானதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு விஷயங்கள் நடக்க சாத்தியம் இருக்கின்றன.  ஒன்று அதிகரித்திருக்கும் சந்தை ஏற்றம் உண்மையாக இல்லாமல் போவது. இரண்டாவது, ஆர்பிஐ வட்டி விகித முடிவு மாற்றத்தை, சந்தை எதிர்பார்க்கத் தொடங்கியதே மிக குறுகிய காலத்துக்குத்தான். இந்த இரண்டு விஷயங்களில் இருந்தும் சந்தை, தான் கண்ட ஏற்றத்தில் இருந்து இறங்க விருப்பமில்லாமல் இருப்பதைக் காண முடிகிறது. எனவே சந்தை மேலும் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்றம் உறுதியான இந்தச் சமயத்தில், இனி சந்தையின் உச்சமான 9000 புள்ளிகளைக் கடந்து செல்லுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விக்கு விடை கிடைக்க நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதோடு உத்தரப்பிரதேச தேர்தல் போன்ற விஷயங்கள் சந்தையின் போக்கை நேரடியாகப் பாதித்து, சில ஏற்ற இறக்கங்கள் நிகழலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிசம்பர் காலாண்டு முடிவுகள் இந்த மாதத்தில் வந்துவிடும். இதுவரை வெளியான காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்த்தால், ஒரு கலவையான காலாண்டு என்று சொல்லலாம். இந்த காலாண்டு முடிவுகள் நாம் பயந்த அளவுக்கு மோசமாக வரவில்லை என்பது ஓர் ஆறுதலான விஷயம்.

எனவே இதுபோன்று முடிவுகள் வெளியாகும்போது சந்தை ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளில் சற்று நிலையாக வர்த்தகமாகும். வரும் வாரத்தில் நிஃப்டி 8650 முதல் 8850 வரையான ரேஞ்சுகளில் வர்த்தகமாகலாம். தற்போதையச் சூழலில் சந்தை காளைகளா லேயே கொண்டு செல்லப்படுவதால் நிஃப்டி, தன் சப்போட் நிலைகளைத் தொடும் போதெல்லாம் வாங்கலாம்.

கடந்த வார வர்த்தகம் நிறைவடையும் போது, இண்டெக்ஸ்களில் இல்லாத பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டு வருகின்றன. எனவே மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிவி 18 (TV18BRDCST )

தற்போதைய விலை : ரூ.41.45

வாங்கலாம்

கடந்த சில வர்த்தக நாட்களில் இந்தப் பங்கின் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த ஏற்றத்திலேயே, ஒரு நல்ல பிரேக் அவுட்டும் ஆகி இருக்கிறது. இந்த பிரேக் அவுட், பங்கு கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட விலை ரேஞ்சுகளுக்குள் கன்சாலிடேட் ஆகி வந்ததை உடைத்திருக்கிறது. இந்த பிரேக் அவுட் ஆன உடனேயே மூன்று டோஜி கேண்டில்களைப் பார்க்க முடிகிறது.

அதற்கு பின் கடந்த வாரத்தின் கடைசி இரண்டு வர்த்தக நாள்களில் ஒரு நல்ல புல் கேண்டிலைப் பார்க்க முடிகிறது. இந்த ஏற்றத்தோடு இந்தப் பங்கின் வால்யூம்களும் அதிகரித்து வருகின்றன. எனவே இந்தப் பங்கின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைக்கு இந்தப் பங்கு தன்னுடைய 38.2% ரிட்ரேஸ்மென்ட் புள்ளியில் இருக்கிறது. அடுத்து 50% ரிட்ரேஸ்மென்ட் புள்ளியான 42 ரூபாய் அல்லது 62 % ரிட்ரேஸ்மென்ட் புள்ளியான 44 ரூபாய்க்கு  பங்கின் விலை அதிகரிக்கலாம். 38.60 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜஸ்ட் டைல் (JUST DIAL)

தற்போதைய விலை : ரூ.429.65

வாங்கலாம்

இந்தப் பங்கை வாங்கி வைத்திருந்தவர்கள், தங்கள் பங்குகளை விற்றுவிட்டதால் விலை ஏற்ற இறக்கம் கண்டது. இந்தப் பங்கின் தினசரி சார்ட்டில்  ஓர்  அருமையான ரவுண்டிங் பாட்டத்தை பார்க்க முடிகிறது. அதோடு இந்தப் பங்கின் விலை புல் பேக் ஆன காரணத்தால், நீண்ட புல் கேண்டிலின் குறைந்த விலைப் பகுதிக்கு இந்தப் பங்கின் விலை இறங்கி இருக்கிறது.

அதோடு இந்த ரவுண்டிங் பேட்டனும் பிரேக் அவுட் ஆக இருக்கிறது. எனவே இந்த பிரேக் அவுட்டின் போது இலக்கு விலையாக 460 ரூபாயை வைத்துக் கொள்ளலாம். இந்தப் பங்கு, தொடர்ந்து தற்போதைய விலையில் இருந்து இலக்கு விலைக்கு செல்லும் என்று சொல்ல முடியவில்லை. எனவே இலக்கு விலையை நோக்கி ஏற்றம் காணும்போது சில இறக்கங்களும் வரலாம்.  இலக்கு விலையை 471 ரூபாய் வைத்துக்கொள்ளலாம். 410 ரூபாயை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இன்ஜினீயர்ஸ் இந்தியா (ENGINERSIN)

தற்போதைய விலை : ரூ.156.60

வாங்கலாம்

கடந்த ஜனவரி மாதம் முழுவதும் இந்த நிறுவனப் பங்கு விலை கரெக்‌ஷனிலேயே இருந்தது. குறிப்பாக ஏற்ற இறக்கத்தின் ரேஞ்சுகள் குறைவாகவே இருந்தன. இந்தப் பங்கில் வர்த்தகம் மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கோ இந்தப் பங்கை கைவிட மனமில்லை. கடந்த வார வியாழக்கிழமையன்று இந்தப் பங்கின் விலை, ஒரு நல்ல ரேஞ்சை தக்கவைத்துக் கொண்டது. இந்தப் பங்கின் விலை அதிக ரேஞ்சுகளைத் தொட்டபோது, அதன் கன்சாலிடேஷன் காலம் முடிந்து விட்டது. 

அதிக ரேஞ்சுகளுக்கு விலை அதிகரித்து வர்த்தகமானதால், வால்யூம்களும் அதிகரித்திருக்கின்றன. அதோடு பங்கின் விலை ஏற்றம் அடையும் மொமென்டம் அதிகரித்திருக்கிறது. இனி வரும் வாரங்களில் இந்த விலை மாற்றத்தை பின் தொடர்ந்தால் போதுமானது. இந்தப் பங்குக்கு உடனடி ரெசிஸ்டன்ஸ் என்றால் 164 ரூபாயைச் சொல்லலாம். இந்த ரெசிஸ்டன்ஸ் உடைக்கப்பட்டு, இந்தப் பங்கின் விலை 180 - 182 ரூபாய் வரை அதிகரித்து ஒரு புதிய உச்சத்தைத் தொடலாம்.

தொகுப்பு: மு.சா.கௌதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு