Published:Updated:

ஷேர்லக்: விலை உயரும் வீட்டு வசதி நிறுவனப் பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: விலை உயரும்  வீட்டு வசதி  நிறுவனப் பங்குகள்!
ஷேர்லக்: விலை உயரும் வீட்டு வசதி நிறுவனப் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: விலை உயரும்  வீட்டு வசதி  நிறுவனப் பங்குகள்!

“பன்னீர்செல்வம் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிட்டாரா?’’ என்று கேட்டபடி நம் எதிரில் உட்கார்ந்தார் ஷேர்லக். பன்னீர் பேசிய வீடியோவை அவருக்கு போட்டுக் காட்டினோம். ‘‘ஓகே, ஓகே’’ என்றபடி நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு, கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருக்கிறதே?”

“ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ரூ.303 திட்டம், அதன் 10 கோடி பயனாளர்களுக்கு மட்டுமல்ல, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் நல்ல உற்சாகத்தைக் கொடுத்தது. இதனால் ரிலையன்ஸ் பங்குகள் எட்டு வருட உச்சத்தை, கடந்த புதன் அன்று எட்டின. 2009-க்குப்பின் ரிலையன்ஸ் பங்கு ,அன்று மட்டும் 11% உயர்ந்து,      ரூ.1,207-க்கு வர்த்தகமானது. ரிலையன்ஸ் ஜியோ, சந்தையில் மிக வலுவாக கால் ஊன்றியதே இதற்குக் காரணம். ரிலையன்ஸின் பல முதலீடுகள் இப்போதுதான் வருமானம் ஈட்டக்கூடியதாக மாறி இருக்கின்றன. அதேசமயம், ஜியோவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே அதன் வளர்ச்சி இருக்கும்.”   

“பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு விற்பனைக்கு வரவேற்பு எப்படி?”

‘‘அரசின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ்  நிறுவனப் பங்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.1,650 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டது. முதல் நாளான புதன்கிழமை அன்றே நல்ல வரவேற்பு இருந்தது. சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கு விற்பனை அளவைவிட, 2.34 மடங்கு கூடுதலாக விண்ணப் பிக்கப்பட்டது. ஒரு பங்கு ரூ.1,498-க்கு விற்கப்பட்டது. இது செவ்வாய் அன்று வர்த்தக நிறைவில் இருந்த ரூ.1,559.95 விலையைவிட 4.13% தள்ளுபடி விலை ஆகும். வியாழன் அன்று சில்லறை முதலீட்டாளர் களுக்கான விற்பனை நடந்தது. அதிலும் 3.67 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.

“ஹட்கோ ஐபிஓ பற்றி லேட்டஸ்ட் தகவல் ஏதும் இருக்கிறதா?”

‘‘ஹவுஸிங் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (ஹட்கோ) நிறுவனத்தின் 10 சதவிகிதப் பங்குகளை அரசு, விற்பனை செய்யத் திட்டமிட்டதைத் தொடர்ந்து பொதுப் பங்கு விற்பனைக்குத் தயாராக இருக்கிறது. மார்ச் மாதத்தின் இடையில் ஐபிஓ வெளியிடப்படலாம். இதன் மூலம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியிடப் படும் பொதுத்துறை நிறுவன ஐபிஓ-வாக இது இருக்கும். இந்த விற்பனை மூலம் ரூ.1,000 கோடி நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.’’

“பொதுத் துறை பொதுக் காப்பீடு நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளனவே?”

‘‘மத்திய அரசுக்குச் சொந்தமான ஓரியன்டல் இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்களையும் இணைக்க அரசு திட்டமிட்டு, தீவிர நடவடிக்கை  எடுத்து வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு 34%. இந்த இணைப்பின் மூலம் வலுவான, அரசு பொதுக் காப்பீடு நிறுவனத்தை உருவாக்க முடியும். மேலும், பட்டியலிடப்படும் போது நல்ல சந்தை மதிப்பைப் பெறமுடியும். தற்போது இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக தகவல்.’’

“ரிசர்ச் அனலிஸ்ட் ஒருவருக்கு செபி தடை விதித்திருக்கிறதே!’’

‘‘நிதி நிலையில் மிகவும் மோசமாக உள்ள சுப்ரீம் டெக்ஸ் மார்ட் நிறுவனப் பங்கை பரிந்துரை செய்த கௌதம் சஞ்சய் கந்தன்வால் என்கிற ரிச்சர்ச் அனலிஸ்ட்க்கு செபி தடை விதித்துள்ளது. இவர் பரிந்துரை செய்துள்ள சுப்ரீம் டெக்ஸ் மார்ட் நிறுவனம், தொடர்ந்து ஐந்து காலாண்டுகளுக்கும் மேலாக கோடிக் கணக்கில் நிகர இழப்பைச் சந்தித்து வருகிறது. மேலும், நிறுவனப் பங்கின் விலை அதன் முகமதிப்புக்கும் கீழே வர்த்தகமாகி வருகிறது. இவர் பங்குகளை பரிந்துரை செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ள அதே நேரத்தில், பங்குகளை வாங்கவும் விற்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், இவர் மீது செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாகவும் புகார் செய்யப்பட்டிருக்கிறது.’’  

“வியாழக்கிழமையன்று, முன்னணி வீட்டு வசதி நிறுவனப் பங்குகளின் விலை 5 சதவிகித அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கிறதே..!”


“தற்போது வீட்டு வசதிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களில், மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு 10% வரைதான் அனுமதிக்கப்படுகிறது. இதனை 15 சதவிகிதமாக செபி உயர்த்தியுள்ளது. திவான் ஹவுஸிங், க்ருக் ஃபைனான்ஸ், ஜிஐசி ஹவுஸிங், ரெப்கோ ஃபைனான்ஸ், எல்ஐசி ஹவுஸிங்,கேன் ஃபின் ஹோம்ஸ், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங், பிஎன்பி ஹவுஸிங் போன்ற நிறுவனப் பங்குகள் விலை உயர ஆரம்பித்திருக்கின்றன.”

“சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?”

‘‘நிஃப்டி 50 குறியீடு, வியாழக்கிழமையன்று 52 வார உச்சத்தைத் தொட்டு, 8,973-க்கு உயர்ந்தது.  அன்றைய தினம் சென்செக்ஸ் 29000 புள்ளிகளைத் தாண்டி இருக்கிறது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம், ஐ.டி, டெலிகாம் நிறுவனப் பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டதே ஆகும். அன்று மட்டும் டிசிஎஸ் 2.9%, விப்ரோ 2.4%, இன்ஃபோசிஸ் 1.9% அதிகரித்துள்ளது. ஏர்டெல் பங்கின் விலை 11% உயர்ந்துள்ளது.”

“சந்தை தொடர்ந்து ஏற்றம் காணுமா?”

“கொஞ்சம் கஷ்டம்தான். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், இந்தியச் சந்தை இறக்கம்காண வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒரே நேரத்தில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்யாமல், சந்தை இறங்க இறங்க முதலீடு செய்வது நல்லது.”

“கவனிக்கவேண்டிய பங்குகள் ஏதாவது?”

‘‘ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், யுனைடெட் பாஸ்பரஸ், பெட்ரோ நெட் எல் அண்ட் ஜி, எல் & டி இன்ஃபோடெக், வோல்டாஸ். இந்தப் பங்குகளை ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு கவனிக்கலாம்.”

ஷேர்லக்: விலை உயரும்  வீட்டு வசதி  நிறுவனப் பங்குகள்!

தங்கப் பத்திரங்கள் விற்பனை தொடக்கம்!

இந்தியாவில் தங்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும் நாட்டின் தங்க இறக்குமதியைக் குறைக்கவும் கொண்டுவரப்பட்ட தங்கப் பத்திரங்கள் (SOVEREIGN GOLD BONDS) விற்பனை, பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் 3 வரை நடக்கிறது. தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கான திட்டமான இதில் ஒரு கிராம் மதிப்புள்ள பாண்டுகளைக்கூட வாங்கலாம். ஒரு நிதி ஆண்டில், ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு, ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு