Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரம், இந்தியப் பங்குச் சந்தை காளையின் போக்கில் ஏற்றம் அடையும் என்று கூறியிருந்தோம். அதேபோல், சந்தையும் நன்றாக ஏற்றம் அடைந்தது. நிஃப்டி நன்றாக உயர்ந்து 8850 புள்ளிகளுக்கு மேல் பிரேக் அவுட் ஆனது. தற்போது 9000 என்ற நிலைக்கு அருகில் இருக்கிறது.

சந்தை தனது புதிய உச்சத்தை எப்போது  எட்டும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும்,  சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இனியும் உயருமா என்கிற நம்பிக்கையின்மையும் இன்னொரு பக்கம் இருக்கிறது. ஏனெனில், மொத்த ஏற்றமும் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் நடந்திருப்பதையே பார்க்க முடிகிறது. மேலும், அவற்றின் குறியீடுகளும் புதிய உச்சத்தை ஏற்கெனவே அடைந்துவிட்டன. 2016 செப்டம்பர் 16 அன்று அடைந்த உச்சத்துக்குக் கீழே நிஃப்டி இருந்தாலும், பேங்க் நிஃப்டி ஏற்கெனவே செப்டம்பர் 16-ல் அடைந்த உச்சத்தைத் தாண்டிவிட்டது.

கடந்த வாரத்தில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் அடைந்த ஏற்ற மானது, ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகளால் நிகழ்ந்துள்ளது. குறியீடுகளை உச்சத்துக்குக் கொண்டுபோக இந்த இரண்டு பெரிய பங்குகளின் நகர்வுகளே போதுமானதாக இருந்தது. இவற்றைத் தொடர்ந்து, குறியீடுகளை மேலும் ஏற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்ல வேறு எந்தப் பங்குகளும் இல்லை. எனவே, குறியீடுகள் தொடர்ந்து காளையின் போக்கில் இருக்க, சில புதிய பங்குகளின் நகர்வு சாதகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில்,  வரும் வாரத்தில் சந்தை, சற்று தடுமாற வாய்ப்பு உள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வங்கிகள் நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தால், வங்கிப் பங்குகளும் புதிய உச்சங்களை அடைய வாய்ப்பு இருக்கிறது. ஐ.டி பங்குகளும் நல்ல ஏற்றம் கண்டன. ஆனால், 52 வார உச்ச நிலையில், மீண்டும் இறக்கத்தைச் சந்திக்கலாம் என்று தெரிகிறது. இதையும் மீறி புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்தால், வரும் வாரத்தில் நிஃப்டி, எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய உச்சத்தை அடைவதை நாம் பார்க்கலாம். குறைவான லாங் பொசிஷன்களை வைத்திருந்தால், அப்படியே தொடரலாம். புதிதாக வாங்குபவர்கள் இறக்கம் அடையும்போது மட்டும் வாங்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எண்ட்யூரன்ஸ் டெக்னாலஜிஸ் (ENDURANCE)

தற்போதைய விலை: ரூ.690.85

வாங்கலாம்


இந்த நிறுவனப் பங்கு, சமீபத்தில் பட்டியலிடப்பட்டது. ஆட்டோ உதிரிப் பாகங்கள் பிரிவில் பெரிய மற்றும் டைவர்சிஃபைடு நிறுவனம் இது. இதன் இரு சக்கர வாகனப் பிரிவின் மிகப் பெரிய வாடிக்கை நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ உள்ளது. 

இந்த நிறுவனத்தின் ஐபிஓ-வில் கிடைத்த ஆதரவு, பட்டியலிடப்பட்டபிறகும் தொடர்கிறது. தொடர்ந்து இந்தப் பங்கின் வர்த்தகம் வலுவான நிலைக்குச் சென்றது. தற்போது இந்தப் பங்கின் வர்த்தகம் மேலும் வலுவடைந்திருப்பது தெரிகிறது. மேலும், முந்தைய ஆரம்ப நிலையான ரூ.650 என்ற நிலையை உடைத்து ஏற்றமடையத் தயாராக இருக்கிறது. அதன் அடுத்த உச்சமான ரூ.730-ஐ நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.665 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS)

தற்போதைய விலை : ரூ.521.20

வாங்கலாம்

பார்மா பங்குகள் தற்போது இறக்கத்திலிருந்து மீண்டு உயரத் தொடங்கி இருக்கின்றன. ஆனாலும், லார்ஜ் பேக் பங்குகளைக் காட்டிலும் மிட்கேப் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. ஏற்கெனவே முந்தைய பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அல்கெம் உள்ளிட்ட பங்குகள் நன்றாக ஏற்றமடைந்து வருகின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் பட்டியலிடப் பட்ட பார்மா பங்கான லாரஸ் லேப்ஸ் பங்கின் விலை, இந்த மாதத்தின் தொடக்கத்தில் திடீர் ஏற்றமடைந்தது. பின்னர் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதால் இறக்கத்தைச் சந்தித்தது. முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதால், புதிய உச்சமான ரூ.575-க்கு உயர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ரிஷி டெக்டெக்ஸ் (RISHIPACK)

தற்போதைய விலை: ரூ.57.95

வாங்கலாம்

முன்பு ரிஷி பேக்கர்ஸ் (Rishi Packers) என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், பலவிதமான வலைகள், சாக்கு பைகள் மற்றும் துணிகள் ஆகியவற்றை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. மேலும், இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே அதிக உற்பத்தித் திறன்கொண்ட நிறுவனமாகவும் உள்ளது.

சிமென்ட் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் இதன் முக்கிய வாடிக்கை நிறுவனங்களாக உள்ளன. இதன் பின்னல் துணிகள் விவசாயம், நர்சரி மற்றும் தோட்டக் கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னை பார்க்கையில் கடந்த பல வாரங்களாகவே நிலையான ஏற்றத்தைக் கொண்டு இருந்திருப்பது தெரிகிறது. இந்தப் பங்கின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள ஆர்வம், மேலும் ஏற்றமடைவதற்கும் வழிவகுக்கும். அடுத்த மூன்று மாதங்களில் ரூ.80 வரை பங்கு விலை உயரும் என்று எதிர்பார்க்கலாம். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு