Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரம் முழுவதும் இந்தியப் பங்குச் சந்தை, ஒரு குறிப்பிட்ட சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வரம்புக்குள் வர்த்தகமானாலும், காளையின் போக்கிலேயே தொடர்ந்தது. இதனால் வியாழனன்று நிஃப்டி ஃப்யூச்சர் 9000 புள்ளிகளைத் தாண்டியது. நிஃப்டி, இந்த உச்சத்தை அடைந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. காரணம், இந்த உச்சத்தில் லாபம் பார்ப்பதற்காக பலரும் அவசர அவசரமாகப் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறவே, நிஃப்டி மீண்டும் இறங்க ஆரம்பித்தது. ஆனாலும், நிஃப்டி 8900க்கும் கீழ் இறங்காமல் பார்த்துக்கொண்டது.

மொத்தத்தில் கடந்த வாரம், சந்தையின் போக்கில் அதிக மாற்றங்கள் இல்லாமலேயே இருந்தது. கேண்டில் சார்ட்டும் சிறிய ஸ்பின்னிங் டாப் பேட்டர்ன்களாகவே இருப்பதால் சற்று தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்தை குறியீடு ஏற்கெனவே இதுபோன்ற நிலையற்ற கேண்டில்களை உருவாக்கி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வாரம் மேல்நோக்கிய நகர்வின் மூலம் அந்த குழப்பத்தைத் தகர்த்தது. ஆனால், கடந்த வார இறுதியில் ஏற்பட்டுள்ள பேட்டர்ன், வரும் வாரத்தின் மீது மீண்டும் பதற்றமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி மேல்நோக்கி உயர மிகவும் முயற்சித்த நிலையில், பேங்க் நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தை எட்டியிருப்பது பாசிட்டிவான விஷயம். இங்கும் பிராஃபிட் புக்கிங் நடந்ததைப் பார்க்க முடிந்தது.

ஆனாலும், வர்த்தகப் போக்கில் மாற்றம் ஏற்படாமல் உறுதியாகத் தொடர்ந்தது. எனவே, சந்தையின் போக்கு மீண்டு வரும் என்றும், கரெக்டிவ் மூவ் முடிவுக்கு வந்து, மேலும் உயர்ந்து வர்த்தகமாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

எனவே, நிஃப்டி ஃப்யூச்சர்ஸில் லாங் பொஷின்களிலேயே, 8840 ஸ்டாப்லாஸுடன் தொடரலாம். புதிதாக லாங் எடுப்பவர்களும் இந்த நிலையிலேயே எடுக்கலாம். வழக்கமாகவே மார்ச் மாதம், சந்தை புதிய உச்சங்களை அடையும். எனவே, இந்த  மார்ச்  மாத இறுதிவரை ஏற்றம் தொடர்ந்து, 9330 வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அஸ்ஸாம் கம்பெனி (ASSAMCO)

தற்போதைய விலை: ரூ.7.80


வாங்கலாம்

மோசமான பொருளாதாரச் சூழ்நிலைகளில் இந்த நிறுவனம் இருந்ததால், இந்தப் பங்கு கடந்த பல வருடங்களாகவே இறக்கத்திலேயே வர்த்தகமாகி வந்தது. இந்த நிறுவனம் தேயிலை உற்பத்தி மற்றும் எண்ணெய் துரப்பனப் பணிகளைச் செய்துவருகிறது.

தற்போது இந்த நிறுவனப் பங்கின் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. வால்யூம்களிலும் விலையிலும் ஏற்றத்தைப் பார்க்க முடிகிறது. சமீபத்திய நகர்வுகள் ஏற்றத்தின் போக்கில் நிலையாக இருப்பதோடு, இறக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன.

இந்தப் போக்கு, பங்கில் நல்ல ஏற்றத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த 3-6 மாதங்களில் ரூ.15 வரை உயர வாய்ப்புள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லிங்கன் பார்மா (LINCOLN)
 
தற்போதைய விலை: ரூ.239.15

வாங்கலாம்

இது மகளிர் மற்றும் எலும்பியல் தொடர்பான அனைத்துவிதமான சிகிச்சைகளுக்கும் தேவையான மருந்துகளைத் தயார் செய்யும் மிட் கேப் பார்மா நிறுவனமாகும்.

கடந்த வாரம் இந்தப் பங்கின் விலை நன்றாக ஏற்றம் கண்டதோடு, கேண்டில் சார்ட்டுகளும் அதிக வரம்புகளில் உருவாகியிருப்பதால், இந்தப் பங்கு மேலும் ஏற்றம் அடைவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த ஏற்றம், தொடர்ச்சியான பக்கவாட்டு போக்குகளுக்குப் பிறகு வேண்டுமானால் முடிவுக்கு வரலாம். தற்போது இந்தப் பங்கு ஏற்றம் அடைந்து, ரூ.300 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.220 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (GSFC)

தற்போதைய விலை: ரூ.120.25

வாங்கலாம்

மிட்கேப் நிறுவனமான இது, உரம் மற்றும் தொழில்துறை பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த பல மாதங்களாகவே இந்த நிறுவனப்  பங்கின் விலை ஏற்றம் நிலையாக உயர்ந்து வந்திருப்பதால், வார சார்ட்டில் நல்ல ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகி உள்ளது. எனவே, இந்தப் பங்கில் சில நீண்ட கால ஏற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் தற்போதைய நிலையில் இந்தப் பங்கின் பேட்டர்னில், பிரேக் அவுட் நிலை உருவாவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

இந்தப் பங்கில் வர்த்தகமாகும் வால்யூம்கள், மேலும் இந்த பிரேக் அவுட் நிலையை வலுவடையச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.145 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.105 ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.