‘‘முக்கியமான ஒரு வி.ஐ.பி.யைச் சந்திக்க பெங்களூருக்கு வந்துவிட்டேன். எனவே, இந்த வார மேட்டரை போனிலேயே சொல்லிவிடுகிறேன். எனக்கு மாலை ஆறு மணிக்கு போன் செய்யவும்’’ என்று நமக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி இருந்தார் ஷேர்லக். அவர் சொன்னபடியே ஆறு மணிக்கு அவருக்கு போன் செய்தோம்.

‘‘பெங்களூரில் நான் குளுகுளுவென்று இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். வெயில் அதிகம் இல்லையென்றாலும் அதிகமாக வேர்க்கிறது’’ என்றபடி நம்முடன் பேச ஆரம்பித்தார். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘2018 டிசம்பருக்குள் நிஃப்டி 10200 புள்ளிகளைத் தொடும் என்று சொல்லியிருக்கிறதே கோல்ட்மேன்?’’

‘‘2016-ம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் எடுக்கப்பட்ட பல முடிவுகளால் இந்தியப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை உருவாகியது. அதைப்போலவே, கடந்த டிசம்பர் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாப வளர்ச்சி குறைவாகவே இருந்தது. ஆனால், சர்வதேச அளவிலான நிதி நிறுவனங்கள், ரேட்டிங் நிறுவனங்கள் 2017 தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என பாசிட்டிவான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ,நடப்பு 2017 இறுதிக்குள் நிஃப்டி 9000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகும் என்று சொல்லியிருக்கிறது. 2018 டிசம்பருக்குள் 10200 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடையும் என்றும் கணித்துள்ளது.

இதற்குக் காரணம், 2017 தொடக்கத்தில் இருந்தே நிறுவனப் பங்குகளின் விலை நன்றாகவே உயரும் என்று அனலிஸ்ட்டுகளால் கணிக்கப்பட்டது. அதைப் போலவே, டெக்னாலஜி, மெட்டீரியல்ஸ் மற்றும் தொழில்துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. மேலும் மெட்டல், எனர்ஜி, கமாடிட்டி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதிச் சேவை நிறுவனங்களின் வருமான வளர்ச்சியிலும் முன்னேற்றம் தெரிகிறது.

தொழில்துறைகளில் வோல்டாஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் நகர்ப்புற நுகர்வு சார் நிறுவனங்களான டைட்டன், மாருதி போன்றவற்றின் பங்கு வருமான வளர்ச்சியும் வருடாந்திர அடிப்படையில் உயர்ந்திருக்கிறது. இந்தப் பங்குகளின் வருமான வளர்ச்சியையொட்டி பங்குகளை வாங்குவதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இதனடிப்படையில் பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், மாருதி சுஸூகி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகளின் மீதான வர்த்தகமும் வால்யூமும் அதிகரித்திருக்கின்றன. இதனால் அவற்றின் மார்க்கெட் கேபிட்டலைசேஷனும் உயர்ந்திருக்கிறது.

நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் செயல்பாடுகளின் விளைவாக சென்செக்ஸ் 10% வளர்ச்சியடைந்து, 33000 புள்ளிகளை அடையும் என மார்கன் ஸ்டான்லி முன்பே கூறியிருந்தது. இதனால் பங்குகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இந்தப் பங்குகளின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் புதிய உச்சங்களைத் தொட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, கோல்ட்மேன் உள்பட பல சர்வதேச அமைப்புகளின் கணிப்பின்படி, இந்திய பங்குச் சந்தை புதிய உச்சங்களை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கவே செய்கின்றன.’’

‘‘எம்டிஎன்எல் நிறுவனப் பங்கு விலை ஒரே நாளில் 16 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதே?’’

‘‘பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் எம்டிஎன்எல் இணைக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகளின் விளைவுதான் இந்த உயர்வு. இதுகுறித்த செய்தி வெளியான அன்றே இந்தப் பங்கின் மீது முதலீட்டாளர்களின் கவனம் குவிய ஆரம்பித்துவிட்டது. இதனால் வர்த்தகம் தொடங்கியதுமே 8.42% உயர்ந்து, எம்டிஎன்எல் பங்கு ஒன்று ரூ.24.45-க்கு வர்த்தகமானது. அன்றைய வர்த்தக முடிவில் பிஎஸ்இ-ல் 16.04 சதவிகிதமும், என்எஸ்இ-ல் 15.74 சதவிகிதமும் இந்தப் பங்கு விலை உயர்ந்து வர்த்தகமானது. அரசு டெலிகாம் நிறுவனங்களான இந்த இரண்டும் இணைக்கப்படுவது இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை சார்ந்த வளர்ச்சியில் நிச்சயம் பாசிட்டிவான போக்கை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.’’

‘‘இந்தியப் பங்குச் சந்தை தனது வாழ்நாள் உச்சத்தை அடைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்தான் காரணமா?’’

‘‘2017 தொடங்கி இரண்டு மாதங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில்,வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.13,800 கோடியைப் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். சந்தை தனது வாழ்நாள் உச்சங்களை நோக்கி நகர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். பிப்ரவரியில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 160 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளிலும், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 138 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளிலும் முதலீடு செய்துள்ளனர்.

சமீப காலமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கையும், முதலீட்டு மதிப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, இந்தியப் பங்குச் சந்தை உயர்வதற்கு வெளி நாட்டினர் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது’’.

‘‘ஹீரோ மோட்டோகார்ப் இடைக்கால டிவிடெண்ட் ரூ.55 அறிவித்திருக்கிறதே?’’

‘‘நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவன மான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த செவ்வாய் அன்று 2016-17-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்டை அறிவித்தது. ரூ.2 முகமதிப்பு கொண்ட அதன் ஒரு பங்குக்கு ரூ.55 டிவிடெண்ட் வழங்குவதாகச் சொல்லியிருக்கிறது. மார்ச் 18-ஐ இந்த டிவிடெண்ட் வழங்குவதற்கான பதிவுத் தேதியாக (Record date) அறிவித்துள்ளது.’’

‘‘இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை வரலாற்று உச்சத்தை அடைந்திருக்கிறதே?’’

‘‘மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு இந்தியா முழுவதும் பரவலாக அதிகரித்ததைத் தொடர்ந்து, ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதன் வரலாற்று உச்சத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.17.89 லட்சம் கோடியாக உள்ளது. பிப்ரவரியில் மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.30,273 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஈக்விட்டி, இன்கம், இடிஎஃப் உள்ளிட்ட அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளின் பிரிவுகளிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 2014-ல் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகித்த தொகை ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இந்த வருடம் இது ரூ.20 லட்சம் கோடியைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

‘‘போர்ட்ஃபோலியோ மேனேஜர்கள் நிர்வாகம் செய்யும் சொத்து குறைய என்ன காரணம்?”

‘‘2017 ஜனவரி மாத இறுதியில், இவர்கள் நிர்வாகம் செய்யும் சொத்து மதிப்பு ரூ.11.97 லட்சம் கோடியாக இருந்தது, பிப்ரவரியில் ரூ.8,212 கோடி குறைந்து, தற்போது ரூ.11.89 லட்சம் கோடியாக உள்ளது. ஆனாலும் இவர்களின் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது.’’

‘‘விமான நிறுவனப் பங்குகள் உயரக் காரணம் என்ன?’’

‘‘ஏவியேஷன் டர்பைன் எரிபொருளுக்கான வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவே விமான நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின. புதன்கிழமை அன்று விமான நிறுவனப் பங்குகள் 3% வரை உயர்ந்தன. அதிகம் பயணிக்காத இடங்கள், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்குப் போகும் விமானங்களுக்கான ஏவியேஷன் டர்பைன் எரிபொருளுக்கான மதிப்புக் கூட்டு வரியை 25 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் அந்தப் பகுதிகளுக்கான விமான சேவைக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனப் பங்கு ஒரே நாளில் 3% விலை உயர்ந்தது. ஸ்பைஸ் ஜெட் 2.86%, இன்டர்குளோப் 2.26% விலை உயர்ந்து வர்த்தகமாயின.

சரி, நான் வெளியே கிளம்புகிறேன். அடுத்த வாரம் நேரில் வந்து சந்திக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, போனை கட் செய்தார் ஷேர்லக்.