Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்திலும் இந்தியப் பங்குச் சந்தை, நிலையில்லாத நகர்வுகளைக் கொண்டதாகவே இருந்தது. எனவே, குறியீடுகள் ஏற்கெனவே அடைந்த உச்சத்திலேயே தொடர்ந்தாலும், அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள சற்று திணறவே செய்தன. முக்கியமாக, பெரிய அளவில் பங்குகள் விற்கப்படாதது சற்று ஆச்சர்யமான விஷயம்தான்.

அதேநேரம் பங்குகளை வாங்குபவர்களும், சந்தை உச்சத்தை நோக்கி நகர்வதற்கு விரும்பவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை அன்று, பாஜகவுக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும் என்கிற தேர்தல் முடிவுக்கு முந்தைய கணிப்பால் (Exit poll), சந்தை வர்த்தகமாகத் தொடங்கியவுடன் ஏற்றமடைந்து,   நிஃப்டி 9000 புள்ளிகளை அடைந்தாலும், வர்த்தகத்தின் முடிவில் மீண்டும் இறக்கம் அடைந்தே முடிந்தது.

சனிக்கிழமை (மார்ச் 11) அன்று தேர்தல் முடிவு உண்மை நிலவரம் தெரியும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் வர்த்தக முடிவுகளை, என்ன நடக்கும் என்று தெரியாமல் முன்கூட்டியே எடுப்பதற்குப் பதிலாக இந்த வாரம் முழுவதும் பொறுமை யாகக் காத்திருந்தது தெளிவாகவே தெரிந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் காரணமாக, நிலையற்ற கேண்டில் பேட்டர்ன்களே இந்த வாரத்தில் உருவாகி உள்ளன. ஆனால், சந்தையின் தற்போதைய போக்கில் எந்தத் தொய்வும் இல்லை. எனவே, எதிர்பார்க்கப்பட்டது போலவே தேர்தல் முடிவுகள் இருந்தால், சந்தை உச்சத்தை நோக்கி நகரும் என்று நம்பலாம்.

அதேசமயம், இந்தக் காளை போக்கிலான சென்டிமென்ட், ஏதேனும் ஏமாற்றங்களைச் சந்திக்கும்பட்சத்தில் சந்தை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதையும் உணர்த்துகிறது. ஆனால், அப்படி நடக்கவேண்டுமெனில் எதிர்பார்ப்புகளைவிட பெரிய மாற்றங்களைத் தேர்தல் முடிவுகள் கொண்டிருக்க வேண்டும். அப்படி நிகழ வாய்ப்பில்லை.

கடந்த வாரத்தில் லாங் பொஷின்களில் இருப்பவர்கள் ஸ்டாப் லாஸ் 8840-உடன் அப்படியே தொடரலாம் என்று கூறி யிருந்தோம். இந்த வாரமும் அதே நிலைதான் தொடர்கிறது. ஆனாலும், தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு சந்தை பாசிட்டிவான போக்கில் தொடருமானால், கடந்த வாரம்  நாம் கூறியிருந்தபடி, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 9300 என்ற உச்சநிலையை நோக்கி உயர்வதைப் பார்க்கலாம். பேங்க் நிஃப்டியின் போக்கு சற்று அமைதியாகவே இருப்பதால் எந்தப்பக்கமும் அது பிரேக் அவுட் ஆக வாய்ப்புள்ளது. 500 முதல் 1000 புள்ளிகள் வரை நகரும் சாத்தியங்கள் உள்ளன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மொயில் (MOIL)  

தற்போதைய விலை: ரூ.317.90


வாங்கலாம்

கடந்த சில மாதங்களாகவே இந்தப் பங்கின் விலை கரெக்‌ஷன்லேயே இருந்தது. அதன் கடைசி  பெரிய அட்வான்ஸிங் லெக்கில் இருந்து, 62 சதவிகித ரீடிரேஸ்மென்ட் நிலைக்கு இறங்கியது. இதன் சப்போர்ட் லெவலும் அதன் குறைந்தபட்ச நிலையில்தான் இருந்தது. ஆனால், கடந்த வெள்ளி அன்று ஏற்றத்துக்கான அறிகுறிகளை இந்தப் பங்கில்  பார்க்க முடிந்தது. நல்ல வால்யூம்களில் வர்த்தகமானதுடன், விலை ஏற்ற மொமென்டமும் நன்றாகவே இருந்தது. எனவே, அடுத்த 3-4 வாரங்களுக்கு இந்தப் பங்கின் விலை ஏற்றத்தின் போக்கில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் ரூ.360 - 370 வரை உயர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் (EVERESTIND)  

தற்போதைய விலை: ரூ.213.40


வாங்கலாம்

பொதுவாக, நீண்ட கால ஏற்றத்தின் போக்கில் இருக்கும் பங்குகளை சப்போர்ட் நிலைக்குக் கீழே இறங்கும்போது வாங்க வேண்டும். சிமென்ட் பொருள்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் சார்ட் பேட்டர்னில் இந்த நிலை உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தப் பங்கின் விலை கரெக்‌ஷனில் இருந்திருக்கிறது. தற்போது அந்தப் போக்கு முடிவுக்கு வந்திருப்பதோடு, நீண்ட காலத்துக்கு  ஏற்றமடைவதற்கான நல்ல பேட்டர்னும் உருவாகியிருக்கிறது. மேலும், 78.6 சதவிகித ரீடிரேஸ்மென்ட் சப்போர்ட் நிலையும் தெரிகிறது. கூடுதலாக, இந்தப் பங்கின் நகர்வுகள் டைவர்ஜென்ஸ் பேட்டர்னாக உருவாகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பங்கு விலை அடைந்த ஏற்றம், இந்தப் பங்கின் இறக்கம் முடிவுக்கு வந்து, ஏற்றத்துக்கான காலம் ஆரம்பமாவதை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். 3-4 வாரங்களில் ரூ.265 என்ற நிலையை அடையும். ரூ.200 ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கேஇசி இன்டர்நேஷனல் (KEC)

தற்போதைய விலை: ரூ.169.80

வாங்கலாம்


ஆல்டைம் புதிய உச்சம் அல்லது புதிய 52 வார உச்சத்துக்கான பிரேக் அவுட் நிலை என்பது, ஒரு பங்கு மேலும் ஏற்றமடைவதற்கான நல்ல வலுவான சிக்னல் ஆகும். அப்படிப்பட்ட பங்குகளில்  தாராளமாக முதலீடு செய்யலாம். கேஇசி பங்கில் அப்படிப்பட்ட பேட்டர்ன் உருவாகி உள்ளது. எனவே, தற்போதைய நிலையில், இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இந்தப் பங்கின் பேட்டர்ன் ஏற்றமடையும் முக்கோணமாக உருவாகி உள்ளது. இதன் பிரேக் அவுட் நிலை,  நல்ல மொமென்டத்துடன் சமீபத்திய உச்சவரம்பைக் கடந்திருப்பதோடு, மேலும் ஏற்றமடைவதற்கான வலுவான போக்கையும் உருவாக்கித் தந்திருக்கிறது.  தற்போதைய நிலையில், ரூ.152 ஸ்டாப்லாஸ் உடன் வாங்கலாம். சில வாரங்களில் பங்கின் விலை, ரூ.190 வரை உயர வாய்ப்புள்ளது.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.