Published:Updated:

ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?

ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?

‘‘உள்ளே வரலாமா?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.  ‘‘ உங்களைத் தானே எதிர்பார்த்தோம்’’ என்ற படி பேசத் தொடங்கினோம்.

ஷேர்லக்: நான்கு வாரங்களில் 9600 புள்ளிகள்..?

‘‘குறுகிய காலத்தில் நிஃப்டி 9600 புள்ளிகளை எட்டும் என்கிறார்களே!’’

‘‘சில இணையதளங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் இப்படி ஒரு நம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. சிலர், சந்தை இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்களில் 9600 புள்ளிகளை எட்டும் என்றும் சொல்லியிருக் கிறார்கள். தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள். இனிவரும் வாரங்களில் ஏற்றம் இருக்கும்; கூடவே இறக்கமும் இருக்கும். நீண்ட காலத்தில் இந்த இறக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதபடிக்கு இருக்கும் என்பதால், நல்ல பங்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துவிட்டு, நீண்ட காலத்துக்கு வைத்திருந்து, லாபம் பார்க்கலாம்’’ என்று எச்சரிக்கை கலந்த நம்பிக்கையை ஊட்டினார்.

‘‘ஜிஎஸ்டி கவுன்சில் முக்கியத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதே?’’ என அக்கறையுடன் கேட்டோம்.

‘‘சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்கள் மற்றும் மது பானங்களுக்கு 40% வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இவற்றின் மீது அதிகபட்சம் 15% கூடுதல் வரி (செஸ்) விதிக்கலாம் என வியாழக்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 12-வது கூட்டத்தில் முடிவானது. மேலும், புகையிலை, பான் மசாலா மீது அதிக கூடுதல் வரியும் விதிக்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது’’ என்று நம் கேள்விக்கு விளக்கம் தந்தார்.

‘‘அமெரிக்காவில் வட்டி விகிதம் 0.25% அதிகரிக்கப்பட்டிருக்கிறதே?’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டோம்.

‘‘இதனால் இந்திய பங்குச் சந்தைக்கு பெரிய பாதிப்பு இல்லை. இதனை வெளிப்படுத்தும் விதமாக வியாழக்கிழமை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 65.41-க்கு உயர்ந்தது. அன்றைய தினம் நிஃப்டி புதிய உச்சமான 9153.70-க்கு அதிகரித்தது. சந்தையின் ஏற்றத்துக்கு பிப்ரவரியில் இந்திய ஏற்றுமதி 17.48%  அதிகரித்ததும் ஒரு காரணம். நடப்பு நிதி ஆண்டில் இந்த மாதத்தில்தான் ஏற்றுமதி முதன்முறையாக முன்னேற்றம் கண்டிருக்கிறது’’ என்று புள்ளிவிவர மாகப் பேசினார் ஷேர்லக்.

‘‘பேங்க் நிஃப்டியின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’ என்றோம்.

‘‘பேங்க் நிஃப்டி, அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு இலக்க வளர்ச்சியை அடையும் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக ஹையர் பீட்டா பங்குகள் இருக்குமாம். பேங்க் நிஃப்டியில் ஹெச்டிஎஃப்சி பேங்க் தவிர, பிற 11 வங்கிகளின் பீட்டா 1.30-க்கு மேல் உள்ளன. அதாவது, சந்தையைக் காட்டிலும் இந்தப் பங்குகள் 30% கூடுதலாகச் செயலாற்ற வாய்ப்பிருக் கிறது. எனவே, எதிர்காலத்தில் வங்கிப் பங்குகள் நன்றாகச் செயல்பட்டால், அவை தரும் வருமானம் சந்தையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.  ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் போன்ற தனியார் வங்கிகள் பேங்க் நிஃப்டியின் வளர்ச்சிக்கு அதிகப் பங்கு வகிக்கும் என்று நம்பலாம். அதன்படி, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பேங்க் நிஃப்டி முறையே 17.9% மற்றும் 28.2 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்றார் நம்பிக்கையுடன்.

“கம்பெனிகள் டிவிடெண்ட் வழங்குவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே?” என்றோம் உற்சாகமாக.

“நிறுவனங்கள், தங்கள்  பங்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தைப் பிரித்து,  டிவிடெண்டாகக் கொடுப்பது வழக்கம். ஆனால், லாபம் குறைந்திருக்கும் நிலையிலும் நிறுவனங்கள் டிவிடெண்ட் கொடுப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் டிவிடெண்ட் வளர்ச்சி ஒவ்வொரு வருடமும் 11.9 சதவிகிதமாக அதிகரித்து வந்திருக்கிறது. ஆனால், நிகர லாபம் 0.6%  குறைந்து இருக்கிறது. 2016-ல் வழங்கப்பட்ட டிவிடெண்ட், இதுவரை இல்லாத அளவாக 40.5 சதவிகிதமாகப் பதிவாகி உள்ளது. 2011-ல் வழங்கப்பட்ட டிவிடெண்ட் தொகை ரூ.89,000 கோடி. இது ஒவ்வொரு வருடமும் 11.9 சதவிகித கூட்டு வளர்ச்சி அடைந்து, 2016-ல் ரூ.1.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. டிவிடெண்ட் கொடுக்கிற அத்தனை நிறுவனங்களும் நல்ல நிறுவனங்கள் அல்ல; டிவிடெண்ட் கொடுக்காத நிறுவனங்கள் அனைத்தும் கெட்ட நிறுவனங்களும் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து செயல்பட்டால் நல்லதுதான்’’ என்றார் தெளிவாக.
  
‘‘பிஎஸ்இ-யும், என்எஸ்இ-யும் 33 கம்பெனி களைக் கட்டுப்பாட்டு வர்த்தகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘பிஎஸ்இ தற்போது 25 நிறுவனங்களையும், என்எஸ்இ எட்டு நிறுவனங்களையும் கட்டுப்பாட்டு பங்கு வர்த்தகத்தில் கொண்டு வந்துள்ளன. அவற்றில் அகர்வால் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன், ஈசன் ரேரோல் (Easun Reyrollee), யூரோ மல்டிவிஷன், லைகோஸ் இன்டர்நெட் (Lycos Internet), சுரானா இண்டஸ்ட்ரீஸ், பால்ரெட் டெக்னாலஜீஸ் (Palred Technologies), சோமா டெக்ஸ்டைல் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (Soma Textiles and Industries) ஆகியவை அடக்கம். இந்த நிறுவனப் பங்குகளின் வர்த்தகத்தில் ஸ்பெகுலேஷன் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், டெலிவரி செய்யப்படும் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை தொகை ஆகியவை குறிப்பிட்ட வரம்பில் கட்டாயமாக்கப்படும்’’ என்றார் நம்மை உஷார்படுத்துகிற மாதிரி.

‘‘இப்போதெல்லாம் பட்டியலிடப்பட்ட முதல் நாளான்றே பங்குகளின் விலை உயர்வதும், பிற்பாடு குறைவதும் சகஜமாக நடக்கும் விஷயமாகிவிட்டது. இன்று பட்டியலிடப்பட்ட மியூசிக் பிராட்கேஸ்ட் பங்கிலும் அதேதான் நடந்திருக்கிறது’’ என்றவர், புறப்படும்முன் ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகளை சொன்னார்.

‘‘நீண்ட கால முதலீட்டுக்கு: மாருதி சுஸூகி, கோல்கேட், கர்நாடக பேங்க்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

IPO சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ்!

தொழில்:
கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பொருள்கள் விற்பனை 
திரட்டவிருக்கும் நிதி: ரூ.345 கோடி
விலைப்பட்டை: ரூ.440 - 460
விற்பனை நாள்கள்: மார்ச் 22 - 24

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism