Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

நிஃப்டி 9000 புள்ளிகள் என்ற நிலையைக் கடந்து ஏறுவதற்கு சில நேரங்களில் சற்று கஷ்டப்பட்டாலும், வாரத்தின் இறுதியில் புதிய உச்சத்தை  அடைந்தது. பிற குறியீடுகள் ஏற்கெனவே புதிய உச்சத்தை அடைந்திருந்த நிலையில், நிஃப்டியின் இந்தப் புதிய ஏற்றத்தினால் அவை மேலும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்தன.

வாரத்தின் தொடக்க நாளன்று  வர்த்தகத்தில் அதிக இடைவெளியுடன்   (கேப் அப்) வர்த்தகமாகத் தொடங்கிய போதிலும், சந்தை தன்னை சமாளித்துக் கொண்டு வாரம் முழுவதும் அந்த உச்சத்திலேயே தொடர்ந்து வர்த்தக மானது. சந்தை சமாளித்து அடைந்த உச்சத்தின் நிலையிலேயே தன்னைத்  தக்க வைத்துக்கொண்டதைப் பார்க்கும்போது, வரும் நாள்களில் சந்தை மேலும் உயர்ந்து வர்த்தகமாவதற்கான அறிகுறியாகவே இதைப் பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிப் பங்குகள் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிதாகச் செயல்படவில்லை. மேலும், நிஃப்டி அடைய இருந்த

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பெரிய உச்சத்தை இவை தடுத்திருக்கலாம். நிஃப்டியின் வளர்ச்சியில் முன்பு முக்கிய அங்கம் வகித்த ரிலையன்ஸ் நிறுவனப் பங்கும் சற்று மந்தமாகவே இருந்தது. பிற துறைகளும் வாரத்தின் இறுதியில்தான் ஏற்றமடைய ஆரம்பித்துள்ளன. எனவே, வரும் வாரத்தில் நல்ல ஏற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம். 

நிஃப்டி, தனது அடுத்த இலக்கு நிலையான 9335 புள்ளிகளை நோக்கியும், பேங்க் நிஃப்டி 21800 புள்ளிகளை நோக்கியும் நகரும் என்று எதிர்பார்த்து,  இந்த இலக்கு நிலைகளில் லாங் பொசிஷன் களை வைத்திருக்கலாம். புதிதாக லாங் பொசிஷன் எடுப்பவர்களும் இந்த இலக்குகளிலேயே எடுக்கலாம். லாங் பொசிஷன்கள் எடுக்க விருப்ப மில்லாதவர்கள், ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும்பட்சத்தில் கால் ஆப்ஷன்களை முயற்சிக்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எம்பி இண்டஸ்ட்ரீஸ் (EMMBI)

தற்போதைய விலை: ரூ.140.50

வாங்கலாம்

பாலி எத்திலின் மற்றும் பாலி புரொப்பலின்  பொருள்கள்  உற்பத்தியில் எம்பி இண்டஸ்ட்ரீஸ் சிறந்து விளங்குகிறது. இந்தப் பங்கின் வர்த்தகப் போக்கு கடந்த ஒரு வருடமாகவே வலுவான நிலையில்தான் தொடர்கிறது. ரூ.46 என்ற குறைந்தபட்ச நிலையிலிருந்து தற்போதைய ரூ.140 நிலைக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கு ஒரு கன்சாலிடேஷன் நிலையிலேயே இருந்தது. தற்போது அந்த நிலையிலிருந்து நகர்ந்து, ஏற்றத்தின் போக்கில் நகர்வதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில், இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.165 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.130 ஸ்டாப்லாஸாக  வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS)

தற்போதைய விலை: ரூ.530.60

வாங்கலாம்


இது சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பார்மா துறையைச் சார்ந்த நிறுவனப் பங்கு. இது அதிக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, ஏற்றமடைந்து வர்த்தகமாவதற்கும் தயாராக உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கில் ஏற்பட்ட சில  மாற்றங்களுக்குப் பிறகு, நன்கு ஏற்றமடைந்து சமீபத்தில் ரூ.600 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.  இந்தப் பங்கின் விலை இன்னும் ஏற்றமடைவதற்கான ஒரு போக்கு உருவாகி உள்ளதைப் பார்க்க முடிகிறது. பார்மா நிறுவனங்களைப் பொறுத்தவரை, லார்ஜ் கேப் பார்மா நிறுவனங்கள் தற்போது அதிக அழுத்தத்தில் இருப்ப தால், சந்தை முதலீட்டை பரவலாக்குவதற்கு தரமான மிட்கேப் பார்மா கம்பெனிகளைப் பரிசீலனை செய்ய வாய்ப்பிருக்கிறது. அந்தப் பட்டியலில் ஒன்றாக இந்தப் பங்கு இருக்கிறது. எனவே, தற்போதைய நிலையில் வாங்கலாம். ரூ.550 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.515 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆப்டெக் (APTECHT)

தற்போதைய விலை: ரூ.234.05

வாங்கலாம்


கல்வித்துறை சார்ந்த இந்த நிறுவனப் பங்கு, சந்தையின் பெரிய ஏற்றங்களைச் சந்திக்க ஆர்வமுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பங்கின் சமீபத்திய விலை நகர்வுகள், ஏற்றமடை வதற்கான வாய்ப்புகளுடன் வலுவான காளைப்போக்கிலேயே இருந்தன. மேலும், இந்தப் பங்கில் விலை இறக்கங் களைக் காட்டிலும் சில பக்கவாட்டு நகர்வுகளே இருந்ததால், காளையின் ஆதிக்கமே அதிகம் இருந்ததையும் பார்க்க முடிகிறது. தற்போது மீண்டும் ஒரு தொடர் பக்கவாட்டு நிலை இந்தப் பங்கின் விலை போக்கில் உருவாகி இருப்பதோடு, விரைவிலேயே அந்த நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி ஏற்றமடைய வாய்ப்பிருக்கிறது. எனவே, தற்போதைய நிலையில் வாங்கலாம். சில மாதங்களில் ரூ.260 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.220 ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism