இரவு வந்தும், வெக்கை குறையாத நிலையிலும் கோட் சூட்டுடன் காரில் வந்து இறங்கினார் ஷேர்லக். காற்றோட்டமாகப் பேசுவதற்கு அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றோம். காதி பவனிலிருந்து வாங்கிய பதநீரை ஜில்லென்று கொடுத்தோம். ‘சிப் பை சிப்’பாக அதனை ரசித்துக் குடித்தபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

‘‘வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை திடீரென இறக்கம் கண்டிருக்கிறதே?’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டோம்.

‘‘சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் குறைக்க, பிஎஸ் 3 ரக இன்ஜின் கொண்ட வாகன விற்பனைக்கு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மார்ச் 30-ம் தேதி வரை இந்தப் பிரிவின் கீழ் இந்தியாவில் சுமார் ஆறு லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் விற்கப்படாமல் தேங்கியிருந்தன. அதிகபட்சமாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் 2.9 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இருந்தன. இதேபோல், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அசோக் லேலாண்ட் நிறுவனங்களில் கார்கள் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளன. இதனால் இந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைய ஆரம்பித்துள்ளன. மார்ச் 31-ம் தேதிக்குள் ஏற்கெனவே தயாரித்த வாகனங்கள் அனைத்தையும் விற்க வேண்டும் என்பதால், கணிசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையால் குறுகிய காலத்தில், வாகன நிறுவனப் பங்குகளின் விலை இறக்கம் தொடர வாய்ப்பிருக்கிறது’’ என்று எச்சரித்தார்.

‘‘பேங்க் நிஃப்டி இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘பேங்க் நிஃப்டி வியாழக்கிழமை அன்று, இதுவரை இல்லாத அளவுக்கு 21,620.70 புள்ளிகளுக்கு அதிகரித்துள்ளது. எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் மஹிந்திரா, இண்டஸ்இந்த் பேங்க், யெஸ் பேங்க் போன்ற பங்குகளின் விலை அதிகரித்ததே இதற்குக் காரணம்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘புதிய நிதி ஆண்டில் இந்திய ஐபிஓ சந்தை எப்படி இருக்கும்?” என்று விசாரித்தோம்.

‘‘2017-18-ம் நிதியாண்டில் முந்தைய ஆண்டைப் போலவே, பல தரமான ஐபிஓ-கள் அணி வகுத்து நிற்கின்றன. குறிப்பாக, என்எஸ்இ, சிடிஎஸ்எல், எஸ்பிஐ லைஃப், ஹட்கோ போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ மூலம் கணிசமான தொகையைத் திரட்டவுள்ளன. என்எஸ்இ மட்டுமே ரூ.10,000 கோடிக்கு மேல் நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரைக்கும் 13 நிறுவனங்கள், ஐபிஓ மூலம் நிதி திரட்ட செபியிடம் அனுமதி பெற்றுள்ளன. மேலும், 10 நிறுவனங்கள் செபி அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. இதுவரைக்குமான கணக்குபடி, ஏறக்குறைய ரூ.26,000 கோடி திரட்டப்பட இருக்கிறது. புதிய நிதியாண்டில் ஐபிஓ மூலம் குறைந்தபட்சம் ரூ.35,000 கோடி திரட்டப்படலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்’’ என்று புள்ளிவிவரப் பட்டியலை வாசித்தார்.

‘‘மதர்சன் சுமி பங்கு விலை, ஏப்ரல் மாதத்தில் 10% வரை உயரும் என்று ஆரூடம் சொல்கிறார்களே’’ என்றோம்.

‘‘எஃப் அண்ட் ஓ பிரிவில் மதர்சன் சுமிக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததால், அதன் வர்த்தகப் போக்கு ஒரே நாளில் மாறியிருக்கிறது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இந்தப் பங்கு விலை ஏற்றமடையலாம் என்று அனலிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்தப் பங்கு, ஏப்ரலில் 8 - 10% வரை ஏற்றமடைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதன் எஃப் அண்ட் ஓ ஓப்பன் இன்ட்ரஸ்ட், ஒரே நாளில் 40.31% உயர்ந்தது. பங்கு விலையும் 2.4% உயர்ந்து, 52 வார அதிகபட்ச விலையை எட்டியிருக்கிறது. இந்தப் பங்கு ஏற்கெனவே டிசம்பரிலிருந்து இதுவரை 22% வருமானம் தந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிஃப்டி 15% வருமானம் தந்திருக்கிறது.’’

‘‘ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சில நிதி நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 6% வரை உயரக் காரணம் என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த செவ்வாய்கிழமை அன்று ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம் ஃபைனான்ஷியல், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் மற்றும் பாரத் ஃபைனான்ஸ் ஆகியவை திடீரென்று ஏற்றமடைய ஆரம்பித்தன. இதற்குக் காரணம், கோட்டக் மஹிந்திரா பேங்க் கையகப்படுத்துதல் நடவடிக்கையில் இறங்கப் போகிறது என்று பரவிய வதந்திதான். இந்த வதந்தியைத் தொடர்ந்து பல சிறிய வங்கிகளின் பங்கு விலை உயர்ந்தன. ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலையும் உயர்ந்தது. ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என உதய் கோட்டக் சொன்னவுடன் அது வதந்திதான் என்று ஊர்ஜிதமானது’’ என்று பதில் சொன்னார்.

‘‘டாடா சன்ஸ் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறதாமே’’ என நடுவில் குறுக்கிட்டுக் கேட்டோம்.

‘‘டாடா-மிஸ்திரி மோதல் கடந்த சில மாதங்களாக இந்தியத் தொழில் துறையில் சலனத்தை ஏற்படுத்தியதைப் பார்த்தோம். டாடா நிறுவனத்தின் இமேஜ் இதனால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் டிசிஎஸ் சந்திரசேகரன், டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றபின் குறிப்பிடத்தக்க மாற்றங் களையும், முடிவுகளையும் செயல்படுத்தி வருகிறார். தற்போது டாடா சன்ஸ், தனது குழும நிறுவனங் களில் ரூ.10,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. அதே சமயம், கார்ப்பரேட் பத்திரங்கள் மூலம் ரூ.7,000 கோடி நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் டாடா நிறுவனம் பழைய நிலைக்குத் திரும்புவதைக் காட்டுகிறது’’ என்றார்.

‘‘பிஎஸ்இ, ஏழு நிறுவனப் பங்குகளின் வர்த்தகத்தைத் தடை செய்துள்ளதே?’’ என்றோம்.

‘‘கடந்த இரண்டு காலாண்டு களாக விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றாததால், ஏழு நிறுவனப் பங்குகளின் வர்த்தகத்தை, வரும் ஏப்ரல் 18 முதல் தடை செய்துள்ளது. பிர்லா ஷ்லோகா எஜுடெக், டிவைன் மல்டி மீடியா (இந்தியா), பிரிசம் இன்ஃபர் மேட்டிக்ஸ், ஆர்இஐ சிக்ஸ் டென் ரீடெய்ல், ஷ்ரீஜல் இன்ஃபோ ஹப்ஸ், ஸ்கைபாக் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சுப் டெக்ஸ் (இந்தியா) ஆகியவைதான் அந்த ஏழு நிறுவனங்கள். மார்ச் 27 முதல் இந்த நிறுவனங் களின் புரமோட்டர் பங்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. ஏப்ரல் 12-க்குள் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால் தான், இந்தத் தடையிலிருந்து அவை நீக்கப்படும்’’ என்றார்.

‘‘சந்தையின் போக்கு எப்படியிருக்கிறது?’’ என்று கேட்டோம் அவர் புறப்படும் முன்பு.

‘‘அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் முதலீடு செய்துவருகிறார்கள். எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துகொண்டே வரலாம்’’ என்றபடி, வீட்டுக்குப் புறப்பட்டார்.

கமாடிட்டி பகுதியைப் படிக்க : http://bit.ly/2nreTfj