Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி சுமுகமாகவே இருந்தது. ஆனால், முக்கியமாக கணிசமான அளவில் பொசிஷன்கள் எடுக்கப்பட்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிந்தது. மேலும், ஏப்ரல் மாத நிஃப்டி ஃப்யூச்சர்ஸ், 2.31 கோடி பங்குகளுடன் மிக  உயர்ந்த அளவிலான ஓப்பன் இன்ட்ரஸ்ட்டுடன் இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும்போது, 2017 ஜனவரியில் 1.61 கோடி பங்குகள் மட்டுமே இதன் அதிகபட்ச ஓப்பன் இன்ட்ரஸ்ட்டாக இருந்துள்ளன. எனவே, பங்கு ஓப்பன் இன்ட்ரஸ்ட் மிக உயர்வாக இருப்பதால் ஏப்ரலில் சந்தை, ஏற்றத்துக்கான சென்டிமென்டில் இருப்பது தெளிவாகிறது.

எனவே, இப்போதிருக்கும் ஊசலாடும் நிலை இரண்டு வழிகளில் திரும்பலாம். காளையின் போக்கில் சந்தை தொடரும்பட்சத்தில், சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து புதிய உச்சங்களைத் தொடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை காளையின் போக்குத் தொடரவில்லை எனில், அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஓப்பன் இன்ட்ரஸ்ட்டும் ஊசலாடும் நிலைக்குச் செல்லும் என்பதோடு, பின்னர் சந்தையில் சில அழுத்தங்கள்  ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பேங்க் நிஃப்டி கடந்த வாரம் நன்றாகச் செயல் பட்டதுடன், புதிய உச்சத்துக்கும் நகர்ந்திருக்கிறது. இந்த நிலையில், தனியார் துறை வங்கிகள் தொடர்ந்து வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் மீண்டும் தீவிரமாக இறங்கினால், வரும் வாரங்களிலும் தொடர்ந்து ஏற்றமடைய வாய்ப்புள்ளது. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளும்கூட  தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



எஃப் அண்ட் ஓ பிரிவில் புதிதாகச் சேர்ந்துள்ள நிறுவனங்கள், மேலும் இந்தத் துறையின் மீதான கவனத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவை நிஃப்டியிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் நிஃப்டியில் 37% பங்கு வகிக்கின்றன. எனவே, இது பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தத் துறை சிறப்பாகவே உள்ளது.

ஆகவே, நிஃப்டி தொடர்ந்து ஏற்றமடைந்து புதிய உச்சங்களை அடைய வாய்ப்புள்ளது. வார இடைவெளியில் ஏற்படும் இறக்கங்களை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளலாம்.

நிஃப்டி 9100-க்கு அருகில் இருக்கும் போது மட்டும் ஒருவர் புல்பேக் பற்றி யோசிக்கலாம். பேங்க் நிஃப்டி எந்தவொரு நெகட்டிவான நிகழ்வுகளையும் சந்திக்காதபட்சத்தில் 21800-21900 வரை நகர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (GSFC)

தற்போதைய விலை: ரூ.131.00

வாங்கலாம்

சில செய்திகள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளால் ஃபெர்டிலைசர் பங்குகள் தற்போது ஏற்றமடைய ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பங்கு, அந்தப் பிரிவைச் சேர்ந்ததாக இருக்கிறது. இந்தப் பங்கின் விலையும் ஏற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மேலும், பிற மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்களில் அதிக அளவில் பங்கு மூலதனம் வைத்திருப்பதும் இதன் கூடுதல் ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது.

இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னும் தற்போது கவர்ச்சிகரமாக இருக்கிறது. இதில் உருவாகியுள்ள ரவுண்டிங் பேட்டர்ன் பிரேக்அவுட் ஆகி, ஏற்றமடையும் நிலையில் இருக்கிறது.

இந்த பேட்டர்ன் நகரக்கூடிய டார்கெட் ரூ.180 என்ற நிலையில் இருப்பதால், ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதன் காரணமாக, தற்போதைய விலையில் வாங்கலாம். நடுத்தர காலத்துக்கு இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்.   ஸ்டாப் லாஸ் ரூ.110-ஆக வைத்துக்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐடிடி சிமென்டேஷன் இந்தியா (ITDCEM)

தற்போதைய விலை: ரூ.171.30

வாங்கலாம்

சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கங்கை தூய்மையாக்கம் திட்டத்தோடு தொடர்புடைய பங்குகள் ஏற்றமடைய தொடங்கி இருக்கின்றன. இந்தத் திட்டத்தில் இந்தப் பங்கும் முக்கியமான இடம் வகிக்கிறது. இந்தப் பங்கின் வர்த்தகம் தற்போது நல்ல போக்கில் இருக்கிறது. மேலும், இந்தப் பங்கில் புதிய உச்சங்களை நோக்கிய நகர்வுகளுக்கான வாய்ப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது.

தற்போதை விலையில், இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை      ரூ.190-197-க்கு நகர வாய்ப்புள்ளது.      ரூ.160-க்குக் கீழ் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ட்ரென்ட் (TRENT)

தற்போதைய விலை: ரூ.266.70

வாங்கலாம்

சமீபத்தில் டிமார்ட் ஐபிஓ வெளியாகி பெரும் வெற்றி பெற்றதால், ரீடெய்ல் நிறுவனப் பங்குகள் கவனத்துக்குள்ளாகி உள்ளன. இந்தப் பங்கு ஏற்கெனவே, பட்டியல் ஆகியுள்ள ஒரு பழமையான ரீடெய்ல் நிறுவனமாகும். 2015-லிருந்து இந்தப் பங்கின் விலை நகர்வில் ஏற்றத்தின் போக்கு நன்றாகவே உள்ளது. இதில் அவ்வப்போது புல்பேக் நகர்வு களும் ஏற்பட்டிருக்கின்றன.

ஆனால், சமீபத்திய நகர்வு, ஏற்ற இறக்கம் இல்லாமல் தொடர்கிறது. தற்போது இந்த நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி ஏற்றமடைந்து, புதிய உச்சங்களை நோக்கி நகர்வதற்குத் தயாராக இருக்கிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.285-290 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ. 240க்குக் கீழ். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு