Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

நிஃப்டியின் போக்கில் எந்தத் தடங்கலும் இல்லாததால், கடந்த வாரத்தில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டதோடு 9300 என்ற நிலையை நெருங்கியது. பல வர்த்தக செஷன்களில் திடீர் ஏற்றங்களைக் கண்டு வந்த நிஃப்டி, கடந்த வாரத்தில் சற்று நிதானமானது. இதனால் அதன் நகர்வுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள்தான் இருந்தன. ஆனாலும், ஏற்றத்துக்கான போக்குதான் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ஏதேனும் இறக்கம் ஏற்பட்டாலும்கூட அது  முதலீடு செய்வதற்கான வாய்ப்புதான். அதனால்தான் கடந்த சில வாரங்களாகவே, ‘இன்ட்ரா-டே வர்த்தகத்தில், ஏற்படும் இறக்கங்களில் பங்குகளை வாங்குங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையின் தற்போதைய போக்கு இறங்குவதற்குப் பதிலாக,  ஏற்றமடைந்து புதிய உச்சங்களை நோக்கி நகர விரும்புவதாகவே தெரிகிறது. அதற்கு, தொடர்ச்சி யான முதலீடுகள் சந்தைக்குள் வருவதும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நெகட்டிவ் செய்திகள் வராமல் இருப்பதும் முக்கியம். இந்த நிலை  சந்தையில் தொடரும்வரை, தொடர்ந்து ஏற்றத்துக்கான வாய்ப்புகள் இருக்கும். எனவே, நிஃப்டி தொடர்ந்து மேல்நோக்கி நகர்ந்து, 9340-9350 என்ற நிலையை எட்டுவதைப் பார்க்கலாம்.

பேங்க் நிஃப்டியில் தற்போது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஏற்றத்துக்கான அம்சங்கள் எதுவும் இல்லையென்பதால், அதன் போக்கு நிஃப்டியின் நகர்வைப் பொறுத்தே இருக்கும். இடையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் இருந்தால் 21800-21900 என்கிற நிலை வரை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் (STRTECH)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


தற்போதைய விலை: ரூ.131.15

வாங்கலாம்

இந்த நிறுவனம், டெலிகாம் கேபிள் பிரிவில் முன்னணி உற்பத்தி நிறுவனமாக இருப்பதுடன், டெலிகாம், ரயில்வே உள்ளிட்ட பல துறை களுக்குத் தனது தயாரிப்புகளை சப்ளை செய்துவருகிறது. 

நிலையான வளர்ச்சியை நோக்கி இதன் செயல்பாடு தொடர்ந்து இருப்பதால்,  பங்கு விலையும் அதிகரித்து வருகிறது. இதன் சார்ட் பேட்டர்னில், முந்தைய ரெசிஸ்டன்ஸ்களைத் தாண்டி நகர்ந்து புதிய சப்போர்ட்டில் நிலைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் போக்கு இயல்பாகவே ஏற்றத்துக்கான அறிகுறி ஆகும்.

மேலும், இந்தப் பங்கு தற்போது 10 வருட உச்சத்தில் வர்த்தகமாகிறது என்பதால் தொடர்ந்து ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.  எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். ரூ.155 வரை ஏற்றமடைய வாய்ப்புண்டு.  ஸ்டாப் லாஸ் ரூ.120 ஆக வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எஸ்ஹெச் கெல்கர் அண்ட் கம்பெனி (SHK)

தற்போதய விலை: ரூ.306.95

வாங்கலாம்

இது சிறப்பு வகை ரசாயனம் தயாரிக்கும் நிறுவனம்.  அதுமட்டுமல்லாமல், இந்த பிசினஸில் மிகப் பழமையானதும், முன்னணி நிறுவனமும் கூட. பட்டியலான பிறகு, இந்தப் பங்கின் விலையில் ஆகஸ்ட் 16 வரை பெரிய மாற்றமில்லாமலேயே இருந்தது. அதன் பிறகு ஏற்றமடையத் தொடங்கி உச்சத்தை அடைந்தது. ஆனால், அந்த உச்ச நிலையிலேயே தொடர்ந்து மீண்டும் மாற்றமில்லாமல் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால், முதலீட்டாளர்கள் மெள்ள உள்ளே வந்து பலவீனமானவர் களிடமிருந்து பங்குகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது, இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் ஏற்றமடைவதற்கான அறிகுறியாகக் காணப்படுகிறது.

எனவே, இந்தப் பங்கு அடுத்தகட்ட நிலைக்கு நகரத் தயாராக உள்ளதால், தற்போதய விலையில் வாங்கலாம். குறுகிய  காலத்தில் இந்தப் பங்கு விலை ரூ.360 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.290 ஸ்டாப்லாஸ் ஆக வைத்துக்கொள்ளவும்.      

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிஎன்சி இன்ஃப்ராடெக் (PNCINFRA)

தற்போதைய விலை : ரூ.127.95

வாங்கலாம்

பிஎன்சி, நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானத்தில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தனது முழுமையான செயல்பாட்டுக்காகப் பெயர்பெற்று விளங்குவதால், அதன் பங்கு வர்த்தகத்திலும் கவரத்தக்க நகர்வுகளைக் கொடுத்துள்ளது. இதனால் பங்குச் சந்தையிலும், நல்ல நிறுவனப் பங்குகள் மத்தியில் இடம்பிடித்துள்ளது.

சமீப வாரங்களில் இந்தப் பங்கின் விலைப் போக்கில் ஏற்றத்துக்கான மொமென்டம் உருவாகி, அதன் ரெசிஸ்டன்ஸையும் தாண்டி புதிய உச்சத்தை அடையத் தயாராக இருப்பதாக தெரிகிறது. இந்த மொமென்டம் உறுதியாகத் தொடரும்பட்சத்தில் ரூ.150-160 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ஆக  ரூ.120 வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.