Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் பங்குச் சந்தைக் குறியீடுகள் உச்சத்தில் இருந்த நிலையில், சில திடீர் இறக்கங்களின் தாக்கத்துக்கு உள்ளாகின.  அதேசமயம், மார்ச் மாதத்திலிருந்தே எந்தவொரு நெகட்டிவ் செய்திகளாலும் சந்தை பெருமளவு இறக்கமடைவதற்கு அனுமதிக்கவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது.

இதனால் சந்தையின் ஏற்றம் ஒரு கட்டுக்குள் இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே சந்தை ஒரே வரம்புக்குள்தான் வர்த்தகமானது. இதனைப் பார்க்கும்போது, சந்தை தொடர்ந்து ஏற்றமடை வதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருப்ப தாகவே தெரிகிறது. பங்குகளின் மதிப்புகளும் உயர்ந்திருக்கின்றன. சந்தை, தொடர்ந்து ஏற்றத்தின் போக்கிலேயே இருப்பதற்கான  பாசிட்டிவ் செய்திகளுக்காகக் காத்திருக்கிறது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பொதுத்துறை வங்கிகள் தொடர்பான பாசிட்டிவ் செய்திகள் வந்ததால் பேங்க் நிஃப்டி குறியீடு சற்று ஏற்றமடைந்து இருக்கிறது. ஆனால், உண்மையில் தனியார் வங்கிகளின் நகர்வுகள்தான் இப்போது அவசியமாக உள்ளன. அவற்றில் முக்கியமான பங்குகள், தங்களின் நகர்வுகளில் முன்னேற்றம் காட்ட வேண்டி யிருக்கின்றன. எனவே, தற்போது வரை கலவையான போக்குதான் நீடிக்கிறது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!சந்தையின் தினசரி மற்றும் வார சார்ட் பேட்டர்ன்கள் உறுதியற்ற கேண்டில் பேட்டர்ன்களையே கொண்டுள்ளன. எனவே, நிறுவனங் களின்  சாதகமான காலாண்டு முடிவுகள் வரும் வரை, சந்தை தற்போதைய போக்கில்தான் தொடரும். இன்று வெளியான இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவு, சந்தைக்குச் சாதகமாக அமைய வில்லை. எனவே, சந்தையை மேல் நோக்கி நகர்த்த, வேறு சில முக்கிய பங்கு களின் நகர்வுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.  சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையை ஏமாற்றும் பட்சத்தில், சமீபத்தில் சந்தை அடைந்த ஏற்றம், எதிர் பார்க்கப்பட்ட இலக்கு, மொமென்டம் போன்றவை நிறைவேறாமலே போகக்கூடும். எனவே, வர்த்தகர்கள் லாங் பொசிஷன்களில் இருந்தால் 9120 என்ற ஸ்டாப்லாஸ் நிலையுடன் தொடரலாம். புதிதாக வாங்குபவர்கள், மேலும் சில முக்கியமான முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் (STRTECH)

தற்போதைய விலை: ரூ.148.85

வாங்கலாம்

சமீப வாரங்களில், மின்சாரம் மற்றும் டெலிகாம்  பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. இதனையடுத்து கேபிள் நிறுவனப் பங்குகளுக்கு  டிமாண்ட் ஏற்பட்டு, அந்தப்  பங்குகளின் நகர்விலும் முன்னேற்றத்தைப் பார்க்க முடிந்தது. இந்தத் துறையில் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் முன்னணி நிறுவனமாக உள்ளதால், கடந்த பல மாதங்களாகவே இந்தப் பங்கின் வர்த்தகத்தில் நிலையான ஏற்றம் இருந்து வருகிறது. 

கடந்த வாரத்தில், இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் புதிய முதலீடுகள் வருவதற்கான அறிகுறிகள் தெரிவதோடு, பிரேக் அவுட் நிலையும் உருவாகி இருக்கிறது. எனவே, இந்தப் பங்கு குறுகிய காலத்தில் ரூ.170  வரை உயர வாய்ப்புள்ளது. இந்தப் பங்கினை தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.135 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விம்டா லேப்ஸ் (VIMTALABS)

தற்போதைய விலை: ரூ.130.55

வாங்கலாம்

இந்த நிறுவனம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் பிசினஸில் ஈடுபட்டுள்ளது. இந்தத் துறையில் சக போட்டியாளர்கள் இருந்தாலும், இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த நிறுவனப் பங்கின் சார்ட்டிலும் புதிய ஏற்றத்துக்கான பிரேக் அவுட் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு, நிதி ஆண்டு நிதி நிலை முடிவுகள் மீதான எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கடந்த வருடத்தில் சோதனைக் கூடங்களைப் பரவலாக விரிவுபடுத்தி இருப்பதால்,  முடிவுகள் பாசிட்டிவாகவே வரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது இந்தப் பங்கு, முந்தைய ரெசிஸ்டன்ஸ் நிலையை உடைத்து ஏறியிருக்கும் நிலை காணப்படுகிறது.

குறுகிய கால முதலீட்டுக்கு இந்தப் பங்கை வாங்கலாம்.  இலக்கு விலை ரூ. 160-170. ரூ. 120 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கணேஷா எகோஸ்பியர் (GANECOS)

தற்போதைய விலை: ரூ.259.35

வாங்கலாம்

முன்பு கணேஷ் மல்டிப்ளாஸ்ட் என்ற பெயரில் நூல் உற்பத்தி நிறுவனமாக இருந்தது. தற்போது பல்வேறு பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இந்த நிறுவனம் எல்லாக் காலங்களிலும் நிலையாக செயல்பட்டு, சிறப்பான வருமானத்தையே தந்திருக்கிறது.

நடப்பாண்டில் இந்த நிறுவனப் பங்கு இதுவரை கொடுத்த வருமானம் 17.5 சதவிகிதமாக உள்ளது. சார்ட் பேட்டர்னிலும் புதிதாக வாங்குவோரைக் கவர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் இந்தப் பங்கு, குறுகிய காலத்தில் ரூ.280-285-க்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.235 உடன் தற்போதைய விலையில் வாங்கலாம். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு