Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் நிஃப்டி, அதன் கரெக்‌ஷன் நகர்விலேயே தொடர்ந்தது.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கரெக்டிவ் நகர்வுகள் சமீபத்திய ஏற்றத்தின் 78.6 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் நிலையில் தடுக்கப்பட்டுள்ளன என்பதுதான். அதேநேரம், 14 பிரீயட் ஆர்எஸ்ஐ நகர்வுகள், 30ல் ஓவர்-சோல்டு பகுதிக்கு இறங்கி, புல்லிஷ் டைவர்ஜன்ஸை உருவாக்கி இருக்கின்றன. மற்றொரு முக்கியமான விஷயம், ஏற்ற இறக்க சுழற்சிகளின் ஒப்பீட்டு நாட்கள். சமீபத்தில் ஏற்றமடைந்த 6 நாள்களும், அதைத் தொடர்ந்து இறக்கமடைந்த 11 நாள்களும், தற்போதைய இறக்கத்தை நடுத்தர கால ஏற்றத்துக்கான கரெக்‌ஷன் நிகழ்வாக இருப்பதையே தெளிவுபடுத்துகின்றன.

மொத்தத்தில், நிஃப்டி 9100 என்ற நிலையிலேயே விடாப்பிடியாக வலுவடைந்திருப்பது நல்ல ஏற்றத்துக்கான வலுவான அறிகுறியாகவே இருக்கிறது. கடந்த வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில், திடீர் ஏற்றத்தைத் தொடர்ந்து நடந்த இறக்கம், சமீபத்தில் உச்சத்தை அடைந்த ஓப்பன் இன்ட்ரஸ்ட் 16.7 சதவிகிதமாகக் குறைந்ததைப் போலவே இந்த பொசிஷன்களும் எளிதில் மாறக்கூடிய ஒன்றாக இருப்பதையே காட்டுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பொசிஷன்கள் மாறக்கூடிய சூழ்நிலையில் இருக்கும்போது, சந்தை ஏற்றமடைவதற்கான  வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. இதனுடன் ஓப்பன் இன்ட்ரஸ்ட் ஆப்ஷன்களும் சேர்ந்து,  நிஃப்டியை 9225-9230 நோக்கி நகர்த்தத் தயாராக உள்ளதைப் பார்க்க முடிகிறது. அதேசமயம், 9090 நிலையை உடைத்து இறங்கினால் 9048-9055 என்ற வலுவான சப்போர்ட் நிலைகளில் விற்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


தற்போதுள்ள சந்தையின் போக்கு, ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கு சில அதிரடி நிகழ்வுகள் அவசியமாக உள்ளன. இதுபோன்ற சமயங்களில் சில முக்கிய துறைகள் சார்ந்த செய்திகள் பாசிட்டிவாக இருப்பது அவசியமாக உள்ளன. ஐ.டி துறை சற்று ஆறுதலான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இனி பார்மா துறைகளின் சாதகமான செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

பொதுத் துறை வங்கிகள் ஒப்பீட்டளவில்  பார்க்கும்போது சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், தற்போது வங்கித்துறைதான் சந்தையின் பாசிட்டிவான நிலைக்குக் காரணமாக இருக்கிறது எனலாம்.  மேலும், வரும் வாரத்தில் எக்ஸ்பைரியுடன் சேர்ந்து சில முக்கிய (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை) நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் வர விருப்பதால், அவை சந்தையில் ஏற்ற இறக்கத்தைத் தொடர்ந்து உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சந்தையில் செயல்படுவது முக்கியம். ஆனால், ஸ்டாப் லாஸுடன் ரிஸ்க் எடுக்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எம்எம்டிசி (MMTC)

தற்போதைய விலை: ரூ. 67.10

வாங்கலாம்

எம்எம்டிசி பங்கின் தினசரி சார்ட் பேட்டர்ன், அதன் விலை சில வாரங்களாகவே பக்கவாட்டு வரம்பில் இருப்பதையும், நல்ல ஏற்றத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் ஏற்பட்ட இறக்கத்தின் 50 சதவிகித ரீஸ்ட்ரேஸ்மென்ட் நிலையில் ரெசிஸ்டன்ஸ் உருவாகி இருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும், இந்தப் பங்கு இன்ட்ராடே வர்த்தகங்களில் பிரேக் அவுட் நிலையிலேயே தொடர்ந்து திணறிக்கொண்டிருந்தது முடிந்து, நல்ல வால்யூம்களில் வர்த்தகமானதால் புதிய உச்சங்களை எட்டியிருக்கிறது. வார இடைவெளி யிலான வர்த்தக நகர்வுகளிலும் ரவுண்டிங் பேட்டர்னுடன் விலை நகர்வுகள் இருந்திருக்கின்றன. தற்போது இந்தப் பங்கு ரூ.60 என்ற நிலையை உடைத்து ஏறியிருப்பதோடு, ஏற்றத்துக்கான மொமென்டத்தையும் உருவாக்கி இருக்கிறது. அதிகபட்சமாக ரூ. 75 - 77 வரை உயர வாய்ப்புள்ளது.  எனவே, தற்போதைய விலையிலும், ரூ.64 வரை இறங்கும் வரையிலும் முதலீடு செய்யலாம்.  ஸ்டாப் லாஸ் ரூ.61 வைத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SCI)

தற்போதய விலை: ரூ.84.00

வாங்கலாம்

இதன் வார சார்ட் பேட்டர்னைப் பார்க்கும் போது பங்கு விலை நகர்வு, கடந்த 14 மாதங்களாகவே  அதிகமாகப் பக்கவாட்டிலேயே இருந்திருக்கிறது. கடந்த வாரம் இந்த நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி நீண்ட நீல நிற கேன்டில் பேட்டர்னாக மாறி, ஏற்றுத்துக்கான  போக்கை உருவாக்கியிருக்கிறது. இதற்கு ஆதரவாக வால்யூம்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், இந்தப் பங்கின் நகர்வு பிரேக் அவுட் நிலையைத் தாண்டி நிலையாக தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ஆர்எஸ்ஐ  மொமென்டம் 60-ஐ சப்போர்ட்டாகக் கொண்டு ஏற்றமடையத் தயாராக இருக்கிறது. இந்தப் பங்கு, ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான அனைத்துக் காரணிகளும் வலுவாக உள்ளன. எனவே, தற்போதய விலையிலும், ரூ.79.5 என்ற நிலைக்கு இறங்கும் வரையிலும் வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.96-99 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.76 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கும்மின்ஸ் இந்தியா (CUMMINSIND)

தற்போதைய விலை: ரூ.969.15

வாங்கலாம்

இந்தப் பங்கின் தினசரி வர்த்தக சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது, முந்தைய ரெசிஸ்டன்ஸ்கள் அனைத்தும் சப்போர்ட்களாக மாறியுள்ளது தெரிகிறது. மேலும், சமீபத்திய விலை நகர்வுகள், முந்தைய ரெசிஸ்டன்ஸிலிருந்து பிரேக் அவுட் ஆகி டபுள் பேட்டர்னை உருவாக்கின. பிரேக் அவுட் ஆனபிறகு லாப நோக்கில் விற்பனை நடந்ததால், முந்தைய ரெசிஸ்டன்ஸ் நிலைக்கு இறங்கி மீண்டும் ஏற்றமடைந்திருக்கிறது. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்தப் பங்கின் நகர்வு, பெரிய நீலநிற கேன்டில் பேட்டர்னாக  உருவாகி இருக்கிறது. இந்த பங்கின் போக்கு, காளையின் போக்குக்கு மாறியிருக்கிறது. ஆர்எஸ்ஐ  மொமென்டம் இண்டிகேட்டர் 60 என்ற நிலையைத் தாண்டி, தொடர்ந்து ஏற்றமடையும் பாசிட்டிவ் மொமென்டமாக உருவாகி இருக்கிறது.  எனவே தற்போதைய விலையிலும் ரூ.956க்கு இறங்கும் வரையிலும் வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.1011-1016 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.938க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.