நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை!

ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை!

சேனா சரவணன்

ந்தப் பங்கை இப்போது வாங்கினால் இவ்வளவு லாபம் கிடைக்குமென  யாராவது டிப்ஸ் கொடுத்தால், எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் வாங்காதீர்கள். யார் சொன்னாலும், அது எந்த அளவுக்குச் சாத்தியம் என பல்வேறு  விஷயங்களை ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுங்கள். குருட்டாம்போக்கில் கணிப்பது எல்லாம் பங்குச் சந்தையில் அடிப்படியே நடப்பதில்லை.

ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை!

பங்குச் சந்தையில் புதியவர்களை முதலீடு செய்ய வைக்க, “நீங்கள் கவலைப்படாதீர்கள்; நான் உங்களுக்கு ஸ்பெஷல் டிப்ஸ் தருகிறேன். அவற்றைப் பின்பற்றி முதலீடு செய்தாலே லாபத்தை அள்ளிவிடலாம்” என்பார்கள் சில பங்குச் சந்தை புரோக்கர்கள்.

இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஒரு பங்கில் முதலீடு செய்யச் சொல்வார்கள். சில தினங்களில் அந்தப் பங்கை விற்று வேறு பங்கில் முதலீடு செய்யச் சொல்வார்கள். இப்படி அடிக்கடி நடந்தால், அந்த புரோக்கர், அவருக்குக் கிடைக்கும் தரகுக் கட்டணத்துக்காக இப்படி அடிக்கடி வாங்கி - விற்று, விற்று - வாங்கி உங்கள் பணத்தில் விளையாடுகிறார் என்று அர்த்தம்.

பங்குச் சந்தையில் அண்மைக் காலத்தில் பல பிரச்னைகள் புரோக்கர்கள் மூலம்தான் நடந்திருக்கின்றன. அவர்களுக்குப் பங்குகளை விற்க,  வாங்க பவர் ஆஃப் அட்டர்னி கொடுப்பது என்றால் மிகவும் யோசித்துக் கொடுங்கள்.

மேலும், உங்கள் கணக்கில் பங்கு வாங்கப்பட்டாலோ, விற்பட்டாலோ உங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வரும்படி செய்துவிடுங்கள். இவற்றுக்குக் கொடுக்கும் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருப்பது அவசியம். அப்போதுதான் பங்குகள் விற்கப்பட்டால் அந்தத் தகவல் உடனடியாக உங்கள் கவனத்துக்கு வந்துசேரும். நீங்கள் உடனே உஷாராக முடியும்.