Published:Updated:

முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!

முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!

ஜெ.சரவணன்

முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!

ஜெ.சரவணன்

Published:Updated:
முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!

“வங்கிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளால் விரைவில் புதிய மாற்றங்கள் வரும். இப்போதிருக்கும் நிலை இன்னும் மேம்படும்” என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. உண்மைதான், வங்கித் துறை மிக அவசியமான சீர்திருத்தங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. வாராக் கடன் என்னும் பிரச்னையில் வங்கிகள் பெரும் சிக்கலில் இருக்கின்றன.

தற்போது வங்கிகளின் மொத்த வாராக் கடன் சுமார் ரூ.7 லட்சம் கோடி என்ற நிலையில் இருக்கிறது. வாராக் கடன்களால் வங்கிகளின் சொத்துகளின் தரம் குறைந்திருப்பதுடன், அவற்றின் நிகர லாப வளர்ச்சியும் குறைவாகவே இருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கித் துறையின் வளர்ச்சி மிகவும் அவசியம். அதை உணர்ந்து மத்திய அரசும் பல்வேறு சீர்திருத்தங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 

தற்போது வாராக் கடன்களைச் சமாளிப்பதற்கான சட்டம் ஒன்றை அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது.  மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!

இந்தச் சட்டம், வங்கிகளின் வாராக் கடனைச் சீரமைக்க ரிசர்வ் வங்கிக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டமாக விளங்குகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், கடன் உள்ள திவாலாகி மூடப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது.

இதில் உள்ள 35 ஏபி பிரிவின் மூலம் வாராக் கடன் சார்ந்த சொத்துகளை விற்பதற்கான அதிகாரத்தை, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்க முடியும். இந்த நடவடிக்கைகளை எடுக்க தேவையான குழுக்களை அமைப்பது, வங்கிகள் மற்றும் தொழில் துறையினருக்கான ஆலோசனைகளை அளிப்பதற்கான குழுக்களை வழங்குவது ஆகியவையும் இதில் அடங்கும்.

மேலும், வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருக்கும் ‘வில்ஃபுல் டிஃபால்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இதில் வழிவகை  செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒருபக்கம், இந்தச் சட்டம் வங்கிகளுக்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் வங்கிகள் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.

கடன் வழங்கிய அதிகாரிகளுக்கு இதனால் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சட்டத்தினால் இனி வங்கிகள் வழங்கும் கடன்களில் கெடுபிடிகள் அதிகரிக்கலாம்.

முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!இந்த நிலையில், வங்கிகளின் பங்குகளை வாங்கலாமா, வங்கிப் பங்குகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

‘‘வாராக் கடன் பிரச்னைக்கு இந்தப் புதிய அவசரச் சட்டம் தீர்வாக அமையும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி எப்படி அந்தச் சட்டம் தன்னுடைய நோக்கத்தை அடையும் என்பது அரசுக்கே தெரியாது. ‘வாராக் கடனை, இந்தச் சட்டம் அந்த அளவுக்கு மீட்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்று மத்திய வருவாய்த் துறைச் செயலர் அசோக் லவாசாவே கூறியிருக்கிறார். இந்த நிலைமையில்தான் இருக்கிறது, இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தினால் என்ன நிகழும் என்பது அதைக் கொண்டுவந்த மத்திய அரசுக்கே தெரியவில்லை. நமக்கு எப்படித் தெரியும்?

ஆனால், இதுபோன்ற சட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை ஒரு நம்பிக்கையைக் கொடுக்காமல் இல்லை. வங்கிகள் இந்த நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனவோ இல்லையோ, முதலீட்டாளர்கள் தீவிரமாகப் பார்க்கிறார்கள்.

 வங்கிப் பங்குகளைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் ஏற்கெனவே பாசிட்டிவாகத்தான் இருக்கிறது. தற்போதைய ட்ரெண்டும் வங்கிப் பங்குகளுக்குச் சாதகமாகவே இருக்கிறது.  

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப்பிறகு வங்கிப் பங்குகள் உத்வேகத்துடன் இருந்தன. ஆனால், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு பண மதிப்பு நீக்கம் காரணமாக வங்கிகள் அழுத்தத்துக்குள்ளாகின. அது, அவற்றின் பங்கு விலையிலும் எதிரொலித்தது. ஆனால், புது ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்த நிலை மாறியது. சந்தையின் செயல்பாடும் ஒட்டுமொத்தமாக மாறியது இதற்கொரு காரணம். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சந்தை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. சென்செக்ஸ், கடந்த ஆறு மாதங்களில் 7.10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நிஃப்டி 7.7% உயர்ந்துள்ளது.

முதலீட்டுக்கேற்ற வங்கிப் பங்குகள்!

வங்கிப் பங்குகளில் தனியார் வங்கிகளைக் காட்டிலும், பொதுத்துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க், யூனியன் பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐடிபிஐ பேங்க் மற்றும் சிண்டிகேட் பேங்க் ஆகிய 11 பொதுத்துறை வங்கிப் பங்குகள் பேங்க் நிஃப்டி குறியீட்டில் உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பேங்க் நிஃப்டி 6.6 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. சில வர்த்தக நாள்களில் அவை 3% முதல் 9% அளவுக்குக்குக்கூட உயர்ந்து வர்த்தகமாகி இருக்கின்றன.

தற்போது டாப் 5 இடங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, அவை வர்த்தகமாகும் மதிப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை. நன்றாகவே உள்ளன. சில வங்கிகளில் இன்னும் ஒரு காலாண்டு வரை அவற்றின் செயல்பாடு நன்றாக இருக்கும். யூனியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் பேங்க் போன்றவை இரண்டு காலாண்டுகளுக்குப் பிறகு மீண்டு வரலாம். இந்தப் பங்குகளைக் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு வைத்திருந்தால்தான் அதன் பலனை முழுமையாக அடைய முடியும். எஸ்பிஐ வங்கியைப் பொறுத்தவரை, அது ஆரோக்கியமான மாற்றத்துக்காகக் (Synergy) காத்திருக்கிறது. அதற்கு சிறிது காலம் ஆகலாம்.

தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, சிட்டி யூனியன் பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், டிசிபி பேங்க் போன்றவற்றின் தற்போதைய பங்கு மதிப்பு உச்சத்தில் இருக்கிறது. எனவே, இந்த விலையில் வாங்கும்போது கொஞ்சம் யோசித்துத்தான் வாங்க வேண்டும். விலை இறங்கும்பட்சத்தில் முதலீடு செய்யலாம்” என்றார்.

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பல வங்கிகள் டிஜிட்டலுக்கு மாற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால், அவற்றின் செலவு அதிகரிக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால், அவற்றின் நிகர லாபத்தில் குறைவு ஏற்பட்டு, பங்கின் விலை இறங்கக் கூடும். அது போன்ற வங்கிகளை அடையாளம் கண்டு முதலீட்டுக்குத் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் வங்கித் துறையைப் பொறுத்தவரை, எந்தவொரு சீர்திருத்த நடவடிக்கையாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் மட்டுமே அதற்கான முழுப் பலனை அடைய முடியும். அந்த மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே வங்கித் துறையில் நிச்சயம் முன்னேற்றம் இருக்கும்.