
இண்டெக்ஸ்
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து புதிய உச்சத்தைக் கண்டுவருகிறது. வெள்ளிக்கிழமை அன்றுகூட அதனைக் காண முடிந்தது. குறியீடுகளின் வார கேண்டில் சார்ட்டுகள், சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதையே குறிக்கிறது.
பங்குகளின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று பல முதலீட்டாளர்கள் இரு வேறு மனநிலைகளில் காணப்பட்டார்கள். பங்குகளை விற்றுவிட்டு வெளியேற வேண்டிய தற்கான வலுவான காரணங்கள் இல்லை. இருந்தாலும், பங்கு வர்த்தகர்கள் இடையே குழப்பமான நிலை காணப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போதுள்ள லாங் பொசிஷன்களை விட்டு வெளியேறி, புது லாங் பொசிஷன் களை வர்த்தகர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இதனால், சந்தை மேலும் இறங்குவது தடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டர்ன் மாற்றத்துக்கு உள்ளாகும் வரை, சந்தை பெரிய மாற்றத்துக்கு உள்ளாகாது.
கடந்த வாரத்தில் பேங்க் பேட்டர்ன் நன்றாகச் செயல்பட்டுள்ளது. 23000 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்தை மீண்டும் எட்டி இருக்கிறது. ஆனால்,அதனைத் தாண்டவில்லை. ஐடி இண்டெக்ஸ் ஏற்றம் காண முயற்சி செய்திருக்கிறது. நிஃப்டியின் உயர்வைப் பொறுத்து, இதன் ஏற்றமும் இருக்கும்.
சந்தையில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். இதனை நீண்ட கால முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை. அந்த வகையில் லாங் பொசிஷன்களைத் தொடரவும். வாரத்தின் இடையில் ஏதாவது இறக்கம் வந்தால், அதனை முதலீட்டுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, பங்குகளை வாங்கவும். நிஃப்டி ஃப்யூச்சர் அடுத்த வார இலக்கு சுமார் 9520 புள்ளிகளாக இருக்கும்.

எண்டூரன்ஸ் டெக்னாலஜிஸ் (ENDURANCE TECH )
பங்கின் விலை 810.80
வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கை வாங்கலாம் என்று ஏற்கனவே ஒரு முறை பரிந்துரைத்திருந்தோம்.
நாம் சொன்னது போலவே நன்றாக ஏற்றமடைந்து வந்தது. அதற்குப்பிறகு இந்தப் பங்கில் கரெக்ஷன் ஏற்பட்டு, தற்போது அது முடிவுக்கு வந்து, மீண்டும் ஏற்றமடையக் காத்திருப்பதாகத் தெரிகிறது. இதன் சார்ட் பேட்டர்னிலும் மீண்டும் ஒரு நல்ல ஏற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கரெக்ஷன் ஏற்பட்ட மூன்று வாரங்களில்கூட இந்தப் பங்கின் விலை பெரிதாக இறங்கவில்லை. இப்போது அந்த இறக்கமானது ஏற்றமடையும் போலிங்கர் பாண்டாக உருவாகி, இறக்கத்துக்கு முடிவு கட்டியிருக்கிறது.
எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். இந்தப் பங்கு ரூ. 840 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.800க்குக் கீழே வைத்து கொள்ளவும்

மன்பசான்ட் புருவரீஸ் (Manpasand Beverages)
விலை 737.40
வாங்கலாம்
தற்போது, குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. புருவரீஸ் சந்தையில் மன்பசான்ட் நிறுவனத்தின் பங்களிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் விற்பனை ஏற்றம் தொடரும் நிலை காணப்படுகிறது.
இது பங்கின் விலையிலும் எதிரொலித்துள்ளது. பங்கின் சார்ட் பாசிட்டிவ் போக்கைக் காட்டுகிறது. பங்கின் விலை பிரேக் அவுட் ஆகி இருப்பதோடு, நல்ல மொமென்ட்டமும் கடந்த வாரம் காணப்பட்டது.
தற்போதைய விலையில், முதலீடு செய்யலாம். பங்கின் விலை ரூ.7,650-க்கு அதிகரிக்கக் கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.720-க்குக் கீழே வைத்துக் கொள்ளவும்.

ஸ்வராஜ் இன்ஜின் (SWARAJ ENGINE)
விலை ரூ.1,804.80
வாங்கலாம்
விலை அதிகரிப்பால் கடந்த வாரத்தில் டிராக்டர்கள் விற்பனை கூடியது. இதனால், டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்தது. ஸ்வராஜ் என்ஜின் நிறுவனம், டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு என்ஜின்களைத் தயாரித்து அளிக்கிறது.
கடந்த வாரத்தில் பங்கின் விலை வலிமையாக ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து புதிய இலக்கு விலை ரூ.2,050-ஆக இருக்கும்.
தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.1,750-க்கு கீழே வைத்துக் கொள்ளவும்.
தொகுப்பு: ஜெ.சரவணன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.